2019 Election Results Tamil Nadu : தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி திமுக

Tamil Nadu Election 2019 Result: தமிழக மக்களவை தேர்தல் முடிவுகள் லைவ்

Tamil Nadu Election Result 2019:  தமிழ்நாடு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மொத்தம் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37-ஐ திமுக அணி வாரிச் சுருட்டியது. அதிமுக.வுக்கு ஒரே ஒரு இடம் கிடைத்தது.

மக்களவை தேர்தல் முடிவு வாக்குகள்(மே.23) நேற்று எண்ணப்பட்டன. திமுக தொடர்ந்து முன்னிலையில் நீடித்து வந்தது. அதிமுக பெரும் சரிவை சந்தித்துள்ளது. தவிர, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் வெற்றி பெறவில்லை.

மேலும் படிக்க – Tamil Nadu Assembly By Election 2019 Results Live : ஆட்சியை தக்க வைத்தார் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தைப் பொறுத்தவரை 38 மக்களவைத் தொகுதிகளில் திமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க – நாடு முழுவதும் தேர்தல் முடிவுகள் குறித்த துல்லியமான முழு விவரத்தை அறிய இங்கே க்ளிக் செய்யவும்

தமிழக மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் பற்றிய லைவ் அப்டேட்ஸ் உடனுக்குடன் இதோ,

Live Blog

2019 Election Results Tamil Nadu: Lok Sabha Election 2019 Results in Tamil Nadu - தமிழக மக்களவை தேர்தல் முடிவுகள் 2019 லைவ்

12:29 (IST)24 May 2019
தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி திமுக

தமிழ்நாட்டில் திமுக போட்டியிட்ட 19 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் நின்ற விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிகுமார், ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர், கொமதேக வேட்பாளர் சின்னராஜ், மதிமுக.வின் கணேசமூர்த்தி ஆகிய 4 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

எனவே மக்களவையில் திமுக.வின் அலுவல்பூர்வ எண்ணிக்கை 23 ஆகிறது. இதன் மூலமாக தேசிய அளவில் 3-வது பெரிய கட்சி ஆகிறது திமுக.

10:31 (IST)24 May 2019
பொன்னாரை வென்ற வசந்தகுமார்

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் 6,27,235 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிகாலை 1.10 மணிக்கு கன்னியாகுமரி கலெக்டரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பிரசாந்த் மு.வடநேரே தேர்தல் முடிவை அறிவித்தார். இங்கு போட்டியிட்ட பாஜக.வின் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியை தழுவினார்.

10:20 (IST)24 May 2019
64,000 வாக்குகள் வித்தியாசத்தில் அன்புமணி தோல்வி

தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்குமார் 64,424 வாக்குகள் வித்தியாசத்தில் பாமக வேட்பாளர் அன்புமணியை தோற்கடித்தார்.

09:58 (IST)24 May 2019
76,000 வாக்குகளில் தேனியில் அதிமுக வெற்றி

தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.

இதில், அதிமுகவின் ரவீந்திரநாத் 4,99,354 வாக்குகள் பெற்றார். காங்கிரஸின் இளங்கோவன் 4,23,035 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றுள்ளார்.

09:14 (IST)24 May 2019
Tamil Nadu Election Results 2019: தமிழகத்தில் கட்சி வாரியாக பெற்ற இடங்கள்

தமிழக மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களை கைப்பற்றியது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது.

தமிழகத்தில் கட்சி வாரியாக பெற்ற இடங்கள் வருமாறு:

திமுக - 19, காங்கிரஸ் - 8, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2, இந்திய கம்யூனிஸ்ட் - 2, விசிக - 2, மதிமுக - 1, இ.யூமு.லீக் - 1, ஐ.ஜே.கே - 1, கொ.ம.தே.க - 1

அதிமுக - 1

08:48 (IST)24 May 2019
நீண்ட இழுபறிக்கு பிறகு வென்ற திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும், அதிமுக வேட்பாளர் சந்திரசேகரும் மாறி, மாறி முன்னிலை வகித்தனர். இறுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் 5,00,229 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர் 4,97,010 வாக்குகள் பெற்றார். கடும் இழுபறிக்கு பிறகு 3,219 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார்.

நீண்ட இழுபறிக்கு பிறகு நள்ளிரவில் முடிவு அறிவிக்கப்பட்டது.

21:20 (IST)23 May 2019
திருநாவுக்கரசர் வெற்றி

திருச்சி மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் திருநாவுக்கரசர் 4,59,286 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

21:02 (IST)23 May 2019
Election Result: தேனி மக்களவை தொகுதி நிலவரம்

ரவீந்திரநாத் குமார் - அதிமுக - 3,53,708ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் - காங்கிரஸ் - 2,99,273தங்க தமிழ்ச்செல்வன் - அமமுக - 96,919சாகுல் அமீது - நாதக - 19,089ராதாகிருஷ்ணன் - மநீம - 11,411

20:59 (IST)23 May 2019
TN LS Election Results: சிக்கல் சிதம்பரம்!

சிதம்பரத்தில் திருமாவளவன் மீண்டும் 2000 வாக்குகள் பின்னடைவு!

20:32 (IST)23 May 2019
TN Election Final Results 2019: கடலூர் தொகுதி இறுதிக்கட்ட நிலவரம்,

ஸ்ரீரமேஷ் - திமுக - 5,07,106ஆர்.கோவிந்தசாமி - பாமக - 3,68,098காசி.தங்கவேல் - அமமுக - 43,766சித்ரா - நாதக - 33,676வி.அண்ணாமலை - மநீம - 23,240

20:30 (IST)23 May 2019
மீண்டும் சிக்கலில் திருமா

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாலை இரண்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த திருமா, இப்போது இறுதிக் கட்டத்தில் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டும் முன்னிலையில் உள்ளார்.

20:12 (IST)23 May 2019
TN Election Results 2019: 4 சதவிகித வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ( சுமார் 15 லட்சம் வாக்குகள்) 4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

20:00 (IST)23 May 2019
Election Results 2019: மக்களவை தேர்தல் முன்னிலை நிலவரம்
19:52 (IST)23 May 2019
தென்சென்னை இறுதிக் கட்ட நிலவரம்

தமிழச்சி தங்கபாண்டியன் - திமுக - 5,03,393ஜெயவர்தன் - அதிமுக - 2,73,180ரங்கராஜன் - மநீம - 1,23,220ஷெரின் - நாதக - 43,667இசக்கி சுப்பையா - அமமுக - 27,087

19:39 (IST)23 May 2019
22 வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமியை எதிர்த்து போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

மொத்தம் பதிவான 9,44,205 வாக்குகளில் வடசென்னை தி.மு.க வேட்பாளர் தற்போது வரை அதிகபட்சமாக 5,60,464 வாக்குகளை பெற்றுள்ளார் இதன் மூலம் அவரை எதிர்த்து போட்டியிட்ட 22 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

19:38 (IST)23 May 2019
TN Election Results 2019: இறுதிக் கட்டத்தில் திருமாவளவன் முன்னிலை

திமுக கூட்டணி - 4,26,128

அதிமுக - 4,10,096

அமமுக 52,013

நா.த - 32,444

மக்கள் நீதி மய்யம் - 13,856

19:23 (IST)23 May 2019
தயாநிதி மாறன் வெற்றி

மத்திய சென்னை திமுக கூட்டணி வேட்பாளர் தயாநிதி மாறன் 4,47,150 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருக்கிறார்.

பாமக  - 1,46.713

மக்கள் நீதி மய்யம் - 91,775

நாம் தமிழர் - 30,703

எஸ்.டி.பி.ஐ - 23,584

19:16 (IST)23 May 2019
Tamil Nadu Election Results 2019: கரூர் மக்களவை தொகுதி இறுதி நிலவரம்

ஜோதிமணி - காங்கிரஸ் - 6,30,742தம்பிதுரை - அதிமுக - 2,50,084கருப்பையா - நாதக- 35,307தங்கவேல் - அமமுக - 26,474ஹரிஹரன் - மநீம - 13,261

19:13 (IST)23 May 2019
TN Election Results: திருவள்ளுர் தொகுதி இறுதிக் கட்ட நிலவரம்

கே.ஜெயகுமார் - காங்கிரஸ் - 5,48,156டாக்டர் வேணுகோபால் - அதிமுக - 2,92,559லோகரங்கன் - மநீம - 50,808வெற்றிச்செல்வி - நாதக - 45,856பொன்.ராஜா - அமமுக - 25,969

18:55 (IST)23 May 2019
TN Election Result 2019: தஞ்சையில் திமுக வெற்றி

தஞ்சை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் 3,63,047 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். 

திமுக கூட்டணி - 5,80,652

அதிமுக கூட்டணி - 2,17,615

18:46 (IST)23 May 2019
தென்காசியில் திமுக வெற்றி

தென்காசி திமுக வேட்பாளர் தனுஷ்.எம்.குமார் 1,16,130 வாக்குகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றிப் பெற்றுள்ளார். 

18:33 (IST)23 May 2019
TN Lok Sabha Election Result 2019: அரக்கோணம் இறுதிக்கட்ட நிலவரம்,

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி :

சுற்று: 14

எண்ணப்பட்ட மொத்த வாக்கு - 7,98,568

ஏ கே மூர்த்தி பாமக : 2,31,819

ஜெகத்ரட்சகன் திமுக : 4,55,621

பார்த்திபன் அமமுக: 46,079

ராஜேந்திரன் மநீம : 17,302

பாவேந்தன் நாம் தமிழர்: 19,553

நோட்டா : 8,410

முன்னிலை : திமுக

வாக்கு வித்தியாசம்: 2,23,802

18:30 (IST)23 May 2019
TN Election Results 2019: ஈரோட்டில் மதிமுக வெற்றி

ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக வேட்பாளர் கணேச மூர்த்தி, 2,10,618 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

18:22 (IST)23 May 2019
தலைவணக்கம் தமிழகமே - மு.க.ஸ்டாலின்
18:10 (IST)23 May 2019
ஆரணியில் காங்கிரஸ் வெற்றி

ஆரணி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே.விஷ்ணு பிரசாத் வெற்றிப் பெற்றுள்ளார்.

மொத்தம் 6,13,390 வாக்குகள் பெற்று விஷ்ணு பிரசாத் வெற்றிப் பெற்றார்.

17:59 (IST)23 May 2019
TN Election Results 2019: இறுதிக் கட்டத்தில் மதுரை நிலவரம்...

மதுரை மக்களவை தொகுதி வாக்குகள் நிலவரம்,

சு.வெங்கடேசன் - சிபிஎம் - 3,61,959ராஜ்சத்யன் - அதிமுக - 2,40,373அழகர் - மநீம - 65,435டேவிட் அண்ணாதுரை - அமமுக - 68,037பாண்டியம்மாள் - நாதக - 34,214

17:46 (IST)23 May 2019
மோடி வெற்றி; இந்தியா தோல்வி

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, "இத் தேர்தலில் மோடி ஜெயித்துவிட்டார்; இந்தியா தோற்றுவிட்டது. ஒரு தவறான பிரச்சாரம் வெற்றி அடைந்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

17:32 (IST)23 May 2019
இடைத் தேர்தலில் திமுகவுக்கு மாபெரும் அதிர்ச்சி

தமிழக மக்களவை தேர்தலில் திமுக பெரும் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. 37 இடங்களை திமுக கைப்பற்றும் என்பதையே முன்னிலைகள் உணர்த்துகின்றன. ஆனால், இவ்வளவு எதிர்ப்புக்கு மத்தியிலும் சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவால் பாதிக்கு பாதி இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது எனில், மக்கள் சட்டமன்ற தேர்தலில் திமுகவை புறக்கணித்து இருக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது.

மக்களவை தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்ட மக்கள், சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுகவின் ஆட்சி கனவிற்கு வேட்டு வைத்திருக்கிறார்கள்.

17:20 (IST)23 May 2019
TN Election Result 2019: மத்திய சென்னை நிலவரம்

தயாநிதிமாறன் - திமுக - 4,24,164சாம்பால் - பாமக - 1,39,157கமீலா நாசர் - மநீம - 86,595கார்த்திகேயன் - நாதக - 28,971தெஹ்லான் பாகவி - எஸ்டிபிஐ - 22,047

17:16 (IST)23 May 2019
சிதம்பரம் திருமாவளவன் முன்னிலை

பிற்பகலில் 5000 வாக்குகள் பின் தங்கியிருந்த திமுக கூட்டணி வேட்பாளர் திருமாவளவன் தற்போது மீண்டும் முன்னிலை பெற்றுள்ளார்.

திருமாவளவன் - 257931

சந்திரசேகர் - 255361

விசிக முன்னிலை 2570 வாக்குகள்.

17:13 (IST)23 May 2019
சிதம்பரம் அதிமுக முன்னிலை

சந்திரசேகர் - அதிமுக - 243199

திருமாவளவன் -  விசிக -  238409

16:49 (IST)23 May 2019
Tamil Nadu Election Results: பெரும் வெற்றியை நோக்கி கனிமொழி

தூத்துக்குடி தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை, திமுக வேட்பாளர் கனிமொழியை விட 2,39,392 வாக்குகள் குறைவாகப் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

திமுக - 3,82,992 வாக்குகள்பாஜக - 1,43,600 வாக்குகள்

16:37 (IST)23 May 2019
திராவிட இயக்கக் கோட்டை

'தமிழகம் திராவிட இயக்கக் கோட்டை என்பதைப் பறைசாற்றிய வாக்காள பெருமக்களுக்கு நன்றி' - வைகோ

16:33 (IST)23 May 2019
ஆ.ராசா வெற்றி

நீலகிரி மக்களவை தேர்தல் முடிவில் திமுக கூட்டணி வேட்பாளர் ஆ.ராசா 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். 

ஆ.ராசா - 5,46,496எம்.தியாகராஜன் - 3,41,136

16:21 (IST)23 May 2019
மீண்டும் மீண்டும் அடி வாங்கும் பாஜக

'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்' , 'மலர்ந்தே தீர வேண்டும்' என்று பாஜக மிக மிக உறுதியாக இருந்தது. ஆனால், 2019 மக்களவையில் ஒயிட் வாஷ் ஆகியிருக்கிறது பாஜக. போட்டியிட்ட ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை. மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பாஜக தோல்வி முகத்தை சந்தித்து இருக்கிறது. 

நாடு முழுவதும் பாஜக அலை வீசினாலும், தமிழகத்தில் ஏனோ அக்கட்சியால் தலைகீழ் நின்றும் தண்ணீர் குடிக்க முடியவில்லை. 

16:10 (IST)23 May 2019
தோல்வியை நோக்கி அன்புமணி?

40,270 வாக்குகள் வித்தியாசத்தில் தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

15:57 (IST)23 May 2019
TN Election Results: நாம் தமிழரை முந்திய மக்கள் நீதி மய்யம்

தென் சென்னை தொகுதியில் நாம் தமிழர் கட்சியை விட மக்கள் நீதி மய்யம் 46,918 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது!

நாம் தமிழர் கட்சி - 23,762 வாக்குகள்மக்கள் நீதி மய்யம் - 70,680 வாக்குகள்

15:48 (IST)23 May 2019
இரண்டேகால் லட்சம் வித்தியாசம்...

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் கவுதமசிகாமணி 12வது சுற்றில் தேமுதிக வேட்பாளர் சுதீஷை விட 2,25,745 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

15:47 (IST)23 May 2019
Tamil Nadu Election Results Live: திருப்பூர் தொகுதி நிலவரம்

திருப்பூர் மக்களவை தொகுதியில் 11 சுற்றுகள் முடிவில்,

சுப்புராயன் - சிபிஐ- 3,57,737எம்.எஸ்.எம்.அனந்தன் - அதிமுக - 2,82,668சந்திரகுமார் - மநீம - 43,791ஆர்.பி.செல்வம் - அமமுக - 29,071ஜெகநாதன் -நாதக - 28,644

15:41 (IST)23 May 2019
TN Election Results 2019: கோயம்புத்தூர் - 11 சுற்றுகள் முடிவில்....

பி.ஆர்.நடராஜன் - சிபிஎம் - 2,66,423சி.பி.ராதாகிருஷணன் - பாஜக - 1,89,869மஹேந்திரன் - மநீம - 71,135கல்யாண சுந்தரம் - நாதக - 28,671அப்பாதுரை - அமமுக - 17,075

15:34 (IST)23 May 2019
திருநாவுக்கரசர் வெற்றி

திருச்சியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.திருநாவுக்கரசர் மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.

திருநாவுக்கரசர் - 5,04,022

இளங்கோவன்(dmdk) - 1,33,907

15:20 (IST)23 May 2019
TN Election Results 2019: 13வது சுற்றுக்கு பிறகு திருச்சி நிலவரம்....

திருநாவுக்கராசர் - காங்கிரஸ் - 3,98,539வி.இளங்கோவன் - தேமுதிக- 1,06,653சாருபாலா தொண்டைமான் - அமமுக - 65,223வினோத் - நாதக - 40,986ஆனந்தராஜா - மநீம - 30,576

15:15 (IST)23 May 2019
திருமாவளவனுக்கு மீண்டும் பின்னடைவு

சிதம்பரம் ( தனி) நாடாளுமன்றத் தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் 5,517 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு!

15:01 (IST)23 May 2019
Election Result 2019: சுற்று 7 முடிவில் சிவகங்கை நிலவரம்...

கார்த்தி சிதம்பரம் - காங்கிரஸ் - 1,83,751ஹெச்.ராஜா - பாஜக - 76,914பாண்டி - அமமுக - 38,521சக்திபிரியா - நாதக - 21,187ஸ்நேகன் - மநீம - 8,531

14:58 (IST)23 May 2019
விருதுநகர் மக்களவை தொகுதி நிலவரம்...

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

12 வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் 98,191 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை .

14:48 (IST)23 May 2019
Tamil Nadu Election Result 2019: பெரும் வெற்றியை நோக்கி ஆ.ராசா

நீலகிரி தொகுதியில் ஆ.ராசா வெற்றி முகத்தில் இருக்கிறார். இன்னும் 2 சுற்றுகள் மீதமிருக்கும் நிலையில், எண்ணப்படும் வாக்குகளின் எண்ணிக்கை, ஆ.ராசாவின் வாக்கு வித்தியாசத்தை விட குறைவாகவே உள்ளது. 

14:42 (IST)23 May 2019
Anbumani Ramdoss Result: அன்புமணிக்கு பெரும் பின்னடைவு

திமுக - 2,19,352

பாமக - 2,00,143

19 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அன்புமணி பின்னடைவு

14:27 (IST)23 May 2019
Election Results 2019: மீண்டும் சறுக்கும் அன்புமணி

தர்மபுரியில் அன்புமணிக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், 37 மக்களவை தொகுதிகளில் திமுக மீண்டும் முன்னிலை பெறுகிறது. அதிமுக 2 தொகுதிகளில் முன்னிலை.

13:51 (IST)23 May 2019
Election Results Live: புதுச்சேரி மூன்றாவது சுற்று முடிவில்

வைத்திலிங்கம்- காங்கிரஸ் - 1,64,591கே.நாராயணசாமி - என்.ஆர்.காங்கிரஸ் - 86,758சுப்ரமணியன் - மநீம - 13,770ஷர்மிளா பேகம் - நாதக - 7,756தமிழ்மாறன் - அமமுக - 1,371

13:48 (IST)23 May 2019
Election Results 2019: முதல்வர் பழனிசாமி வாழ்த்து

மக்களவை தேர்தலில் 300க்கும் அதிகமான இடங்களில் பாஜக முன்னிலையில் இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2019 Election Results Tamil Nadu Live: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் அமோக வெற்றி பெற்றிருக்கின்றன. தேனி தொகுதியைத் தவிர மொத்தமாக சுருட்டியிருக்கிறது திமுக அணி.

Web Title:

Tamilnadu lok sabha election results 2019 dmk admk live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close