Advertisment

இடதுசாரி வாக்கு வங்கியை குறி வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

மமதாவின் அறிக்கைக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. அவருடைய நிலைப்பாடு நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும். நாங்கள் அதனை நினைத்து கவலைப்படுவதில்லை.

author-image
WebDesk
New Update
இடதுசாரி வாக்கு வங்கியை குறி வைக்கும் திரிணாமுல் காங்கிரஸ்

With ‘don’t waste your vote’ appeal, TMC looks to poach Left votebank : சட்டமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க இருக்கும் ஒரே பலம் வாய்ந்தகட்சி என்று தன்னை காட்டிக் கொண்டதோடு மட்டும் அல்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் தற்போது மீண்டும் ஆட்சிக்கு வர இடதுசாரி வாக்கு வங்கியை குறிவைத்து நகர்கிறது.

Advertisment

கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிடும் போது, முதல்வர் மமதா பானர்ஜி, பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள். சி.பி.எம். கட்சிக்கு ஆதரித்து உங்களின் வாக்குகளை வீணடிக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.

முன்னதாக பாஜகவிற்கு இடதுசாரி உதவுகிறது என்று விமர்சனம் செய்த அவர், பாஜகவை தோற்கடிக்க பிரச்சாரம் செய்வேன் என்று கூறிய சி.பி.ஐ. எம்எல் (லிபரேசன்) கட்சியின் பொதுசெயலாளர் திபங்கர் பட்டாச்சார்யாவை வாழ்த்தினார்.

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் வீழ்ச்சிக்கு பின்னாளில் இருந்து இது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இடதுசாரி முன்னணி 29% வாக்குகளை பெற்றது. அதன் கூட்டணிகளை கருத்தில் கொண்டால் 40% வாக்குகளை கொண்டது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இடது முன்னணி வாக்குகள் 7% ஆக குறைந்தது. அக்கட்சியின் பாரம்பரிய வாக்குகள் பாஜகவிற்கு சென்றதை அது உறுதி செய்தது. இடது முன்னணியின் கூட்டணி கட்சிகளை கணக்கில் கொண்டால் அதன் வாக்கு வங்கி 12% ஆக இருந்தது.

மேலும் படிக்க : கோவில்பட்டியில் வெற்றி யாருக்கு?

மற்றொரு கவலை என்னவென்றால் சி.பி.ஐ.(எம்) யாரை தேர்வு செய்வது என்று தெரியாமல் #NoVoteForBJP என்று ட்ரெண்ட் செய்து வருகிறது. அக்கட்சியின் தலைவர்கள், இந்த பிரச்சாரம் திரிணாமுல் காங்கிரஸிற்கு வலுசேர்க்கும் என்று ஒப்புக் கொண்டனர்.

2011ம் ஆண்டு நந்திகிராம் மற்றும் சிங்கூர் பகுதியில் நடைபெற்ற நில இயக்கங்களால் பானர்ஜீக்கு ஆதரவு தந்த சி.பி.ஐ(எம்) தலைவர்கள் முட்டாள்களாக்கப்பட்டனர். ஆனால் இந்த முறை மக்கள் இந்த யுத்திகள் குறித்து நன்றாக அறிந்து கொண்டனர் என்றார்.

காங்கிரஸ், இடது முன்னணி மற்றும் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐ.எஸ்.எஃப்) கூட்டணி பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும் என்று ஒரு மூத்த திரிணாமுல் தலைவர் கூறியுள்ளார். ஐக்கிய முன்னணி வெற்றி பெறும் நிலையில் இல்லை என்ற போதிலும் பாஜகவிற்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்களின் வாக்குகளை நாங்கள் பெறுவதில் இருந்து தடுக்கும். மற்றொரு கையில், ஐ.எஸ்.எஃப் கட்சியுடனான கூட்டணி எங்களுக்கான இஸ்லாமிய வாக்குகளை பெறும். இந்த இரண்டு சாத்திய கூறுகளும் எங்களை பாதிக்கும். அதனால் தான் நாங்கள் உங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். பாஜகவை நிறுத்த வேண்டும் என்றால் எங்களுக்கு ஆதரவு தாருங்கள். எங்களால் மட்டுமே பாஜகவை எதிர்க்க முடியும் என்று கூறியுள்ளார். ஃபுர்ஃபுரா சாரிஷ்பின் பிர்ஸாதா அப்பாஸ் சித்திகி தலைமையிலான ஐ.எஸ்.எஃப். நான்கு மாவட்டங்களில் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளை பெற முடியும். 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இஸ்லாமியர்கள் மொத்த மக்கள் தொகையில் 27%-ஆக உள்ளனர்.

பொலிட்பீரோ உறுப்பினர் முகமது சலீம் திரிணாமுல் காங்கிரஸின் கூற்றிற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று கூறினார். மமதாவின் அறிக்கைக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை. அவருடைய நிலைப்பாடு நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கும். நாங்கள் அதனை நினைத்து கவலைப்படுவதில்லை. இரண்டு கட்சிகளும் மக்களின் பிரச்சனைகளை பேசவில்லை ஆனால் நாங்கள் பேசுவோம் என்று பிரச்சாரங்களில் கூறி வருகிறோம் என்றார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

West Bengal Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment