Advertisment

தமிழக தேர்தல் 2021 : உங்களது வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது எப்படி?

TamilNadu Election 2021 : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உங்கள் வாங்காளர் பட்டியலில் உங்களர் பெயரை சரிபார்ப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வோம்.

author-image
WebDesk
New Update
தமிழக தேர்தல் 2021 : உங்களது வாக்காளர் அடையாள அட்டையை சரிபார்ப்பது எப்படி?

How To Check Voter List : தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையமும், வாக்காளர் பட்டியல், தேர்தல் அலுவலகங்களை தயார் படுத்துதல், வாக்காளர் பட்டியல் வெளியீடு என தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் அதேவேளையில், மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.

Advertisment

இதன் காரணமாக அந்தந்த மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருவர் வாக்காளராக பதிவு செய்திருந்தாலும், அல்லது ஒரு நபர் புதிய இடத்திற்கு தனது வாக்காளர் பதிவை மாற்றியிருந்தாலும், உள்ளூர் வாக்காளர் பட்டியலில் அவரின் பெயரை கண்டறிவது கடினம். இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை இருக்கிறதா என்பதை எவ்வாறு சரிபார்க்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்

முதலில் தேசிய வாக்காளர்களின் சேவை போர்ட்டலைப் பார்வையிடவும்: https://www.nvsp.in அல்லது https://electoralsearch.in/ தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலின் வாக்காளர் தேடல் (Search) பக்கத்திற்கு (என்விஎஸ்பி) உள்ளே நுழைய வேண்டும்.

உங்களிடம் வாக்காளர் அட்டை (ID) இருந்தால் உங்கள் அடையாள எண்ணை வைத்து தேடலாம். அல்லது உங்களிடம் EPIC எண் இருந்தால், அந்த எண்ணை உள்ளீடு செய்து தேடலாம். நீங்கள் EPIC எண்ணைச் சேர்த்த பிறகு, மாநிலத்தின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடல் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து உங்கள் விவரங்கள் பக்கத்தின் கீழே தோன்றும்.

உங்களுக்கு EPIC எண் நினைவில் இல்லை என்றால், விவரங்கள் மூலம் தேடலைக் கிளிக் செய்து தேடலாம். முழுவிவர தேடலில் (search by details) கிளிக் செய்து கீழ் தோன்றும் படிவத்தில் உங்களது பெயர், வயது, பாலினம், மாவட்டம், சட்டமன்றத் தொகுதி போன்ற விவரங்களை உள்ளிடவும் சர்ச் (Search)விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அதனைத் தொடர்ந்து, உங்கள் பெயர் தோன்றும்போது விவரங்களைக் காண (see details) என்பதை கிளிக் செய்யவேண்டும்.

புகைப்பட வாக்காளர் அட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்வது எப்படி:

நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன், உங்கள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் ஐடி ஆதாரத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதை எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.

உங்கள் மாநிலத்தின் தேர்தல் ஆணையத்தின் வலைப்பக்கத்திற்குச் செல்லவும் அதில் (Electoral Roll) என்ற விருப்பத்தில் கிளிக்செய்து வாக்காளர் அடையாள அட்டையில் உள்ளபடி உங்களது பெயரை உள்ளீடு செய்து மற்ற விவரங்களை நிரப்பவும். அதனைத் தொடர்ந்து உங்கள் பெயர் தோன்றும். அதில் பார்வை விவரங்களை (view details) கிளிக் செய்தால், பின்னர் உங்கள் வாக்காளர் சீட்டு திரையில் காண்பிக்கப்படும். அதன்பிறகு  நீங்கள் ஒரு அச்சுப்பொறியை (Print Out) எடுத்துக்கொள்ளலாம்.

வாக்காளர் அடையாள பெற தேவையான தேவையான ஆவணங்கள்:

பாஸ்போர்ட் (Passport) ஓட்டுனர் உரிமம் (Driving License) ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படங்களுடன் கூடிய அடையாள அட்டைகள். / வங்கி / தபால் அலுவலகம் வழங்கிய புகைப்படங்களுடன் கூடிய பாஸ்புக்குகள், பான் அட்டை, ஸ்மார்ட் கார்டு, வேலை அட்டை தொழிலாளர் அமைச்சின் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம். எம்.பி.க்கள் / எம்.எல்.ஏக்கள் / எம்.எல்.சி.க்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் மற்றும் ஆதார் அட்டை

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamilnadu Election 2021 Voter List
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment