நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் தங்கள் தகவல்களை பரிசோதித்துக் கொள்வதற்காக 1950 என்ற ஹெல்ப்லைன் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே தகவல்களை www.nvsp.in என்ற தளத்திலும் நீங்களும் தெரிந்து கொள்ளலாம்.
இலவச குறுஞ்செய்தி மூலம் தகவல்களை பெறுவது எப்படி?
வாக்காளர்கள், 1950 என்ற ஹெல்ப்லைன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் செய்து இலவசமாக தகவல்களை பெறலாம்.
முழு தகவல்களை பெற கீழ் கண்ட முறையை பின்பற்றவும்
ECI <0 (ஆங்கிலத்தில் ரிப்ளை செய்ய) or <1 (பிராந்திய மொழிகளில் ரிப்ளை செய்ய)
ECIPS
ECICONTACT
இந்த முறையின் மூலம் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.
வாக்காளர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயரை இணைப்பது எப்படி?
www.nvsp.in என்ற தளத்தின் மூலம் படிவம் 6-ஐ பூர்த்து செய்து விண்ணப்பிக்கலாம். மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது அந்த விண்ணப்பத்தை ERO அலுவகத்திற்கு அனுப்பியும் விண்ணப்பிக்கலாம்.
அதேபோன்று, வாக்காளர் பட்டியலில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ளவிருந்தால், படிவம் 8-ஐ பூர்த்தி செய்து, மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது அந்த விண்ணப்பத்தை ERO அலுவகத்திற்கு அனுப்பியும் விண்ணப்பிக்கலாம்.
அதேபோல், மேலும் சில திருத்தங்களுக்கு 8A படிவத்தை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க - வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள பிப்ரவரி 23,24 தேதிகளில் சிறப்பு முகாம்