TN Assembly Election 2021 DMK Candidate List : தமிழக சட்டசபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கவுள்ள நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் திமுக தலைவர் 3-வது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழகத்தில் அரசியல் களம் சட்டசபை தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், கூட்டணி, தொகுதிப்பங்கீடு, வேட்பாளர்கள் நேர்காணல் முடிந்து வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், அதிமுக கூட்டணியில், பாமக, பாஜக, ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், பாமக தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் 154 தொகுதிகளில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தனது முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தொடர்ந்து 234 தொகுதிகளிலும் தனித்த போட்டியிடும் நாம் தமிழர் கட்சி அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது.
இதில் திமுக தரப்பில், கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் 25 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும், யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் கட்சி தலா 3 தொகுதிகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளிலும், பார்வேர்டு பிளாக்,மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலா 1 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
இந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு, நேற்று முதல் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் திமுக கிட்டத்தட்ட 173 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இல்லாமல் சந்திக்கும் முதல் தேர்தலில் வேட்பாளர் பட்டியலை கருணாநிதி படத்தின் முன் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து 173 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இதில் எப்பவும் போல கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு புதிய தொகுதியாக அறிவிக்கப்பட்ட கொளத்தூர், இதுவரை 2011 மற்றும் 2016 என 2 சட்டமன்ற தேர்தலை சந்தித்துள்ளது. இந்த இரண்டு தேர்தல்களிலும் திமுக சார்பில் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றுள்ளார். தற்போது 3-வது முறையாக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். இதற்கு முன் திமுகவின் மூத்த தலைவர் ஜெ.அன்பழகன் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்த தொகுதியில் தற்போது ஸ்டாலின் களமிறங்கியுள்ளார்.
அடுத்து காட்பாடி தொகுதியில் தொடர்ந்து 10-வது முறையாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் களமிறங்கியுள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் வெற்றிகளை குவித்து வரும் துரைமுருகன் இந்த முறையும் அதே தொகுதியில் களமிறங்கியுள்ளார். அடுத்து திருக்கோவிலூர் தொகுதியில் திமுகவின் முத்த தலைவர்களிவ ஒருவரான பொன்முடி களமிறங்கியுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு திருக்கோவிலூர் தொகுதியில் வெற்றி பெற்ற பொன்முடி தற்போது 2-வது முறையாக அதே தொகுதியில் களமிறங்கியுள்ளார். அதிமுகவில் இருந்து திமுகவில் இணைந்த கரூர் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
திருச்சி மாவட்டத்தின்மேற்கு தொகுதியில் திமுகவின் மூத்த தலைவரும்.முன்னாள் அமைச்சருமான கே.என் நேரு போட்டியிடுகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இதே தொகுதியில் போட்டியிட்ட நேரு, மீண்டும் 2-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். தொடர்ந்து தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில், 3-வது முறையாக கீதா ஜீவன் போட்டியிடுகிறார். ஏற்கனவே கடந்த 2006 மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற அவர் தற்போது மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.