தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் மே 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதில் நாங்கள் தான் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றுவோம் என்று அதிமுகவும், கடந்த 2 தேர்தல்களில் தவறவிட்ட ஆட்சியை மீண்டும் பிடிப்போம் என்று திமுகவும் சூலுறைத்து வரும் நிலையில், தேர்தலுக்கு முன்னும் பின்னும் வெளியான கருத்துக்கணிப்புகள் இரு கட்சிகளுக்கும் சாதகமாவே அமைந்துள்ளது.
ஆனால் ஆட்சியை பிடிப்போம் என்ற அதீத நம்பிக்கையில் திமுகவினர் அடுத்தக்கட்ட வேலைகளில் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில், அதிமுக தரப்பில் முக்கிய தலைவர்களுகடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதனால் இந்த தேர்தல் முடிவுகள் மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் சமூகவலைதளங்களில் இரு கட்சிகளுக்கு ஆதரவாககும் எதிராகவும் பல கருத்துக்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், தேர்தல் முடிவுகள் என்னவாக இருக்கும், தேர்தல் முடிவுக்கு பிறகு இரு கட்சிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.
ஆனால் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருத்துக்கள் நிலவி வருவதால், அதிமுகவினர் சிறிது கலக்கத்தில் உள்ள நிலையில், முதல்வர் பழனிச்சாமி அதிமுக கண்டிப்பாக வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முதல்வர் பழனிச்சாமி மருத்துவர்களின் ஆலோசனைப்படி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.,
வீட்டில் ஓய்வில் இருந்தபடியே தனக்கு நெருக்கமானவரகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வரும் முதல்வரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதற்கான தனது சொந்த ஊரான தேனியில் இருந்து சென்னை வந்த அவர், தென் மாவட்டங்களில் அதிமுக வெற்றி குறித்து ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றை கையில் எடுத்து வந்துள்ளார். தொடர்ந்து முதல்வரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அவர், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து சில மணி நேரங்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்த ஆலோசனையில், முதல்வரிடம் இருந்த, தேர்தல் தினத்தன்று எடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கை, மிக முக்கிய தொகுதிகளில் வாக்குகள் யாருக்கு சென்றுள்ளது என்பது குறித்த 2 இரண்டு அறிக்கைகள் என மொத்தம் 3 விதமான அறிக்கைகளை வைத்து இந்த ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், தேர்தல் முடிவுகள் குறித்து இருவரும் அலசி ஆராய்ந்ததாக கூறப்படுகிறது.
அதிமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து முதல்வர் மட்டுமே நம்பிக்கை தெரிவித்து வரும் நிலையில், மற்ற அமைச்சர்களே மூத்த தலைவர்களோ யாரும் இது குறித்து எவ்வித கருத்தும் கூறவில்லை. ஆனால் முதல்வரின் முன்னிலையில், அவரது நம்பிக்கைக்கு எதிராக பேச கூடாது என்ற அடிப்படையில் முதல்வருக்கு சாதகமாக பேசி வருகின்றனர். அந்த வகையில், முதல்வருடன் நீ்ணட நேரம் ஆலோசைனையில் ஈடுபட்டிருந்த துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், இந்த தேர்தலில் அதிமுகவுக்கு கஷ்டமான முடிவுதான் கிடைக்கும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் தேர்தலுக்கு முன்பாக வன்னியர் இடஒதுக்கீடு, சசிகலாவை கட்சியில் சேர்க்காதது, அமமுக மற்றும், தேமுதிகவுடன் கூட்டணியை மிஸ் பண்ணியது செயல்களில் முதல்வர் பழனிச்சாமி மீது பன்னீர் செல்வத்திற்கு வருத்தம் இருப்பதாகவும், தேர்தலுக்கு முன்பே தான் சொன்ன எதையுமே எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. எந்த தைரியத்தில் முதல்வர் இவ்வளவு நம்பிக்கையில் இருக்கிறார் என்று தெரியவில்லை" என்று கூறி வருவதாக சொல்லப்படுகிறது.
தேர்தல் முடிவு வெளியாகும் முன்பே அதிமுகவில் முதல்வர் பழனிச்சாமி மீது அதிப்தி அலை எழுந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுக்கு பின் இந்த நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து மூத்த தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை தீவிர யோசனையில் உள்ளதாக தெரிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.