/tamil-ie/media/media_files/uploads/2019/04/cats-16.jpg)
Varanasi Congress Candidate Name Announced
Varanasi Congress Candidate Name Announced Ajay Rai Vs Narendra Modi : உத்திரப் பிரதேசம் கிழக்கு பிராந்தியத்தின் தேர்தல் பொறுப்பாளராக ஜனவரி 23ம் தேதி காங்கிரஸ் கட்சியால் அறிவிக்கப்பட்டார். அன்றிலிருந்து, இன்றைய நாள் வரை, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும், வாரணாசியில், பிரதமர் மோடியை எதிர்த்து களம் இறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ரேபரேலியில் பிரியங்கா காந்தியை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று தொண்டர்கள் ஆரம்ப காலம் முதலே விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் தான், அவர் அரசியலுக்கு வந்தார். கிழக்கு உத்திரப்பிரதேசத்தில் அவர் மேற்கொண்ட பயணங்கள் மற்றும் பிரச்சாரங்களை பார்த்த போது, பலரும் நினைத்தனர் அவர் நிச்சயமாக வாரணாசியில் போட்டியிடுவார் என்று.
அதிகாரப்பூர்வ தகவல்
இந்நிலையில் இன்று காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர். அதன்படி கோரக்பூரில் மதுசூதன் திவாரி மற்றும் வாரணாசியில் அஜய் ராய் போட்டியிடுகிறார்.
Congress Central Election Committee announces the next list of candidates for the ensuing elections to the Lok Sabha from Uttar Pradesh. pic.twitter.com/zyol8wPd06
— Congress (@INCIndia) 25 April 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.