Advertisment

திருமாவளவனுக்கு போலீஸ் பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

பல மாவட்டங்களுக்கு சென்று வருவதால் தனக்கு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
police security to thirumavalavan, life threat to thol thirumavalavan, தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு குறித்து பதிலளிக்க வேண்டும் என தமிழக டிஜிபி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் 24 மணி நேரமும் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த 2015 ஆம் ஆண்டு பட்டுகோட்டையிலும், 2016 ஆம் ஆண்டு சென்னை தி நகரில் தன்னை கொல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது, தொலைபேசி வாயிலாகவும் தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், தற்போது தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பல மாவட்டங்களுக்கு சென்று வருவதால் தனக்கு நிரந்தர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு இன்று சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், திருமாவளவனுக்கு 1 துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 ஆய்வாளர்கள் மற்றும் 14 காவலர்கள் பாதுகாப்பு வழங்கி வருவதாக விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கு திருமாவளவன் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பு குறித்த காவல்துறையின் விளக்கத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்

Madras High Court Thirumavalavan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment