நம்புங்க பாஸ்..! பெண் விடுதலைக்கான கருவியை அதிமுக கொடுக்கிறது!

Tamilnadu Assembly Election : தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் பிரச்சாரம் மேற்கொள்ளும் சில அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள்

Tamilnadu Assembly Election Political Leaders Campaign : தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள பிரச்சாரத்தில் பகிர்ந்த தகவல்கள் பற்றிய சிறு குறிப்பு.

தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதும் அதற்கான தேர்தல் பிரச்சாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதும் நங்கள் அனைவரும் அறிந்ததே. இந்த பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களை கவரும் வகையில் புதுவிதமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  அதிலும் முன்னணி கட்சிகளாக திமுக, அதிமுக, கட்சிகளின் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் வித்தியானமான முறையில் இருப்பது தமிழக அரசிலுக்கே புதிதான என்று தான்.

இதில் நேற்று சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் தோசை சுட்டதும், மேட்டுப்பாளையம் திமுக வேட்பாளர் மக்களுடன், சினிமா பாடலுக்கு ஆட்டம் போட்டதும், சோழிங்கநல்லூர் அதிமுக வேட்பாளர், மான்கொம்பு, மற்றும் சிலம்பம் சண்டையிட்டதும், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் வரவேற்பு குழுவினருடன் தப்படித்து வாக்கு செகரித்ததும் வேட்பாளர்களின் பிரச்சார யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாமக அதிமுகவின் தேர்தல் அறிக்கைகளை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வருகிறது., குடும்ப பெண்களுக்கு வாஷிங்மிஷின் தருவதாக அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி பிரச்சாரம் செய்து வரும் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், இரு கட்சிகளும் குடும்ப பெண்களை குறி வைத்து ஊக்க தொகை அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் வாஷிங்மிஷின் அறிக்கை பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதனை வைத்து பல்வேறு மீம்ஸ்கள் வந்துகொண்டிருக்கிறது.  மேலும் அதிமுக  தருவதாக கூறிய வாஷிங்மிஷின் பெண்களுக்கான விடுதலைக கருவி என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது திமுக செய்த செயல். தேர்தலில் வெற்றி கிடைக்கும் முன்னரே அறிவாலயத்தில்  ஸ்டாலின் முதல்வர் பதவியேற்ற நாட்களை எண்ணும் கடிகாரம் வைத்தது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியது.  நம்பிக்கை இருக்கலாம்… ஆனால் கண்மூடித்தனமான நம்பிக்கை ஆபத்தில் முடியும் என்று மக்கள் முனுமுனுக்கத்தான் செய்கிறார்கள். இதிலும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர்கள் செய்யும் பிரச்சாரத்தில், வெற்றியை வீட்டில் வைத்துக்கொண்டு வெளியில் பிரச்சாரம் செய்வது போல், பேசி வருகின்றனர்.

அதிலும் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இதற்கொல்லாம் ஒரு படி மேலே சென்று, ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற அடுத்த 5-வது நிமிடத்தில் நீங்கள் மணல் எடுப்பதற்கு ஆற்றிற்கு செல்லலாம் எந்த அதிகாரியும் உங்களை தடக்க மாட்டார்கள் என்ற கூறினார். அவரின் இந்த பேச்சு நடுநிலையாளர்களுக்கும் எதிர்கட்சினருக்கும் அதிருப்தி ஏற்படுத்தியது. இதில் வெற்றி பெறும் முன்பே மணல்கொள்ளைக்கு அஸ்திவாரம் போடுவதாக மக்கள் பரலவாக பேசி வருகின்றனர்.

இது இப்படி இருக்க இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், மக்களை பார்த்து இந்த கூட்டம் திமுக வெற்றிக்கு பிறகு கொண்டாடப்படும் வெற்றி விழா கூட்டம் போல் உள்ளது என்று மீண்டும் அதீத நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும் கருத்து கணிப்பு பற்றிகூறிய ஸ்டாலின், திமுக 175, 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறுகிறார்கள் ஆனால் நான் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். ஆனால் இந்த கூட்டத்தை பார்த்தால் 234 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார்.

அடுத்து தூத்துக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்,  இந்த முறை திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைப்பது உறுதி திமுகவை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.  இந்த பேச்சை கேட்டுவிட்டு அப்படியே போய்விடக்கூடாது பிரச்சாரம் செய்யனும் என்று மக்களிடம் கூறுகிறார். திமுக ஆட்சியமைப்பது உறுதி என்று உறுதியா நம்பும் திமுகவினர் மக்களை பிரச்சாரத்திற்கு அழைப்பது ஏன் என்பது அவர்களுக்கே வெளிச்சம். மேலும் தான் செல்லும் இடம் எல்லாம் அம்மா அம்மா என்று பெண்களின் வாக்கை குறிவைத்து உதயநிதி பிரச்சாரம் செய்து வருகிறார்.

திமுகதான் இப்படி என்றால் 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க பெரிய போராட்டமே செய்து வரும் அதிமுக பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் திமுகவை பற்றி குறைகூறியே வருகிறார்கள். இதில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால் பிரச்சாரத்தில் இதுவரை தங்கள் ஆட்சியில் இல்லாதது போல திமுக ஆட்சியில் நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. அதனால் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் என்று கூறி வருகின்றனர். 

இன்று திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிச்சாமி,  அம்மாவின் அரசு மக்களுக்கு அனைத்து நல்ல திட்டங்களையும் செய்து வருகிறது என்று கூறியள்ளார்.  மேலும் தாங்கள் வெற்றி பெற்றால் என்னென்ன திட்டங்கள் கொண்டுவருவோம் என்று கூறிவரும் அவர் ஒரு பக்கம் திமுகவை குறை கூறி வருகிறார். இதில் பழனியை மையமாக வைத்து புதிய மாவட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் தைபூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வரும் நிலையில், அச்சுறுத்தல் காரணமாக தனி மனித இடைவெளிகள் அவசியம் என அரசு வலியுறுத்துகிறது. ஆனால் அரசியல் கட்சி தொண்டர்களும், தலைவர்களும் இந்த உத்தரவை மதிப்பதாக தெரியவில்லை. பொதுக்கூட்டம் போடும் அரசியல் தலைவர்கள் மக்கள் தனி மனித இடைவெளி கடைபிடிக்கிறார்களாக என்பதை கவனிப்பதே இல்லை. இந்த நிலை நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கு முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எப்படியும் காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கியுள்ள பாஜக வித்தியாசமான பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது. ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண்ணை எடுத்து வாட்ஸ்அப்பில் ஒரு குருப் உருவாக்கி அதன்மூலம் பிரச்சாரம் மேற்கொள்வதாக புதுச்சேரியில் புகார் எழுந்துள்ளது. இந்த புகார் குறித்த சைபர் கிரைம் விசாணை மேற்கொண்டு வரும் நிலையில், அரசியல் கட்சிக்கு எப்படி வாக்காளர்களின் செல்போன் எண்கள் கிடைத்தன? அந்த செல்போன் எண்களை அரசியல் கட்சி எப்படி பயன்படுத்தலாம்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுவரை அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி, இந்த தேர்தலில் மக்கள நீதி மய்யம் தலைமையிலான கூட்டணிக்கு தாவியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறவேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அக்கட்சியின் தலைவர் சரத்குமார், மக்கள் மனது வைத்தால் போதும் எங்கள் கூட்டணி வெற்றியை எழுதி வைத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.  இந்த கூட்டணியில் 40 தொகுதிகளில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்த கூட்டணி குறித்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கூறுகையில், எங்கள் கூட்டணி வெற்றி பெற கடுமையாக உழைத்து வருகிறோம். கமல்ஹாசன் வெளியூர்கார்ர் என்ற பிரச்சாரம், வேடிக்கையானர். எங்களுக்கு அரசியல் தொழில் அல்ல. கமல்ஹாசன் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக கூட்டணியில் தேர்தல் முடிந்த்தும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடலூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் எம்பி கனிமொழி, புவனகிரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது அங்கு அவசரமாக ஆம்புலன்ஸ் வந்துள்ளது. இதனை பார்த்த கனிமொழி தொண்டர்களிடம் ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுங்கள். தொடர்ந்து ஆம்புலன்ஸ் செல்வதற்கான வழியையும் ஒழுங்குப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து எந்த இடையூறுமின்றி ஆம்புலன்ஸ் சென்றது.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக அமமுக கூட்டணியில் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதில் இருந்தே தேமுதிகவின் விஜயபிரபாகரன் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.  சாதாரன நாட்களிலேயே பிரச்சாரத்தில் வெடிக்கும் விஜயபிரபாகரன் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசியலில் இருந்து ஒதுங்கியதால் கட்சி முழுவதும் பிரேமலதா எல்.கே.சுதீஷ் விஜயபிரபாகரன் கையில் சென்றுள்ளால் கட்சியின் முன்னணி தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சிக்கு சென்றுவிட்டனர்.  ஆனாலும் விஜய பிரபாகரனின் விமர்சனம் குறைந்த பாடில்லை.

இந்த தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு சீட் தருவதாக கூறினார். ஆனால் நான் தான் வேண்டாம் என்று கூறிவிட்டோன் என்று கூறியுள்ளார் நவரச நாயகன் கார்த்திக். மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சிக்கு தலைவராக இருக்கும் கார்த்திக் தற்போது அதிமுக கூட்டணியில் தொடர்கிறார்.  தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், முதல்வர் என்க்கு சீட் தருவதாக கூறினார் ஆனால் நான்தான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்றும், போட்டியிட விருப்பம் இல்லாததால் பிரச்சாரத்திற்கு மட்டும் வருவதாக கூறிள்ளார். மேலும் பிரச்சாரத்திற்கு செல்வதற்கு முன் என்னை மிரட்டுகிறார்கள். கம்புசுத்தி ரொம்பநாள் ஆச்சு. சுற்றி பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கோவில்பட்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஜெயலலிதா இயற்கையாக மரணமடைந்ததாகவும், சசிகலாவுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார். ஏற்கனவே துணைமுதல்வர் பன்னீர் செல்வம் இதே கருத்தை கூறியிருந்த நிலையில், தற்போது கடம்பூர் ராஜூம் கூறியிருப்பது,  இவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதையே காட்டுகிறது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்  வானதி சீனிவாசன் திவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், தொண்டர் ஒருவர் அவரிடம் செல்பி எடுக்க முயன்றார். ஆனால் அவரது கையில் இருந்த கீரை கட்டு தெந்தரவாக இருந்ததால், வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று கீரை கட்டுடை தான் வாங்கிக்கொண்டு செல்பி எடுத்து வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதே தொகுதியில் இவரை எதிர்த்து மக்கள் நீதி மய்யம கமல்ஹாசன் போட்டியிடுவது குறிப்பிடத்கதக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu election campaign political leaders campaign

Next Story
மு.க.அழகிரி எனது அண்ணன்; எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன்: கனிமொழி Exclusivedmk mp kanimozhi, kanimozhi mp, kanimozhi interview, kanimozhi exclusive interview, திமுக, கனிமொழி, கனிமொழி நேர்காணல், எனது அண்ணன் முக அழகிரி, அதிமுக, திமுக, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், kanimozhi says MK Alagiri will always remain my brother, mk stalin, dmk, tamil nadu assembly election, aiadmk, dmk vs aiadmk
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express