Tamil Nadu Election Result 2019: தமிழ்நாடு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37-ஐ திமுக அணி வாரிச் சுருட்டியது. அதிமுக.வுக்கு ஒரே ஒரு இடம் கிடைத்தது.
மக்களவை தேர்தல் முடிவு வாக்குகள்(மே.23) நேற்று எண்ணப்பட்டன. திமுக தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வந்தது. அதிமுக பெரும் சரிவை சந்தித்துள்ளது. தவிர, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் வெற்றி பெறவில்லை.
மேலும் படிக்க - Tamil Nadu Assembly By Election 2019 Results Live : ஆட்சியை தக்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தைப் பொறுத்தவரை 38 மக்களவைத் தொகுதிகளில் திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றது.
மேலும் படிக்க - நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் குறித்த துல்லியமான முழு விவரத்தை அறிய இங்கே க்ளிக் செய்யவும்
தமிழக மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் பற்றிய லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் இதோ,
Live Blog
2019 Election Results Tamil Nadu: Lok Sabha Election 2019 Results in Tamil Nadu - தமிழக மக்களவை தேர்தல் முடிவுகள் 2019 லைவ்
தமிழ்நாட்டில் திமுக போட்டியிட்ட 19 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நின்ற விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிகுமார், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், கொமதேக வேட்பாளர் சின்னராஜ், மதிமுக.வின் கணேசமூர்த்தி ஆகிய 4 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
எனவே மக்களவையில் திமுக.வின் அலுவல்பூர்வ எண்ணிக்கை 23 ஆகிறது. இதன் மூலமாக தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி ஆகிறது திமுக.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் 6,27,235 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிகாலை 1.10 மணிக்கு கன்னியாகுமரி கலெக்டரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரசாந்த் மு.வடநேரே தேர்தல் முடிவை அறிவித்தார். இங்கு போட்டியிட்ட பாஜக.வின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவினார்.
தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழக மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.
தமிழகத்தில் கட்சி வாரியாக பெற்ற இடங்கள் வருமாறு:
திமுக - 19, காங்கிரஸ் - 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2, இந்திய கம்யூனிஸ்ட் - 2, விசிக - 2, மதிமுக - 1, இ.யூமு.லீக் - 1, ஐ.ஜே.கே - 1, கொ.ம.தே.க - 1
அதிமுக - 1
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு நள்ளிரவில் முடிவு அறிவிக்கப்பட்டது.
திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசர் 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
#May23WithPT திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசர் 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி #ElectionsWithPT #ElectionResults2019 pic.twitter.com/m7UllRVh8a
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 23 May 2019
நாடாளுமன்றத் தேர்தல் - முன்னிலை நிலவரம்#Results2019 | #Verdict2019 | #ElectionResultsWithNews7Tamil | #News7Tamil pic.twitter.com/HHMjmxop64
— News7 Tamil (@news7tamil) 23 May 2019
வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
மொத்தம் பதிவான 9,44,205 வாக்குகளில் வடசென்னை தி.மு.க வேட்பாளர் தற்போது வரை அதிகபட்சமாக 5,60,464 வாக்குகளை பெற்றுள்ளார் இதன் மூலம் அவரை எதிர்த்து போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி :
சுற்று: 14
எண்ணப்பட்ட மொத்த வாக்கு - 7,98,568
ஏ கே மூர்த்தி பாமக : 2,31,819
ஜெகத்ரட்சகன் திமுக : 4,55,621
பார்த்திபன் அமமுக: 46,079
ராஜேந்திரன் மநீம : 17,302
பாவேந்தன் நாம் தமிழர்: 19,553
நோட்டா : 8,410
முன்னிலை : திமுக
வாக்கு வித்தியாசம்: 2,23,802
தலை வணக்கம் தமிழகமே!
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்!
— M.K.Stalin (@mkstalin) 23 May 2019
தமிழக மக்களவை தேர்தலில் திமுக பெரும் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. 37 இடங்களை திமுக கைப்பற்றும் என்பதையே முன்னிலைகள் உணர்த்துகின்றன. ஆனால், இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவால் பாதிக்கு பாதி இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது எனில், மக்கள் சட்டமன்ற தேர்தலில் திமுகவை புறக்கணித்து இருக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது.
மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்கள், சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவின் ஆட்சி கனவிற்கு வேட்டு வைத்திருக்கிறார்கள்.
'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' , 'மலர்ந்தே தீர வேண்டும்' என்று பாஜக மிக மிக உறுதியாக இருந்தது. ஆனால், 2019 மக்களவையில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது பாஜக. போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பாஜக தோல்வி முகத்தை சந்தித்து இருக்கிறது.
நாடு முழுவதும் பாஜக அலை வீசினாலும், தமிழகத்தில் ஏனோ அக்கட்சியால் தலைகீழ் நின்றும் தண்ணீர் குடிக்க முடியவில்லை.
டெல்டா மாவட்டங்களில் கஜா புயல் பாதிப்பின் போது, பிரதமர் மோடி வரவில்லை என்ற கோபம் மக்களிடையே மிகக் கடுமையாக இருப்பது அப்படியே வாக்கு தளத்தில் எதிரொலித்து இருக்கிறது. அதுமட்டுமின்றி, திமுகவுக்கு டெல்டாவில் மிகப்பெரிய வெற்றியையும் தேடித் தரவிருக்கிறது.
தூத்துக்குடி மக்களவை தொகுதி, நான்கு சுற்றின் முடிவில் வாக்கு எண்ணிக்கை நிலவரம்,
கனிமொழி - திமுக - 1,06,545
தமிழிசை சவுந்தரராஜன் - பாஜக - 35,240
எம்.புவனேஷ்வரன் - அமமுக - 19,687
க்றிஸ்டண்டைன் ராஜசேகர் - நாதக - 7,719
பொன் குமரன் - மநீம - 3,653
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து 2 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருந்த அதிமுக, இப்போது 3 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவளவன் 2000 வாக்குகள் பின் தங்கியுள்ளார்.
திமுக வேட்பாளர்களில் தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழி, பாஜக வேட்பாளர் தமிழிசையை விட 41,000 வாக்குகள் வித்தியாசத்திலும், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா அதிமுகவின் எம்.தியாகராஜனை விட 38,000 வாக்குகள் வித்தியாசத்திலும் முன்னிலையில் உள்ளனர்.
வாக்குகள் எண்ணும் பணியில் 17 ஆயிரத்து 128 பேர் ஈடுபட்டுள்ளனர். அதிகபட்சமாக திருவள்ளூர் தொகுதியில் 34 சுற்றுகளிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு குறைந்தபட்சம் 30 நிமிடம் ஆகலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights