Ravik Bhattacharya , Amitava Chakraborty
west bengal assembly elections 2021 mamata as durga on TMC smartphone screens
சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் சிதல்குச்சியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வெளியே துப்பாக்கிச் சூட்டில் 4 டி.எம்.சி. தொண்டர்களை கொல்லப்பட்டதை தொடர்ந்து அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய வேலையை துவங்கினார் சயந்தீப் கோஸ்வாமி. சரியாக ஏப்ரல் 10 காலை 11 மணி அளவில் இந்த வேலையை அவர் துவங்கினார்.
29 வயதான திரிணாமுல் மாணவர் தலைவரும், மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரில் உள்ள அவரது சகாக்களும் வாட்ஸ்அப்பில் இந்த சம்பவம் குறித்த செய்திகளை வெளியிட்டு பரப்பத் தொடங்கினர். ஒரு குரூப்பில் இருந்து மற்றொரு வாட்ஸ்ஆப் குரூப்பிற்கு செய்திகள் பரவியது. மமதா பானர்ஜீ கருப்பு நாளை கடைபிடிக்க கூறி வலியுறுத்தியது துவங்கி, இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் மமதா பேசுவது, இறந்தவர்களின் உடல், சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரை அனைத்தையும் பரப்பினார்கள்.
ஸ்மார்ட்போனை பாஜக மட்டுமே தேர்தல் பிரச்சார கருவியாக மாற்றவில்லை. மேற்கு வங்கத்தில் ஐந்தாம் கட்ட சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தொடர்ந்து டி.எம்.சி. தங்களின் ஆன்லைன் நடவடிக்கைகளை அதிகரித்து வருகிறது.
2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 45 வாட்ஸ்ஆப் குழுக்களில் கோஸ்வாமி உறுப்பினராக இருந்தார். தற்போது 150 குழுக்களில் அவர் இடம் பிடித்துள்ளார். அதில் 12 குழுக்களுக்கு அட்மினாகவும் அவர் இருக்கிறார். 2019ம் ஆண்டு பாஜகவின் சமூக வலைதள உந்தல்களுக்கு எங்களால் ஈடு தர முடியவில்லை. கட்சி அதன் பாடங்களை கற்றுக் கொண்டது. தற்போது, சமூக வலைதள பிரச்சாரங்கள் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளை போன்றே முக்கியமானதாக உள்ளது.
மேலும் படிக்க : முகக்கவசம் கட்டாயம்; விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ. 2.5 கோடி அபராதம் வசூல்
பாஜக குழுக்களில் இருப்பவர்களைப் போன்றே, திரிணாமுல் காங்கிரஸ் குழுவில் இருப்பவர்களும் நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்ற சனிக்கிழமைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பகிர்ந்து கொண்டனர்.
மாநில அரசின் திட்டங்கள், மமதா பானர்ஜீயின் உரையாடல்கள் என 22 வீடியோக்களுடன் மொத்தமாக 60 குறுஞ்செய்திகள் பகிரப்பட்டுள்ளது. ஒரு மீமில் மமதா பானர்ஜி துர்கையாக காட்சி தருகிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கிரித்ரநாத் பர்மான் தாக்கப்பட்ட 10 புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன.
நரேந்திர மோடி உட்பட பல பாஜக தலைவர்களை குறிவைத்து அனுப்பப்பட்ட செய்திகளும் அதில் இடம் பெற்றிருந்தது. பாஜக மாநில செயலாளர் திலிப் கோஷை குறிக்கும் 8 மீம்களும், முஸ்லிம் வாக்குகளைப் பிரிக்க பாஜகவும் புதிதாக அமைக்கப்பட்ட இந்திய மதச்சார்பற்ற முன்னணியின் அப்பாஸ் சித்திக்கும் இருப்பதாக குற்றம் சாட்டிய ஒரு செய்தியும் அவற்றில் அடங்கும்.
பாஜக பங்கேற்ற, ஆட்களே இல்லாத பேரணியின் 12 புகைப்படங்களும் அதில் இடம் பெற்றுள்ளது. சுவேந்து அதிகாரி மற்றும் ரஜீப் பனார்ஜி போன்ற டி.எம்.சி. கட்சியில் இருந்து பாஜகவிற்கு கட்சி தாவிய தலைவர்கள் குறித்து மீம்களும் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து பாஜக மிகவும் அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளதாகவும் கூறும் செய்தித்தாள் புகைப்படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
அது தவிர, வகுப்புவாத நல்லிணக்கம் குறித்த செய்தியும், பூத் முகவர்களுக்கான வாக்கெடுப்பு அறிவிப்பு குறித்த தகவல்களும் அதில் இடம் பெற்றுள்ளன. கட்சி குழுக்கள் மட்டுமின்றி கூச் பெஹாரில் உள்ள க்ளப்கள், சுற்றுப்புறங்கள், மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான குழுக்களை டி.எம்.சி. உருவாக்கியுள்ளது. பாஜக சமூக வலைதள குழுக்களில் தொழில்முறை நிபுணர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. ஆனால் நாங்கள் இப்போது அதனை அறிந்து விட்டோம். கூச் பெஹாரில் பாஜக சமூக வலைதள குழுக்கள் மக்களின் எண்ணங்களை மாற்ற இனவாத செய்திகளை பரப்புகிறது. நாங்கள் அந்த செய்திகளுக்கு மாறாக இனவாத நல்லிணக்க செய்திகளை பரப்புகிறோம் என்று கோஸ்வ்வாமி கூறுகிறார். அவர் தற்போது கூச் பெஹாரின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சத்ரா பரிஷாத்தின் துணை தலைவராக உள்ளார்.
மேலும் படிக்க : ‘4 பேர் இல்லை, 8 பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்’- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
லாக்டவுனில் நாங்கள் நிறைய ஆலோசனை கூட்டங்களை நடத்தினோம். நிறைய வீடியோக்களை எடிட் செய்து பயன்படுத்தும் செயலிகள் குறித்து அறிந்து கொண்டோம். பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவினர் கூச் பெஹாரில் உள்ள கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர் என்றார் அவர்.
வைரல் வீடியோக்கள் தான் இம்முறை பிரச்சாரத்தில் மிக முக்கிய பங்காற்றியது. ஹேலோ ஹோப் எனப்படும் இந்த வீடியோ ஜனவரி 7ம் தேதி காட்சி படுத்தப்பட்டது. கூச் பெஹாரில் உள்ள ஆச்சர்யா ப்ரோஜெந்திரா நாத் சீல் கல்லூரியில் கோஸ்வாமி போன்ற பல உள்ளூர் தொண்டர்கள் இதற்கு அவர்களின் குரல்களை பதிவு செய்துள்ளனர். “நாங்கள் படப்பிடிப்புக்கு ஒரு ட்ரோனைப் பயன்படுத்தினோம். நான் கோரஸில் இருந்தேன். இது வைரலாகிவிடும் என்று நாங்கள் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை, ”என்று டி.எம்.சி.பி உறுப்பினர் முகமது ருக்சாத் (28) கூறுகிறார்.
தங்களின் “ரீச்” அதிகரிப்பதை கட்டுப்படுத்த பாஜக சந்தேகத்திற்குரிய நடைமுறைகளை பின்பற்றுகிறது என்று குற்றம் சுமத்துகிறார்கள் டி.எம்.சி. உறுப்பினர்கள். உண்மையில் இரண்டு கட்சிகளும் மோசமாக விளையாடுவதாகவும் தவறான செய்திகளை பரப்புவதாகவும் பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனர். குழுக்கள் மற்றும் ப்ரோஃபைல்களை ரிப்போர்ட் செய்ய அவர்கள் போலியான கணக்குகளை உருவாக்கியுள்ளன. ஆனால் தற்போது அவர்களுக்கு எதிராக ரிப்போர்ட் செய்ய எங்களுக்கும் கனக்குகள் உள்ளன என்று அபிஷேக் சந்தா கூறினார். கூச் பிஹாரில் மாணவராக உள்ளா அவர் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக தயாராகி வருகிறார்.
டி.எம்.சி எம்.பி அபிஷேக் பானர்ஜி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற போது அங்கு மக்களே இல்லாதது போன்ற புகைப்படங்கள் வைரலாக பரவியது. ஆனால் அவர் கிளம்பி சென்ற போது அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. 10 நிமிடங்களில், எங்களின் தொண்டர்களிடம் இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்பினோம் என்று 29 வயதான ரபியுல் அலி கூறினார். கூச் பெஹாரின் டி.எம்.சி.பி. துணை தலைவர் ஆவார்.
பாஜக சோசியல் மீடியா செல் உறுப்பினர்களைப் போலவே டி.எம்.சி. உறுப்பினர்களும் பிரதான ஊடகங்களை நம்பி இருக்கவில்லை. . “முன்னதாக, எங்கள் செய்திகளை வெளியிடுவதற்காக நாங்கள் ஊடக நிறுவனங்களுக்குச் சென்றோம். இப்போது, சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் ஆயிரக்கணக்கானவர்களை நாம் அணுகலாம், ”என்கிறார் சாந்தா.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil