/tamil-ie/media/media_files/uploads/2019/04/Voter-ID-Alternatives-.jpg)
Voter ID Card Alternatives
Voter ID Card Alternatives : சிலர் தற்போது தான் வாக்காளர் அடையாள அட்டைக்கு எழுதி கொடுத்திருப்பீர்கள். உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும். ஆனால் கையில் அடையாள அட்டை இல்லாமல் எப்படி வாக்களிப்பது என்று குழம்பியிருப்பீர்கள். முன்பு போல் பூத் சிலிப்புகளை வைத்தும் தற்போது வாக்களிக்க இயலாது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களித்து உங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றலாம். மத்திய அரசு அளித்திருக்கும் இந்த அடையாள அட்டைகள் உங்களிடம் இருந்தால் நீங்கள் நிச்சயமாக ஓட்டு போடலாம்.
Voter ID Card Alternatives - ஆதார் கார்ட்
பயோமெட்ரிக் டேட்டாவைக் கொண்டுள்ள இந்த அடையாளா அட்டையை வைத்து நீங்கள் வாக்களிக்கலாம். 12 இலக்க எண்கள் கொண்ட இந்த அடையாள அட்டை உங்களுக்கு பெரிதும் உதவும்.
பாஸ்போர்ட்
இந்திய பிரஜைகளுக்கு, இந்திய குடியரசுத் தலைவர் அலுவலகம் வழங்கும் அடையாள அட்டை இது. வெளிநாடுகளுக்கு செல்ல கடவுச்சீட்டு அடையாள அட்டையாக இருக்கும் இதனை பயன்படுத்தி நீங்கள் வாக்களிக்கலாம்.
ஓட்டுநர் உரிமம்
ஓட்டுநர் உரிமம் ஒரு அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும். இதனை பயன்படுத்தியும் நீங்கள் வாக்களிக்கலாம்.
சர்வீஸ் அடையாள அட்டை
மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு அளிக்கப்படும் இந்த அடையாள அட்டையை பயன்படுத்தி நீங்கள் வாக்களிக்கலாம்.
அதே போல் வங்கி கணக்கு அட்டை, பென்சன் டாக்குமெண்ட், நிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பேன் கார்ட், ஸ்மார்ட் கார்ட், நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, பீமா யோஜனா அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தியும் நீங்கள் வாக்களிக்க முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.