Viralimalai Constituency fight between ADMK DMK candidates : புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மின்னணு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். காலையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் ஒரு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும், அதில் இருந்து வாக்குகளை எண்ணக்கூடாது என்றும் திமுகவினர் முறையிட்டனர். 6ம் நம்பர் மேசையில் வைக்கப்பட்டிருக்கும் ஓட்டு பெட்டியில் நாடா இல்லை என்றும் நம்பர் காணவில்லை என்றும் திமுக, அமுமுக உறுப்பினர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் கூறினர். ஆனால் அந்த வாக்கு இயந்திரத்தில் பதிவாகி இருக்கும் வாக்குகளை சேர்த்து எண்ணி முன்னிலை நிலவரம் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிடும் தொகுதி என்பதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் தொழில்நுட்ப காரணத்தை மேற்கோள்காட்டி திமுகவினர், அதிமுகவினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த காரணத்தால் அங்கே ஒரு மணிநேரத்திற்கும் மேலாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் இந்த தோகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். திமுக வேட்பாளாரும் இந்த தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். அவர் 2011 தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு கணிசமான வாக்குகளுடன் 3-வது இடத்தை பிடித்தார். அதன்பின் திமுகவில் சேர்ந்த பழனியப்பன், 2016 ஆண்டு தேர்தலின் போது இந்த தொகுதியில் வெறும் 8,477 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபாஸ்கரிடம் தோல்வியை தழுவினார் பழனியப்பன்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil