Varanasi Candidates List : உத்திரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதிக்கான தேர்தல் ஏழாவது கட்டமாக மே 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்காக பாஜக சார்பில் நரேந்திர மோடி வருகின்ற 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 25 மற்றும் 26ம் தேதிகளில் வாரணாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள பிரதமர், பின்பு 26ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
மோடிக்கு எதிராக களம் இறங்குவாரா பிரியங்கா காந்தி?
முதல் நாள் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்த கையோடு, தஷஸ்வமேத் காட்டிற்கும் இவர் செல்ல உள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி வராணாசி தொகுதியில் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உத்திரப் பிரதேசம் கிழக்கு பிராந்தியத்தின் தேர்தல் பொறுப்பாளராக முதன்முறையாக கட்சியில் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
நீதிபதி கர்ணன்
வாரணாசியில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி கர்ணன் போட்டியிட உள்ளார். இந்தியாவிலேயே, நீதிமன்ற அவமதிப்பிற்காக சிறை சென்ற நீதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டி கரப்ஷன் டைனமிக் பார்ட்டி என்ற கட்சியின் சார்பில் அவர் களம் இறங்க உள்ளார்.
பீம் ஆர்மி தலைவர் வழக்கறிஞர் சந்திரசேகர் ஆசாத்
வாரணாசியில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கூட்டணி தகுதியான ஆளை களம் இறக்கவில்லை என்றால் சுயேச்சையாக இங்கு போட்டியிடுவேன் என்று பீம் ஆர்மியின் தலைவர் மற்றும் ராவண் என்று உள்ளூர் மக்களால் நன்கு அறியப்பட்ட சந்திரசேகர் ஆசாத். உத்திரப் பிரதேசம் மாநிலம், மீரட் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ஆசாத் முப்பது வயதுமிக்க தலீத் வழக்கறிஞர் ஆவார்.
மோடியை போலவே உருவ அமைப்பு கொண்ட அபிந்தந்தன் பதக் வாரணாசியில் போட்டியிடுகிறார். வாரணாசி மட்டுமில்லாமல் லக்னோவிலும் சுயேச்சையாக போட்டியிடும் இவர், ராகுல் காந்திக்கு ஆதரவு அளிப்பார் என்றும் கூறியுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/04/t4npsht8_abhinandan-pathak-ani_625x300_13_April_19.jpg)
தேஜ் பகதூர் யாதவ்
எல்லை பாதுகாப்பு படையில் ராணுவ அதிகாரியாக பணியாற்றி வந்தவர் தேஜ் பகதூர் யாதவ். 2017ம் ஆண்டு ராணுவத்தில் இருக்கும் வீரர்களுக்கு சரியான முறையில் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியவர். அதனால் அவர் பணியில் இருந்து நீக்கமும் செய்யப்பட்டார். அவரும் வாரணாசியில் நரேந்திர மோடிக்கு எதிராக போட்டியிடுகிறார்.
தமிழ் நாட்டில் 111 விவசாயிகளின் சார்பில் அய்யாக்கண்ணு போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் அவர்கள் பாஜகவின் தலைவர் அமித் ஷாவை பார்த்து வந்த பின்னர் தங்களின் முடிவை மாற்றிக் கொண்டனர். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமித் ஷா கூறியதால் இம்முடிவு எட்டப்பட்டதாக கூறியிருந்தார் அவர்.
மேலும் படிக்க : என்னது நானா? அதுவும் மோடிக்கு எதிராகவா? இல்லவே இல்லை : அய்யாக்கண்ணு பல்டி!