scorecardresearch

திமுகவின் கோட்டையாக மாற இருக்கும் சென்னை, மதுரை; தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு

ஆலங்குளம், பூம்புகார், பட்டுக்கோட்டை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும்.

திமுகவின் கோட்டையாக மாற இருக்கும் சென்னை, மதுரை; தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியீடு

செய்தி நிறுவனங்கள் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் புதிய தலைமுறை செய்தி நிறுவனம் திமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று அறிவித்த நிலையில் நேற்று தந்தி நிறுவனம் தன்னுடைய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவினை வெளியிட்டது.

திமுக கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்புகளை கொண்ட தொகுதிகள்

திமுக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் அமைந்திருக்கும் தாம்பரம், பூந்தமல்லி, வில்லிவாக்கம், அண்ணாநகர், தியாகராய நகர், ஆலந்தூர், பெரம்பூர், திரு.வி.க நகர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் திமுக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது. அதே போன்று மதுரையின் மதுரை மத்திய தொகுதி, மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, உசிலம்பட்டி (அகில இந்திய ஃபார்வர்ட் ப்ளாக் கூட்டணி கட்சி), தேனியின் பெரியகுளம், கம்பம் தொகுதிகளிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், கரூரில் குளித்தலை தொகுதியில் வெற்றி வாய்ப்பை கொண்டிருப்பதாக கூறியுள்ளது. அதே போன்று காங்கிரஸ் போட்டியிடும் உதகையிலும் திமுக வெற்றி பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை தொகுதியிலும் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : மதுரை எய்ம்ஸ் கட்ட வைத்திருந்த செங்கல்லை திருடியதாக உதயநிதி மீது புகார்

தந்தி டிவி 50 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு முடிவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளது. அதில் 34 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறவும், 12 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறவும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி வெற்றி பெறும் இடங்கள்

அதிமுக வெற்றி பெறும் தொகுதிகளாக அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், சோழவந்தான், மதுரை தெற்கு, சிதம்பரம், பாலக்கோடு, தென்காசி, மேலூர், மதுரை மேற்கு, நாகை, நிலக்கோட்டை. திண்டுக்கல் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தமாக 48 ஆயிரம் நபர்களிடம் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

தளி, திருத்துறைப்பூண்டி, சிவகாசி, அறந்தாங்கி, வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிப்புதூர் தொகுதிகளில் திமுகவின் கூட்டணி கட்சிகள் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. ஆலங்குளம், பூம்புகார், பட்டுக்கோட்டை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும். வெற்றிவாகை சூடப்போவது யார் என்பது இங்கு கடைசி வரை திக்திக் நிமிடங்களாக இருக்கும் என்று கூறியுள்ளது தந்தியின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள்.

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Thanthi tv opinon polls dmk leads in madurai and chennai