Tamil Nadu,Puducherry, Kerala, Assam, West Bengal Election Results 2021 Live News: கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி வலுவான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள இந்த லைப் பிளாக்கில் இணைந்திருங்கள்..
மேற்கு வங்கம்
மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில், நந்திகிராம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மம்தா பானர்ஜியின் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற போதிலும் தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் இறுதிவரை போராடி மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். எனினும் நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது என்றும் இதற்காக நீதிமன்றம் செல்வேன் என்றும் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கேரளா
140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.இதில், கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட கூடுதலாக 6 தொகுதிகளை கைப்பற்றி இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நெமம் தொகுதியை கூட பா.ஜ.க. இந்த தேர்தலில் இடது சாரியிடம் விட்டு கொடுத்து விட்டது.
இதனிடையே தேர்தல் வெற்றி குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், கேரளாவில் பாஜகவுக்கு இடமில்லை. வகுப்புவாதம் அல்லது மதவேற்றுமையை கேரளா ஏற்று கொள்ளாது என கூறியுள்ளார்.
தேர்தல் வெற்றி குறித்து சிபிஎம் கட்சியின் கோடியேரி பாலகிருஷ்ணன் கூறுகையில், “இடதுசாரி அரசின் மக்கள் சார்பு கொள்கை வாக்காளர்களைத் திருப்திபடுத்தியுள்ளதையே இது காட்டுகிறது.. இது மக்களின் வெற்றி. மோடி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கேரளாவில் தீவிர பிரசாரம் செய்தனர். இருப்பினும், அவர்கள் கைவசம் இருந்த ஒற்றை சீட்டையும் இழந்தனர். கேரள மக்கள் வகுப்புவாத சக்திகளைத் தோற்கடித்துள்ளனர்” என்றார்.
புதுச்சேரி
என்ஆர் காங்கிரஸ், பாஜக, அதிமுக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி புதுச்சேரியில் வெற்றி பெற்றுள்ளது. ரங்கசாமி புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்ற உள்ளார். புதுச்சேரியில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.புதுச்சேரியின் 30 தொகுதிகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையை என்.ஆர்.காங்கிரஸின் ஏகேடி. ஆறுமுகம் தட்டி சென்றுள்ளார்.
அசாம்
அசாம் சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 2வது முறையாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது 76 தொகுதிகளைக் கைப்பற்றி உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமதுவிடம் அளித்துள்ளார். 2வது முறையாக கேரளாவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அமைச்சரவை குறித்த முக்கிய முடிவுகள் அதில் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தாவில் உள்ள கட்சி தலைமையகத்தில் முக்கிய தலைவர்களுடன் மம்தா பானர்ஜி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆணவம், வலிமை, பணம், அரசியலில் ஜெய் ஸ்ரீ ராம் பயன்படுத்தும் உத்தி போன்றவை வீழ்ந்தது . மூன்றாவது முறையாக ஆட்சியை தொடர உள்ள மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துக்கள் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கூறியுள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் பதிவான அனைத்து வாக்குகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற என்ற திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை தேர்தல் ஆணையத்தின் அதிகாரி (ஆர்.ஓ) நிராகரித்துள்ளார். இந்த தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக சுவேந்து ஆதிகாரி வெற்றி பெற்றுள்ளார்.
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியமைக்க உள்ள நிலையில், தேசிய கட்சியான பாஜக 2-வது பெரியகட்சியாக உருவெடுத்துள்ளது.
ஈ.வி.எம் எண்ணிக்கையின்படி நந்திகிராமம் தொகுதியில், 1,736 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜியை சுவேந்து ஆதிகாரி தோற்கடித்தார். தற்போது, கட்டாய வி.வி.பி.ஏ.டி சரிபார்ப்பு நடந்து வருகிறது. அதன் பின்னரே முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JUST IN: Suvendu Adhikari defeats Mamata Banerjee by 1,736 votes in Nandigram as per EVM count. Currently, mandatory VVPAT verification is underway. Results to be officially announced only after that. @IndianExpress
— Ritika Chopra (@KhurafatiChopra) May 2, 2021
கேரளாவில் மீண்டும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியமைக்க உள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயனுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளர்.
மேலும் மேற்குவங்கத்தில் 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ள திரினாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations to Mamata Didi for @AITCofficial's win in West Bengal. The Centre will continue to extend all possible support to the West Bengal Government to fulfil people’s aspirations and also to overcome the COVID-19 pandemic. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
I would like to congratulate Shri @vijayanpinarayi and the LDF for winning the Kerala Assembly elections. We will continue working together on a wide range of subjects and to ensure India mitigates the COVID-19 global pandemic.
— Narendra Modi (@narendramodi) May 2, 2021
கேரளா சட்டமன்ற தேர்தலில், முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் 50,123 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பலத்த எதிர்பார்ப்புக்கடையே மேற்குவங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை இன்றும் முடியவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
The counting process for Nandigram has not been completed. Please do not speculate.
— All India Trinamool Congress (@AITCofficial) May 2, 2021
294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்ச சட்டசபை தேர்தலில் தற்போது ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 212 தொகுதிகளிலும், பாஜக 78 தொகுதிகளிலும் காங்கிஸ் கட்சி 01 இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தொடக்கத்தில் பெரும் பின்னடைவை சந்தித்த மம்தா பானர்ஜி அதன்பிறகு எழுச்சி கண்டு முன்னிலை பெற்ற நிலையில், தற்போது 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுவேந்து அதிகாரியை வீழ்த்தியுள்ளார்.
“நாங்கள் இரண்டாவது பதவிக்கு தயாராக இருக்கிறோம். 5 ஆண்டுகளில் எங்கள் முதல்வரின் தலைமையில் இதுபோன்ற வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. நாங்கள் பதவிக்கு திரும்புவோம் என்பதில் உறுதியாக இருந்தோம். அடுத்த சுகாதார அமைச்சர் யார் என்பதை முடிவு செய்வார்கள் என்று கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.
140 தொகுதிகள் கொண்ட கேரளாவில் கம்யூனிஸ்ட் கூட்டணி 93 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.
126 தொகுதிகள் கொண்ட அசாம் சட்டப்பேரவை தேர்தலில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அசாம் மக்கள் இரண்டாவது முறையாக பாஜக அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். என்று அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியான முடிவுகளின் படி, அசாமில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ 77 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கிராண்ட் அலையன்ஸ் 40 இடங்களில் முன்னணியில் உள்ளது
கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னனி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. சிபிஎம் 89 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
அஸ்ஸாமில் 1 மணி நிலவரப்படி பாஜக 4 இடங்கள் குறைந்து 79 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 5 இடங்கள் அதிகம் பெற்று 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 200 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது.
புதுச்சேரியில் 12 மணி நிலவரப்படி என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி 12 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
அஸ்ஸாமில் 12 மணி நிலவரப்படி, பாஜக 83 தொகுதிகளிலும், காங்கிரஸ் 42 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
கேரள சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் ஆளும் இடதுசாரி முன்னனி 86 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 50 தொகுதிகளிலும்,பாஜக 3 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 12 மணி நிலவரப்படி திரிணாமுல் காங்கிரஸ் 190 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அடுத்தபடியாக பாஜக 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றன.
கேரள காங்கிரஸ் தலைவர் கே.எம் மணி 50 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிப் பெற்று வந்த நிலையில், தற்போதைய வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். கேரள காங்கிரஸின் பலமாக கருதப்பட்ட கே.எம். மணி பின்னடைவில் இருப்பது, கேரள காங்கிரஸாரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் ஆளும் இடதுசாரியின் அமைச்சர்களான, ஷைலஜா, ஜலீல் உள்ளிட்ட அமைச்சரகள் பலரும் முன்னிலையில் உள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 164 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. பாஜக 121 தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் வேட்பாளர் அருண் திவாரி 4899 பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
அசாமில் பாஜக 80 தொகுதிளுக்கு மேல் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 36 இடங்களிலேயே முன்னிலையில் இருந்து வருவதால், அக்கட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவின் நெமாம் தொகுதியில் பாஜக வேட்பாளரான குமணம் ராஜசேகரனும், பாலாக்காடு வேட்பாளரான மெட்ரோமேன் ஸ்ரீதரனும் முன்னிலையில் உள்ளனர்.
தேர்தல் ஆணைய இணையதள தரவுகளின் படி, மேற்கு வங்கத்தில் திர்டிணாமுல் காங்கிரஸ் 45 இடங்களிலும், பாஜல 29 இடங்களிலு முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் மமதா பின்னடைவை சந்தித்து வருகிறார்.
கேரளாவின் மலப்புரம் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வி.வி.பிரகாஷ் கடந்த வாரம் மறைந்தார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் அவர் முன்னிலை பெற்று வருகிறார். இதனால், காங்கிரஸ் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.
மேற்கு வங்கத்தின் 100 தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
நந்திகிராமில் மமதாவை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வின் முதல்வர் வேட்பாளர் சுவேந்த அதிகாரி 3000 வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு வங்கத்தின் வட பகுதிகளில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் 6-ல் பாஜகவும், எஞ்சிய 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.
அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக 126 தொகுதிகளுக்கு தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் முதல்கட்டத் தகவலின்படி பாஜக 7 இடங்களிலும் காங்கிரஸ் அணி 3 இடத்திலும் முன்னணியில் உள்ளன
கேரளாவில் 114 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதல் சுற்று முடிவுகளானது காலை 9.15 மணியளவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேரளா, புதுவை, மேற்வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 104 – 120 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. பாஜ கட்சிக்கு 2 இடங்கள் வரை மட்டுமே கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கேரளாவில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 140 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
294 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டபேரவைக்கான வாக்குப்பதிவு 8 கட்டங்களாக நடைபெற்றது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.