தேனி மக்களவைத் தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இதனால் அந்தத் தொகுதியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 2-வது வேட்பாளர் பட்டியலை இன்று (மார்ச் 22) காலையில் அந்தக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார். அதில் முக்கிய அம்சம் தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்செல்வன் மீண்டும் எம்.எல்.ஏ. பதவிக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. டிடிவி தினகரன், ‘நானே தேனியில் போட்டியிடுவேனா? என்பது வேட்பாளர் பட்டியல் வெளியாகும்போது தெரியும்’ என கூறியிருந்தார்.
இந்தச் சூழலில் தேனி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் நிறுத்தப்பட்டிருக்கிறார். அங்கு அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் குமார் களம் இறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தேனியில் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
திமுக அணி சார்பில் இந்தத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. அங்கு அந்தக் கட்சியின் சார்பில் ஜே.எம்.ஆரூன் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது.
AMMK Candidates list: டிடிவி தினகரன் வெளியிட்ட அமமுக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வருமாறு:
14 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பட்டியல்: வரிசை எண், நாடாளுமன்றத் தொகுதி
மற்றும் எண், வேட்பாளர் பெயர் தரப்படுகிறது.
1. வடசென்னை (2)
P.சந்தானகிருஷ்ணன் Ex.MC
மாவட்ட கழக செயலாளர்
வடசென்னை தெற்கு மாவட்டம்
2. அரக்கோணம் (7)
N.G.பார்த்திபன் B.A.,BL.,Ex.MLA
மாவட்ட கழக செயலாளர்
வேலூர் கிழக்கு மாவட்டம்
3. வேலூர் (8)
K.பாண்டுரங்கன் B.A.,
முன்னாள் அமைச்சர்,
கழக அமைப்புச் செயலாளர்
4. கிருஷ்ணகிரி (9)
S.கணேசகுமார் DCE., D.C.Tech.,
மாவட்ட கழக செயலாளர்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்
5. தருமபுரி (10)
P.பழனியப்பன் M.Sc., Ex.MLA
முன்னாள் அமைச்சர்
கழக தலைமை நிலையச் செயலாளர்
6. திருவண்ணாமலை (11)
A.ஞானசேகர் M.A.,
மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர், வேலூர் மேற்கு மாவட்டம்
7. ஆரணி (12)
G.செந்தமிழன் MA., ML.,
முன்னாள் அமைச்சர்
கழக தேர்தல் பிரிவு செயலாளர்
8. கள்ளக்குறிச்சி (14)
M.கோமுகி மணியன்
B.Sc., BL., D.P.P.A., Ex.MLA
மாவட்ட கழக செயலாளர்
விழுப்புரம் தெற்கு மாவட்டம்
9. திண்டுக்கல் (22)
P.ஜோதிமுருகன் MTM.,LLB.,M.Phil.,
தாளாளர், சுரபி கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனை
10. கடலூர் (26)
K.R.கார்த்திக் B.E., MBA.,
கழக பொறியாளர் அணி செயலாளர்
11. தேனி (33)
தங்க தமிழ்செல்வன்
M.A.,Ex.MP., Ex.MLA.,
கழக கொள்கை பரப்புச் செயலாளர்
மாவட்ட கழக செயலாளர்
தேனி மாவட்டம்
12. விருதுநகர் (34)
S.பரமசிவ ஐயப்பன் BE.,
கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்
13. தூத்துக்குடி (36)
டாக்டர்.ம.புவனேஸ்வரன்
B.Sc., MA., M.L.,MBA.,Ph.D
மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
14. கன்னியாகுமரி (39)
Er.E. லெட்சுமணன் M.E.,
கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செயலாளர்
தமிழ்நாட்டின் 8 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் 1 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்
1. சோளிங்கர் (39)
T.G.மணி B.Sc.,
நெமிலி மேற்கு ஒன்றிய கழக செயலாளர்
வேலூர் கிழக்கு மாவட்டம்
2. பாப்பிரெட்டிபட்டி (60)
D.K.ராஜேந்திரன் Ex.D.C.,
மாவட்ட கழக செயலாளர், தருமபுரி மாவட்டம்
3. நிலக்கோட்டை (தனி) (130)
R.தங்கதுரை M.A., BL., Ex MLA.,
கழக அமைப்புச் செயலாளர்
கழக தேர்தல் பிரிவு இணைச் செயலாளர்
மாவட்ட கழக செயலாளர்,
திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்
4. திருவாரூர் (168)
S.காமராஜ் M.Com., B.Ed.,
மாவட்ட கழக செயலாளர்
திருவாரூர் மாவட்டம்
5. தஞ்சாவூர் (174)
M.ரெங்கசாமி B.Sc., B.L., Ex MLA.,
கழக பொருளாளர்
மாவட்ட கழக செயலாளர்
தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்
6. ஆண்டிப்பட்டி (198)
R.ஜெயக்குமார் BA., BL.,
ஆண்டிப்பட்டி ஒன்றிய கழக செயலாளர்
தேனி மாவட்டம்
7. பெரியகுளம் (தனி) (199)
டாக்டர் K.கதிர்காமு MBBS., MS., Ex.MLA.,
கழக மருத்துவரணி தலைவர்
8. விளாத்திகுளம் (213)
டாக்டர் K.ஜோதிமணி Ph.D., (IIT Chennai)
மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர்
தூத்துக்குடி வடக்கு மாவட்டம்
9. தட்டாஞ்சாவடி(புதுச்சேரி)
N.முருகசாமி
புதுச்சேரி மாநில கழக வர்த்தக அணி செயலாளர்
மேற்கண்டவாறு வேட்பாளர்களை டிடிவி தினகரன் வெளியிட்டார்.