Advertisment

காங்கிரஸ் மதச்சார்பின்மையை கேள்வி கேட்பதா? ஆனந்த் சர்மாவுக்கு ரஞ்சன் சவுத்ரி பதிலடி

West bengal Election 2021 News : பிரதமர் புகழ் பாடுவதை முதலில்  நிறுத்தத் தொடங்குகள். கட்சியை வலுப்படுத்த நீங்கள் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்கள்

author-image
WebDesk
New Update
காங்கிரஸ் மதச்சார்பின்மையை கேள்வி கேட்பதா? ஆனந்த் சர்மாவுக்கு ரஞ்சன் சவுத்ரி பதிலடி

Manoj C G

Advertisment

கொல்கத்தாவில் நடைபெற்ற பிரமாண்ட தேர்தல் பேரணியில் மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் இஸ்லாமிய  மதகுருவுடன் மேடையை பகிர்ந்து கொண்டதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கண்டனம் தெரிவித்தார். இது, காங்கிரஸின் அடிப்படை சிந்தாந்தங்களுக்கு எதிராக அமைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கடிதம் எழுதிய, 23 அதிருப்தி தலைவர்களில், ஆனந்த் சர்மா முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கம் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள ஃபர்ஃபுரா ஷெரீப் ஆலய மதகுரு அப்பாஸ் சித்திக் ஜனவரி மாதம் தொடங்கிய இந்திய மதச்சார்பற்ற முன்னணியுடன்  (ஐ.எஸ்.எஃப்)  கூட்டணி அமைக்க காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனந்த் சர்மாவின் இந்த கருத்துக்கு, மக்களவை காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி  கடும் கண்டனம் தெரிவித்தார். இத்தகைய விமர்சனம் பாஜகவின் பிரித்தாளும் யுக்திக்கு வலுசேர்ப்பதாய் அமையும் என்று கூறினார்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து, ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியுடன் அப்பாஸ் சித்திக்  பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணியில் முறைப்படி இணைந்தார்.

இந்த பேரணியில் ரஞ்சன் சவுத்ரி, சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகேல், மேற்கு வங்க  காங்கிரஸ் பொறுப்பாளர் ஜிதின் பிரசாதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த சனிக்கிழமை, ஜம்மு-காஷ்மீரில் 23 அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பேரணியில்,  மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆனந்த் சர்மா, கபில் சிபல், மணீஷ் திவாரி, முன்னாள் ஹரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜ் பப்பர், இந்நாள் மாநிலங்களவை உறுப்பினர் விவேக் தங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் கட்சியின் கூட்டுத் தலைமைக்கு  நிறுவன ரீதியான பொறிமுறையை (institutional mechanism) உருவாக்க வேண்டும் , கட்சியின் அனைத்து மட்டங்களிலும் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 23 அதிருப்தி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.

திருப்புமுன்னையாக, இந்த 23 அதிருப்தி குழுவில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவானை அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சி வேட்பாளர் நியமனக் குழுவின் தலைவராக காங்கிரஸ் தலைமை திங்களன்று நியமித்தது.

அப்பாஸ் சித்திகின் இந்திய மதச்சார்பற்ற முன்னணி போன்ற சக்திகளோடு கூட்டணி அமைப்பது, காங்கிரஸின் ஆன்மாவாக விளங்கும் காந்தியாவாதத்துக்கும், நேருவியன் மதச்சார்பின்மைக்கும் எதிராக அமைகிறது.

இதுபோன்ற முடிவுகளை காங்கிரஸ் செயற்குழு  அங்கீகரிக்க வேண்டும். வகுப்புவாதத்திற்கு எதிரான போரில் காங்கிரஸ் ஒருதலைபட்சமாக செயல்பட  முடியாது. மதங்களையும், வண்ணங்களையும்  பொருட்படுத்தாமல் அனைத்து வெளிப்பாடுகளிலும் தெரிய வேண்டும். மேற்கு வங்க மாநிலத் தலைவர் (சவுத்ரி) முன்னிலை வகித்தது வேதனையானது.  வெட்கக்கேடானது. தெளிவான பதில் தரவேண்டும், ”என்று சர்மா ட்விட்டரில் பதிவிட்டார்.

அஸ்ஸாமில் பத்ருத்தீன் அஜ்மலின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (AIUDF) மற்றும் கேரளாவில்  இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் (ஐ.யூ.எம்.எல்) உடனான காங்கிரஸ் கூட்டணி குறித்து கேள்விக்கு தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு பதிலளித்த அவர், “ அந்த கூட்டணி கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. வரலாற்று ரீதியாக இது அமைந்துள்ளது. கடந்த காலங்களில் காங்கிரஸ் செயற்குழு ஒப்புதல் அளித்துள்ளது. கேரளாவில் செயல்பட்டு வரும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் ஒரு அங்கமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளது" என்று ட் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா ஆட்சி அதிகாரத்தில் சிவசேனா கட்சியுடன்  காங்கிரஸ் அங்கம் வகிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த சர்மா, “நாங்கள் ஒரு கூட்டணி பங்காளி அல்ல… நாங்கள் ஒன்றாக தேர்தலில் போட்டியிடவில்லை. மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான ஏற்பாடாக அது அமைந்தது. ஆனால், மேற்கு வங்க கூட்டணி குறித்து ஒருபோதும் கட்சி செயற்குழுவில் விவாதிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

ஷர்மாவின் கருத்துகளுக்கு கடுமையாக பதிலளித்த சவுத்ரி, "கள நிலைமையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவது  நியாயமில்லை" என்று தெரிவித்தார்.

"வங்காளத்தில் கூட்டணிக்கு தலைமை தாங்குவது இடதுசாரிகள் தான். நாங்கள் இடதுசாரி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாஜக மற்றும் மமதா பேனர்ஜிக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒன்றிணைக்கும் சூழலை உருவாக்க விரும்பிகிறோம். சிபிஎம் கட்சியின் மதச்சார்பற்ற அரசியலை யாரும் கேள்வி கேட்க முடியாது, ”என்று  கூறினார்.

"தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பின், அப்பாஸ் சித்திகின் இந்திய மதச்சார்பற்ற கட்சிக்கு 30 இடங்களை வழங்க சிபிஎம் ஒப்புக் கொண்டுள்ளது. மேலும்,  காங்கிரஸுக்கு 92 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடதுசாரிகளுக்கு எதிரான நிலைப்பாடை அவர்கள் ஏன் எடுக்க வேண்டும். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக பேசுவதாக நான் நினைக்கவில்லை. மேடையில், சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் இருந்தனர். காங்கிரசும் அழைக்கப்பட்டது. அப்பாஸ் சித்திக் கட்சியும்  அழைக்கப்பட்டது. இடதுசாரிகளின் அழைப்பின் பேரில் நாங்கள் மேடையை பகரிந்து கொண்டோம் . அப்படி இருக்கையில், இதுபோன்ற ஆனந்த் சர்மாவின் இதுபோன்ற அரசியல் நிலைப்பாட்டிற்கு காரணம் என்ன? அவர்கள் யாரை வலுப்படுத்த விரும்புகிறார்கள்.  வகுப்புவாத சக்திகளையா? (அ) மதச்சார்பற்ற சக்திகளையா?, ”என்று சவுத்ரி கூறினார்.

அப்படியானால், அப்பாஸ் சித்திக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி  என்று எடுத்துக் கொள்ளலாம என்று கேள்விக்குப் பதிலளித்த அவர், "இது சரியான கேள்வியாக இருக்க முடியாது. 92 சட்டமன்றத் தொகுதிகள் காங்கிரஸுக்கு இடதுசாரிகள் வழங்கியுள்ளது. இந்த, மாபெரும் மக்கள் சக்தியை இடதுசாரிகள் முன்னெடுத்து  செல்கிறது. அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒன்றிணைப்பது தான் யோசனை. இதில், நாம் என்ன செய்ய முடியும்? ” என்று பதிலளித்தார்.

Anand Sharma attacks Adhir Ranjan Chowdhury on alliance with Bengal cleric, he hits back

 

சுட்டுரையில் கருத்தை பதிவிடுவதற்கு முன்பு சர்மா  தன்னுடன் கலந்து பேசியிருக்கலாம் என்று சவுத்ரி வேதனை கொண்டார். “ஒருவேளை அவர்கள் கள யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். அல்லது, காங்கிரஸின் மதச்சார்பற்ற பிம்பத்தை கெடுக்க விரும்புகிறார்கள். அவர் (சர்மா) ட்வீட் செய்வதற்கு முன்பு என்னுடன் பேசியிருக்கலாம். நாமெல்லாம் ஒரே கட்சியில் ஒன்றாக பயணித்து வரும் சக ஊழியர்கள். முழு சூழ்நிலையையும் நான் அவருக்கு விளக்கியிருப்பேன். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்க ஒன்றுமே இல்லை. ஒரே கட்சியில் இருந்து கொண்டு, என்னுடன் பேச சிரமப்படுவது விந்தையானது” என்று தெரிவித்தார்.

இதனிடையே, சவுத்ரி  தனது ட்விட்டர் பக்கத்தில் ( உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் ஆனந்த் சர்மா ஜி ) என்று அடிக்கோடிட்டு சில தொடர்ச்சியான ட்வீட்களை பதிவு செய்தார்.

 

 

"# விசத்தன்மை பொருந்திய பாஜகவின் வகுப்புவாத திட்டங்களுக்கு எதிராக போராட உறுதிபூண்டுள்ளவர்கள், ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் தீவிர அரசியல் பிரசாரத்தை ஆதரிக்க வேண்டும். பாஜக எண்ணங்களோடு ஒத்துப்போகும் கருத்துக்களால் காங்கிரஸ் கட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த வேண்டாம்," என்று பதிவிட்டார்.

பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி ஞாயிற்றுக்கிழமை பாராட்டிய ஆசாத் மீது சவுத்ரி ஒரு பொட்ஷாட் எடுக்கத் தோன்றினார். "பிரதமர் புகழ் பாடுவதை முதலில்  நிறுத்தத் தொடங்குகள். கட்சியை வலுப்படுத்த நீங்கள் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்கள்.  நிழல் தந்த மரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடாது ”என்றும் பதிவிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamilt.me/ietamil

West Bengal Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment