/tamil-ie/media/media_files/uploads/2018/04/ttv-dhinakaran.jpg)
TTV Dhinakaran Press meet
தமிழ்நாட்டில் 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடும் என டிடிவி தினகரன் கூறினார். தேமுதிக.வுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
2019 மக்களவைத் தேர்தலுக்கு தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் மற்றொரு அணியும் அமைகின்றன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை எந்த அணியிலும் இடம் பெறவில்லை.
இந்தச் சூழலில் இன்று (பிப்ரவரி 22) சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சில கட்சிகளுடன் கூட்டணி பேசி வருகிறேன் என்று கூறினேன். உடனே தேமுதிக, பாமக என சிலர் நினைத்துவிட்டனர்.
இந்தக் கட்சிகளுடன் கூட்டணி பேசவில்லை. முதல்வர் வேட்பாளராக நின்று டெப்பாசிட் இழந்தவர்களும், மாற்றம் முன்னேற்றம் என நின்று தோற்றவர்களும் பெரிய கட்சி அல்ல. சில முக்கியமான ஆட்களுடன் பேசுகிறோம். அநேகமாக 38 தொகுதிகளில் அமமுக போட்டியிடும். வருகிற 28-ம் தேதி இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றார் டிடிவி தினகரன்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.