இபிஎஸ் முதல் உதயநிதி வரை... தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த சொத்து விவரம்

Assembly Election 2021 : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பு மனுதாக்கல் தீவிரமடைந்துள்ளது.

Assembly Election 2021 : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வேட்பு மனுதாக்கல் தீவிரமடைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
இபிஎஸ் முதல் உதயநிதி வரை... தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த சொத்து விவரம்

Tamilnadu Assembly Election 2021: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் தங்களது வேட்புமனு தாக்கலை தொடங்கியுள்ளனர்.

Advertisment

தமிழக அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்காக முழுவீச்சில் தயாராகி வருகிறது. இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள அரசியல் கட்சிகள், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு, வேட்பாளர் நேர்காணல், வேட்பாளர்கள் அறிவிப்பு என படு பிஸியாக இயங்கி வருகிறது. வரும் ஏப்ரல் 6-ந் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், கடந்த 12-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து, அந்தந்த தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்களின் சொத்துமதிப்பு கணக்கிடப்படும். அந்த வகையில், சில அரசியல் தலைவர்களின் சொத்துமதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி தொகுதி) :

Advertisment
Advertisements

தொடர்ந்து 7-வது முறையாக தனது சொந்த தொகுதியாக எடப்பாடியில் போட்டியிடும் முதல்வர் பழனிச்சாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. இதில் கடந்த 2016-ம் ஆண்டு அவரது சொத்து மதிப்பை விட தற்போது ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அவரது சொத்து மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு 4.66 கோடியாக இருந்து எடப்பாடி பழனிச்சாமியின் அசையா சொத்து மதிப்பு தற்போது  4.68 கோடி என்ற அளவில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில், 3.14 கோடியாக இருந்த அவரது அசையும் சொத்து தற்போது 2.01 கோடியாக குறைந்துள்ளது. மேலும் 2016-ஆம் ஆண்டு 33 லட்சமாக இருந்த கடன் தற்போது 29 லட்சத்து 75,000 என்ற அளவுக்கு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒ.பன்னீர் செல்வம் (போடி தொகுதி)

தனது சொத்த தொகுதியான போடியில்  போட்டியிடும் துணைமுதல்வர் ஒ.பன்னீர் செல்வம் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதில் அவரின் சொத்து மதிப்பு கடந்த 2016ம் ஆண்டு இருந்த சொத்துக்களைவிட பலமடங்கு உயர்ந்துள்ளது. 2016ல் பன்னீர்செல்வத்தின் அசையும் சொத்து ரூ.55 லட்சமாக இருந்தது. தற்போது ரூ.5.19 கோடியாக உள்ளது. 2016ல் ரூ.98 லட்சமாக இருந்த அசையா சொத்தின் மதிப்பு இப்போது ரூ.2.64 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், அவருக்கு பூர்வீக சொத்து, நிலங்கள் எதுவும் இல்லை எனவும், தனது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் (கொளத்தூர் தொகுதி) :

தொடர்ந்து 3-வது முறையாக சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் அவரின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ .5 கோடியே 94 கட்சத்து 84 ஆயிரம் என்றும்,  அசையா சொத்துக்களின் மதிப்பு  ரூ.3 கோடியே 63 லட்சத்து 37 ஆயிரமாக  இருப்பதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதில் கடந்த 2016-ம்  ஆம் ஆண்டு சொத்து மதிப்பின் கணக்கைவிட இந்தமுறை  4  கோடி ரூபாய் அளவிற்கு  அதிகரித்துள்ளது அவரது வேட்புமனு தாக்கல் மூலம் தெரியவந்துள்ளது.

டிடிவி தினகரன் (கோவில்பட்டி தொகுதி) :

ஆர்கே நகர் இடைத்தேர்தலை தொடர்ந்து 2-வது முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தற்போது கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் தினகரனுக்கு 12.26 கோடி சொத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம் தொகுதி) :

திமுக முன்னாள் தலைவரின் பேரனும், தற்போதைய தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின், முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். அவருக்கு கருணாநிதியின் முன்னாள் தொகுதியான சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த தொகுதியில் இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்பு மனுவில் அவரின் சொத்து மதிப்பு ரூ. 28.82 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதில் அசையும் சொத்து மதிப்பு 22.28 கோடி மதிப்பு . அசையா சொத்து மதிப்பு ரூ. 5.37 கோடி. ரேஞ்ச்ரேவர் கார், திருவள்ளுரில் வேளாண்மை நிலம் உள்ளது. இதில் அவருக்கு  கடன் ரூ.1.35 கோடி உள்ளது. அவரது மனைவி கிருத்திகாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 1 கோடியே 17 லட்சம் ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நடிகை குஷ்பு (ஆயிரம் விளக்கு):

காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து அந்த தொகுதியில் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Tn Assembly Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: