Advertisment

Tamil Nadu Assembly By Election 2019 Results: ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட மகிழ்ச்சியில் அதிமுக-வினர் கொண்டாட்டம்!

2019 Tamil Nadu Assembly By Election Results: திமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
celebrations at AIADMK office

Assembly By Election 2019 Result in Tamil Nadu: அமமுக ஆதரவு மற்றும் எம்.எல்.ஏக்களின் மறைவுகள் காரணமாக தமிழகத்தில் காலியான 22 தொகுதிகளின் இடைத்தேர்தல் ஏப்ரல் 18 மற்றும் மே 19 ஆகிய தேதிகளில் முறையே 18, 4 என நடந்தது. இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக ஆட்சியினை மாற்றும் சக்தியாக அமையலாம் என்று பலதரப்பில்  இருந்தும் பேசி வருகின்றனர். 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக ஆட்சியை ஸ்திரப்படுத்துமா இல்லை ஆட்சி மாற்றம் நடைபெறுமா என்பதை இந்த இணைப்பில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Advertisment

 Tamil Nadu By Election 2019 Results: TN Assembly By Election Result

நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பாகும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இதோ, உங்களின் பார்வைக்கு.

மேலும் படிக்க : இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளின் பட்டியல் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ

சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளுடன் இன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்  முடிவுகளும் வெளியாக உள்ளன. அதற்கான வாக்கு எண்ணிக்கைகளும் முழு வீச்சில் 8 மணிக்கு ஆரம்பமானது.

மேலும் படிக்க : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்  2019

2019 தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றது. கர்நாடகா மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலங்களில் பாஜக முன்னணி பெற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க

Live Blog



























Highlights

    19:24 (IST)23 May 2019

    தோல்வியிலும் கொண்டாட்டம்!

    மக்களவைத் தேர்தலில் அதிமுக படு தோல்வி அடைந்துள்ள போதிலும், அதிமுக அலுவலகத்தில் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. காரணம், சட்ட மன்ற இடைத்தேர்தலின் மூலம் ஆட்சிக்கு எந்த வித பாதகமும் ஏற்படவில்லை என்ற மகிழ்ச்சியாம். publive-image

    17:58 (IST)23 May 2019

    கலைஞர் தொகுதியில் திமுக வெற்றி

    சட்டமன்ற இடைத்தேர்தலில் திருவாரூர் தொகுதியில், திமுக வேட்பாளர் பூண்டி கலைவானர் வெற்றி பெற்றுள்ளார். 

    17:10 (IST)23 May 2019

    விளாத்திகுளத்தில் அதிமுக வெற்றி

    விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.சின்னப்பன் வெற்றி பெற்றுள்ளார். 

    16:48 (IST)23 May 2019

    வைகோ கருத்து.

    தமிழகம் எப்போதும் திராவிட கோட்டை தான் என தேர்தல் நிலவரம் குறித்து தெரிவித்திருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

    16:42 (IST)23 May 2019

    விளாத்திகுளம் - அதிமுக

    விளாத்திகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. 

    16:16 (IST)23 May 2019

    நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தல்

    நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. 

    16:09 (IST)23 May 2019

    அதிமுக முன்னிலை

    பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது. 

    15:51 (IST)23 May 2019

    வெற்றியில் திமுக வேட்பாளர்

    குடியாத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காத்தவராயன் வெற்றி முகத்தில் உள்ளார். 

    15:27 (IST)23 May 2019

    வாக்குவாதம்

    ராணி மேரி கல்லூரியில் வாக்கு எண்ணும் போது வாக்குவாதம். 

    14:49 (IST)23 May 2019

    எத்தனை தொகுதியில் எத்தனை சுற்று வாக்கு எண்ணிக்கைகள் வெளியாகியுள்ளன?

    விளாத்திகுளம் 12, சூலூர் - 9, பெரியகுளம் - 5, அரவக்குறிச்சி - 10, திருப்ப்ரங்குன்றம் - 12, ஓசூர் - 14, பரமக்குடி - 5, ஆண்டிபட்டி - 7 ஒட்டப்பிடாரம் - 7

    14:46 (IST)23 May 2019

    பெரம்பூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

    வட சென்னை வாக்கு இயந்திரத்தை பெரம்பூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்காக மாற்றி எடுத்து வந்ததால் பரபரப்பு. பெரம்பூர் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதம் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷ் உள்ளிட்டோர் விசாரணை

    14:43 (IST)23 May 2019

    9 இடங்களில் முன்னிலை பெறும் அதிமுக

    விளாத்திக்குளம், அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, பாப்பிரெட்டிபட்டி, சூலூர், சோளிங்கர், ஆண்டிபட்டி, சாத்தூர் ஆகிய 9 தொகுதிகளில் தற்போது அதிமுக முன்னிலை பெற்று வருகிறது.

    14:38 (IST)23 May 2019

    ஆம்பூர் சட்டப்பேரவை முடிவுகள் முன்னிலை விபரம்

    திமுக வேட்பாளர் விஸ்வநாதனுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது . திமுக - 37810 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளளார் விஸ்வநாதன். 

    14:38 (IST)23 May 2019

    ஆம்பூர் சட்டப்பேரவை முடிவுகள் முன்னிலை விபரம்

    திமுக வேட்பாளர் விஸ்வநாதனுக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது . திமுக - 37810 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளளார் விஸ்வநாதன். 

    14:28 (IST)23 May 2019

    0 வாக்குகள் பெற்ற மக்கள நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி

    ஒட்டப்பிடாரம் தொகுதி முன்னிலை நிலவரங்கள்

    திமுக - 29203

    அதிமுக - 19963

    அமமுக - 10093

    நாம் தமிழர் கட்சி - 0

    மநீம - 0

    13:51 (IST)23 May 2019

    ஒட்டப்பிடாரத்தில் 4ம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள்

    ஒட்டப்பிடாரத்தில்  திமுக  வேட்பாளர்  17729 வாக்குகள் பெற்றுள்ளார்.  அதிமுக வேட்பாளர் 12694  வாக்குகள் பெற்றுள்ளார். வாக்குகள் வித்தியாசம் 5035 ஆகும். 

    13:43 (IST)23 May 2019

    விளாத்திகுளத்தில் கள நிலவரம்

    விளாத்திகுளம் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அதிமுக வேட்பாளர்  26742  வாக்குகளும், திமுக வேட்பாளர்  16247  வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம்  10495 ஓட்டுகள் ஆகும். 

    13:43 (IST)23 May 2019

    விளாத்திகுளத்தில் கள நிலவரம்

    விளாத்திகுளம் சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.  அதிமுக வேட்பாளர்  26742  வாக்குகளும், திமுக வேட்பாளர்  16247  வாக்குகளும் பெற்றுள்ளனர். வாக்கு வித்தியாசம்  10495 ஓட்டுகள் ஆகும். 

    13:22 (IST)23 May 2019

    ஆட்சியை அடுத்த 2 ஆண்டுகளுக்கு தக்க வைக்கிறார் எடப்பாடி

    22 தொகுதிகளில் கிட்டத்தட்ட சரிபாதி தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெறுவதால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆட்சியை அதிமுக தக்க வைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் நீங்கலாக அதிமுக மெஜாரிட்டிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் தேவை. தற்போதைய சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் இனி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு கொடுக்கக்கூடும்.

    12:08 (IST)23 May 2019

    அதிமுக முன்னிலை பெரும் 11 தொகுதிகள்

    அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிபட்டி, சாத்தூர், பரமக்குடி, விளாத்திக்குளம், சூலூர், சோளிங்கர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி - அதிமுக

    12:07 (IST)23 May 2019

    திமுக முன்னிலை பெறும் 11 தொகுதிகள்

    பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், குடியாத்தம், ஆம்பூர், திருவாரூர், தஞ்சை, பெரியகுளம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம்  ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது. 

    11:47 (IST)23 May 2019

    மக்கள் நீதி மய்யத்தின் நிலை

    பாப்பிரெட்டிபட்டி, திருவாரூர் மற்றும் விளாத்திக்குளம் ஆகிய தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் ஒரு வாக்குகள் கூட வாங்கவில்லை. 

    11:26 (IST)23 May 2019

    பாப்பிரெட்டிபட்டி இடைத்தேர்தல் 2019 : முதல் சுற்று முடிவுகள்

    அதிமுக வேட்பாளர் - ஏ. கோவிந்தசாமி 5251 வாக்குகளைப் பெற்றுள்ளார்

    திமுக வேட்பாளர் ஆ. மணி - 3346 வாக்குகள் பெற்றுள்ளார்

    அமமுக டி.கே.ராஜேந்திரன் 840 - வாக்குகள்

    மக்கள் நீதி மய்யம் - நல்லதம் 110 வாக்குகள்

    நாம் தமிழர் கட்சியின் கே. சதீஷ் - 199 வாக்குகள்

    11:21 (IST)23 May 2019

    பூந்தமல்லி இடைத்தேர்தல் 2019 : 2வது சுற்று முடிவுகள்

    திமுகவை சேர்ந்த ஆ.கிருஷ்ணசாமி - 5464

    அதிமுகவைச் சேர்ந்த ஜி.வைதியநாதன் - 3702 வாக்குகளைப் பெற்றுள்ளார்

    அமமுகவை சேர்ந்த ஏழுமலை - 978 வாக்குகளைப் பெற்றுள்ளார்

    11:18 (IST)23 May 2019

    சோளிங்கர் இடைத்தேர்தல் 2019 : 2-வது சுற்று முடிவுகள்

    அ. அசோகன் - 4652

    அதிமுக ஜி. சம்பத் - 4389

    அமமுக - டி.ஜி.மணி - 447

    மக்கள் நீதி மய்யம் கே.எஸ்.மலைராஜன் - 110

    நாம் தமிழர் கட்சி - 191

    11:06 (IST)23 May 2019

    அரவக்குறிச்சி இடைத்தேர்தல் 2019 : முதல் சுற்று முடிவுகள்

    திமுகவின் செந்தில் பாலாஜி - 5102

    அதிமுகவின் செந்தில் நாதன் - 3911

    அமமுகவின் சாகுல் ஹமீது - 347

    மக்கள் நீதி மய்யத்தின் மோகன் ராஜ் - 57

    நாம் தமிழர் கட்சியின் செல்வம் - 91

    10:35 (IST)23 May 2019

    அதிமுக முன்னிலை வகிக்கும் தொகுதிகள்

    சோளிங்கர், ஓசூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, மானாமதுரை, ஆண்டிபட்டி - தொகுதிகளில் அதிமுக முன்னிலை பெற்று வருகிறது

    10:35 (IST)23 May 2019

    திமுக முன்னிலை வகிக்கும் தொகுதிகள்

    குடியாத்தம் , பெரியகுளம், பெரம்பூர், திருப்போரூர், ஆம்பூர், திருவாரூர், - ஆகிய இடங்களில் திமுக முன்னிலை பெற்றுள்ளது.

    09:53 (IST)23 May 2019

    முன்னிலை வகிக்கும் திமுக

    22 தொகுதிகளுக்கான முடிவுகளில் 19 இடங்களின் முடிவுகள் வெளியாகி வருகின்றன. 11 இடங்களில் திமுக முன்னிலை வகிக்கின்றது. 8 இடங்களில் அதிமுக முன்னிலை வகிக்கின்றது.

    09:39 (IST)23 May 2019

    அதிமுக, திமுக தலா 9 தொகுதிகளில் முன்னிலை

    22 தொகுதிகளில் முன்னணி நிலவரம் தெரிந்த 18 தொகுதிகளில் அதிமுக, திமுக தலா 9 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகின்றன. அமமுக எந்தத் தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை.

    09:11 (IST)23 May 2019

    அரவக்குறிச்சியில் முன்னிலை பெறும் செந்தில் பாலாஜி

    அரவக்குறிச்சி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. திமுக சார்பில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி முன்னிலை பெற்று வருகிறார். 5102 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

    09:06 (IST)23 May 2019

    திருப்போரூர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

    திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் திமுகவின் வேட்பாளர் இதயவர்மன் முன்னிலை பெற்று வருகிறார்.

    08:58 (IST)23 May 2019

    திருவாரூர் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் - 2019

    கலைஞர் கருணாநிதியின் தொகுதியான திருவாரூர் தொகுதியில் தற்போது பூண்டி கலைவாணன் முன்னிலை பெற்று வருகிறார்.

    08:54 (IST)23 May 2019

    திமுக முன்னிலை

    ஒசூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சத்யா மற்றும் தஞ்சை சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் நீலமேகம் முன்னிலை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

    08:53 (IST)23 May 2019

    சாத்தூரில் அதிமுக முன்னிலை

    22 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகத் துவங்கியுள்ளன. சாத்தூரில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    08:43 (IST)23 May 2019

    D Day Social Media Reactions

    தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மக்கள் தெரிவிக்கும் கருத்துகள், ட்வீட்கள், மற்றும் இதர செய்திகளை பார்க்க இந்த இணைப்பை க்ளிக் செய்யவும் : D Day Social Media Reactions 

    08:29 (IST)23 May 2019

    துரைமுருகன் அப்பலோவில் அனுமதி

    காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக திமுகவின் பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    08:26 (IST)23 May 2019

    சாத்தூரில் துவங்கியது வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

    14 மேசைகளில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கை ஆரம்பமானது.

    08:23 (IST)23 May 2019

    துவங்கியது வாக்குப்பதிவு

    துவங்கியது வாக்குப்பதிவு : 22 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது. 

    07:50 (IST)23 May 2019

    இன்றே வெளியாக இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள்

    இன்று நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மற்றும் 22 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளியாக உள்ளது. இது தொடர்பான அனைத்து முடிவுகளையும் உடனுக்குடன் நீங்கள் தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். 

    நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ் 

    தமிழ்நாட்டில் உள்ள 38 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள 

    07:47 (IST)23 May 2019

    முழுமையான சோதனைக்குப் பிறகே முகவர்கள் அனுமதி

    வாக்கு எண்ணும் மையங்களில் முழுமையான சோதனைகளுக்குப் பிறகே கட்சி முகவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    07:35 (IST)23 May 2019

    வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் ஆணையம் கெடுபிடி

    வாக்கு எண்ணும் மையங்களுக்கு வெளியே பட்டாசு வெடிக்கக் கூடாது என்றும், அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கட்சிக் கொடியை காட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா, பென்சில், நோட்டு புத்தகம், 17சி படிவம் ஆகியவற்றை கொண்டு செல்லலாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    07:33 (IST)23 May 2019

    Edappadi Vs Stalin

    இன்று வெளியாகும் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அரசியல் வட்டாரம் எதிர்பார்த்து வருகின்றது. 

    Tamil Nadu
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment