தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு மீண்டும் அரியணையில் அமரும் வாய்ப்பை பெற்றுள்ளது. இதில் வாக்குப்பதிவுக்கு முன்னும் பின்னும் வெளியான கருத்துக்கணிப்பு நிலவரங்கள் திமுகவிற்கு சாதகமாக இருந்த நிலையில், கருத்துக்கணிப்பு நிலவரங்களை உண்மையாக்கும் விதமாக திமுக தனி பெரும்பான்மையாக 133 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய திமுக தலைவர் ஸ்டாலின் மகனும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்றார். மேலும் தனது தாத்தா (முன்னாள் முதல்வர் கருணாநிதி) முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியில் தான் போட்டியிடுவதாக கேட்டு வாங்கிய உதயநிதி அதில் தனது தாத்தாவையே மிஞ்சும் அளவுக்கு வெற்றியை பெற்று அனைவரின் கவத்தையும் ஈர்ததுள்ளார்.
மேலும் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக சார்பில் பலர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதில் உயநிதியின் பிரச்சாரம் தொண்டர்கள் மத்தியில் வெகுவாக கவனம் ஈர்த்த்து. அதிலும் அவர் எய்ம்ஸ் மருத்தவமனை செங்கல்லூடன் பிரச்சாரம் செய்தது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது அரசியல் எண்டரியை வெற்றியுடன் தொடங்கிள்ள உதயநிதி முதல் முறையே அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று அவரைச்சார்ந்தவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கருத்துக்கணிப்பு நிலவரங்களை வைத்து கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று நம்பிய திமுக தலைவர் ஸ்டாலின், வாக்குப்பதிவு முடிந்த உடனே கொடைக்கானல் சுற்றாலா சென்று, அங்கேயே தனது ஆட்சியில் இடம்பெறும் அமைச்சர்கள் பட்டியலை தயார் செய்துள்ளார். ஸ்டாலின் மருமகன் சபரீசன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்த இந்த அமைச்சரவை பட்டியலில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இளம் மற்றும் புதுமுகங்களுக்கு அமைச்சவையில் வாய்ப்பு வழங்கப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த பட்டியலில் யார் யார் இடம்பெற்றுள்ளார்கள் என்பது இன்று வெளிவராத ரகசியமாக உள்ளது.
ஆனால் இந்த பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் பெயர் கண்டிப்பாக இடம்பெற்றுள்ளது என்றும், முதல் தேர்தலை சந்தித்த அவர் முதல்முறையாக அமைச்சர் பதவியும் வகிக்க வேண்டும் என்று அவரை சார்ந்தவர்கள் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் முதலில் தொண்டராக கட்சியில் இணைந்த ஸ்டாலின் பிறகு சட்டமன்ற உறுப்பினராகவும் சென்னை மேயராகவும் பதவி வகித்தார். மேயர் பதவியில் கிடைத்த அனுவத்தின் அடிப்படையில் அவருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதன்பிறகு செயல் தலைவராக மாறிய அவர் தற்போது முதல்வர் பதவியில் அமர உள்ளார்.
மு.க.ஸ்டாலின் இப்படி படிப்படியாக முன்னேறிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் முதல் படியிலிலேயே சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியும் பெறவுள்ளார். திமுகவின் இந்த முயற்சி உதயநிதி ஸ்டாலினை அடுத்த திமுக தலைவராக ஆவதற்கு பயிற்சி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏற்கனவெ திமக பொதுச்செயலாளர் துரைமுருகன், கலைஞருக்கு துணை நின்றேன், தற்போது தளபதிக்கு துணை நிற்கிறேன். எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை நிற்பேன் என்று கூறினார்.
அவரது வார்த்தை போல உதயநிதி ஸ்டாலின் தற்போது திமுகவின் அடுத்த தலைவராக உருவெடுத்து வருகிறார். இதில் அவர் அமைச்சர் பதவிக்கு தயாராக உள்ளார் என்றும், ஆனால் அதிக பணப்புழக்கம் உள்ள துறைகளான பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறைகளில் சர்ச்சைகள் வர வாய்ப்புள்ளது என்பதால் அந்த துறைகளை அவர் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது அவர் பள்ளிக்கல்வித்துறையை குறி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த துறையில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க ஏதுவாக இருக்கும் என்றும் கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த அமைச்சரவையில் இளம் மற்றும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து, உதயநிதி தனக்கு நெருக்கமான சில எம்எல்ஏக்களுக்கு சில துறைகளை பரிந்துறை செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் இன்று ஒரு சில நாட்களில் திமுக அமைச்சரவையில் இடமபெரும் அமைச்சர்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.