தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. 234தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்ற இந்த தேர்தலில் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 70 % சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழக தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 5 முதல்வர் வெட்பாளர்கள் போராட்டியிட்டதால் இந்த தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இன்று காலை வாங்குகள் எண்ணும் பணி தொடங்கியவுடன் முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டது. இதில் பல தொகுதிகளில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய கட்சியான பாஜக 4 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதில் கடந்த தேர்தல்களில் பெரியதாக தாக்கத்தை ஏற்படுத்தாத பாஜக தற்போது இந்த தேர்தலில் கனிசமாக வாக்குகளை பெற்று முதல் வெற்றியை பெறும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
இதில் திருநெல்வேலி தொகுதியில் இதுவரை 31 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் பாஜக சார்பில் அங்கு போட்டியிட் நயினார் நாகேந்திரன், 32 ஆயிரத்திற்கு மேலான வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்எல்எஸ் லட்சுமணன், 22 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி 30 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் ராஜன் 19 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று பின்தங்கியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபும் தொகுதியில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் 19 ஆயிரத்திற் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். இதே தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கயல்விழி செல்வராஜ்17 ஆயிரத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்று சற்று பின்தங்கியுள்ளார்.
இதில் சென்னை துறைமுகம், உதகைமண்டலம், ஆகிய தொகுதிகளில், பாஜக மற்றும் திமுக வேட்பாளர்கள் மாறி மாறி முன்னிலை பெற்று வரும் நிலையில், இந்த தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதை தவிர்த்து மற்ற தொகுதிகள் அனைத்திலும் பாஜக வேட்பாளர்கள் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil