scorecardresearch

100 Movie: மீண்டும் தள்ளிப் போன அதர்வாவின் ‘100’ – துக்கத்தில் இயக்குநர்

Atharva’s 100 Movie: குறித்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லையே என வேதனைப்படுகிறேன்

Atharvaa 100 movie

Atharvaa’s 100 Movie: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் முதன் முதலில் ’பென்சில்’ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும், முதலில் ரிலீஸ் ஆன திரைப்படம் ‘டார்லிங்’.

இதனை இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கியிருந்தார். பின்னர் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ திரைப்படத்தை இயக்கினார்.

தற்போது ‘100’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் அதர்வா முதன் முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். ஹீரோயினாக ஹன்சிகாவும், முக்கிய வேடங்களின் யோகி பாபு மற்றும் ராதாரவியும் நடித்துள்ளார்கள்.

இதனை ஆரோ சினிமாஸ் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர். கடந்த 3-ம் தேதி ’100’ திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஃபைனன்ஸ் பிரச்னைகளில் சிக்கியதால் அப்போது ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.

இந்நிலையில் 9-ம் தேதியான இன்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கும் ரிலீஸ் ஆகாமல் போயிருக்கிறது.

இது குறித்து ட்விட்டரில், “100 திரைப்படம் குறித்து அற்புதமான விமர்சனங்களைக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நானும் எனது குழுவினரும் இந்தப் படத்திற்காக உடலையும் ஆன்மாவையும் ஒன்றாக செலுத்தி பணியாற்றியிருக்கிறோம்.

குறித்த நேரத்தில் படத்தை ரிலீஸ் செய்ய இயலவில்லையே என வேதனைப்படுகிறேன். மன்னிக்கவும். இன்று ‘100’ திரைப்படம் வெளியாகாது. எனது வேலை முடிந்துவிட்டது. ’கூர்கா’வுக்கு செல்கிறேன்” என பதிவிட்டிருக்கிறார் சாம் ஆண்டன்.

யோகிபாபுவை வைத்து கூர்கா படத்தை சாம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: 100 movie atharva murali sam anton tamil cinema hansika