Advertisment

உதயநிதிக்கு இவ்வளவு அரசியல் ஞானமா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல் பேச்சு!

ஓ.பி.எஸ், இ பி எஸ் - யால் எப்படி ஆட்சி அமைக்க முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Udayanidhi Raised vck flag

Udayanidhi Raised vck flag

தேனியில் திமுக சார்பில் நடைப்பெற்ற ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பேச்சு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertisment

திமுக குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தை அடிக்கடி சந்திப்பது வழக்கம். திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி இருந்த காலத்தில் இருந்தே அவரின் வாரிசான ஸ்டாலின், அழகிரி,கனிமொழி என அனைவரும் திமுகவில் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுப்பட்டு வந்தனர்.

அவரின் மறைவுக்கு பின்பு மு. க ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்று கட்சி பணிகளை கவனித்து வருகிறார். இதற்கிடையில் சினிமாவில் நடிகராக, தயாரிப்பாளராக ஆர்வம் காட்டி வந்த ஸ்டாலின் மகனான உதயநிதி ஸ்டாலின் சமீப காலமாக அரசியல் சாந்த கூட்டங்களில் அதிகம் தென்படுகிறார்.

திமுக சார்பில் எந்த கூட்டம் நடைப்பெற்றாலும் அதில் உதயநிதி தலை தென்படுகிறது. அவருக்காக தனி கட் அவுட், பேனர் போன்ற நிகழ்வுகளும் அரங்கேறின. இதுக் குறித்த விமர்சனத்தை உதயநிதி சமூகவலைத்தளங்களில் சந்தித்தார்.

இந்நிலையில், தமிழகம் தேர்தலை சந்திக்க தயாராகி விட்டது. அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக சார்பில் கிராமங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், அதில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துக் கொண்ட உதயநிதி மக்களிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “ இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ஆட்சி மாற்றம் வரும். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், முதலமைச்சராவார். மக்களுக்கான திட்டங்கள் கிடைக்காமல் இருப்பதற்குப் பிரதமர் நரேந்திரமோடியே காரணம்.

மோடி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடிமகன் பேரிலும் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் போடப்படும் என்று சொன்னார். ஆனால் அதை அவர் சுருட்டிக்கொண்டு உலகத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறார். அவருக்கு அடிமைகளாக ஓ.பி.எஸ், இ பி எஸ், தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டுள்ளார்கள்.

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை நீக்காமல் ஓ.பி.எஸ், இ பி எஸ் - யால் எப்படி ஆட்சி அமைக்க முடியும். விரைவில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். திருமண மண்டபம், கழிவறை, குடிநீர் வசதி, டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூடுதல் போன்ற மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் திமுக செய்தே தீரும்” என்று கூறினார்.

Dmk Udhayanidhi Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment