தளபதி விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள படம் மாஸ்டர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், மாளவிகா மேகனன் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியீடு தள்ளி போயுள்ளது.
உலகளவில் வெளியாகும் இந்த படம், மத்திய இந்தியா, ராஜஸ்தான், டெல்லி / உ.பி., மற்றும் கிழக்கு பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் 500 க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை யுஎஃப்ஒ மூவிஸ் வெளியிட உள்ள நிலையில, தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட திரைப்படத் துறையை புதுப்பிக்க மாஸ்டர் ஆற்றல் தரும் என்றும், மாஸ்டர் போன்ற ஒரு பெரிய பட்ஜெட் திரைப்படம் தியேட்டர்கள் தங்கள் இழப்புகளை திரும்ப பெற உதவும் என்று விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.
மேலும் இந்தி வெளியீடு காரணமாக, தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட திரைகளின் (ஸ்கிரீன்) எண்ணிக்கையைத் தவிர, மாஸ்டர் படத்திற்கு கூடுதலாக 500 திரைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் 100% இருக்கை தொடர்பான உத்தரவை ரத்து செய்யுமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளதால், இந்த படத்தின் வெளியீடு குறித்து பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இதில் வரும் ஜனவரி 13-ந் தேதி, விஜய்யின் மாஸ்டர் வெளியாகும் நிலையில், அடுத்த நாள் (ஜனவரி 14) சிம்புவின் ஈஸ்வரன் படம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணயம், கூறுகையில், விஜய்யின் மாஸ்டருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் தியேட்டர்களில்100% இருக்கைக்கான உத்தரவை அரசாங்கம் ரத்து செய்தால், தமிழ்நாட்டின் அனைத்து திரையரங்குகளிலும் மாஸ்டர் படத்தை திரையிட தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"