AMMK Common Symbol Live Updates: மக்களவைத் தேர்தலில் போட்டியிட குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது டி.டி.வி தினகரனின் அமமுக கட்சி.
ஆனால் அக்கட்சி முறையாக பதிவு செய்யப்படவில்லை என்பதால் அதற்கு சின்னம் ஒதுக்க முடியாது எனக் கையை விரித்தது தேர்தல் ஆணையம். இந்நிலையில் வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கப்படுமாறு தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
Live Blog
AMMK Common Symbol Live Updates
அமமுக பொதுச் சின்னம் ஒதுக்கீடு லைவ் அப்டேட்ஸ்
”இது பொல்லாத ஆட்சி அதற்கு பொள்ளாச்சியே சாட்சி
இது துப்புக்கெட்ட ஆட்சி அதற்கு தூத்துக்குடியே சாட்சி
இது தரிசாக்கும் ஆட்சி அதற்கு நெடுவாசலே சாட்சி
இது மனுதர்ம ஆட்சி அதற்கு நீட் தேர்வே சாட்சி
இது பாலைவன ஆட்சி அதற்கு மேகதாதுவே சாட்சி
இது ஊழல் ஆட்சி அதற்கு ரஃபேலே சாட்சி
இது நாணயம் கெட்டே ஆட்சி அதற்கு செல்லாத நோட்டே சாட்சி
இது கொள்ளைக்கார ஆட்சி அதற்கு ஜி.எஸ்.டி-யே சாட்சி
இது கொலைகார ஆட்சி அதற்கு கொடநாடே சாட்சி
இது மதவெறி ஆட்சி அதற்கு மாட்டுக்கறியே சாட்சி
இது வாயில் வடை சுடும் ஆட்சி அதற்கு மோடியே சாட்சி
இது எடுபிடி ஆட்சி அதற்கு எடப்பாடியே சாட்சி!”
என மதுரை பிரச்சாரத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசையும், மாநில அரசையும் விமர்சித்து கவிதை வாசித்தார்.
விசாரணையின்போது, ‘3 தொகுதிகளுக்கு தனியாக அறிவிப்பாணை வெளியிடுவதில் என்ன பிரச்னை? அடுத்தக்கட்ட தேர்தல்களின்போது நடத்தலாமே?’ என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இந்தத் தொகுதிகள் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெற்றுவிட்டதை திமுக சுட்டிக்காட்டியது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாப்டே, ‘ஒரு வழக்கு இருந்தால், அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தக்கூடாது என எங்கும் சொல்லப்படவில்லை. தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள்’ என குறிப்பிட்டார். எனினும் உடனடியாக தேர்தல் நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்.
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு அவசரகதியில் இடைத்தேர்தல் நடத்த முடியாது என இந்திய தேர்தல் ஆணையம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறது.
திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தேர்தல் ஆணையம் மேற்படி பதிலை தெரிவித்திருக்கிறது. ‘தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி இல்லாவிட்டாலும், அடுத்தக்கட்ட தேர்தல்களின்போது மேற்படி 3 தொகுதிகளுக்கும் நடத்தலாமே?’ என திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
ஆனால் தேர்தல் ஆணையம், ‘நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் அது சாத்தியமில்லை’ என கூறியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights