Advertisment
Presenting Partner
Desktop GIF

'போய் வா நதியலையே...': 13 வயதில் எம்.ஜி.ஆருக்கு டூயட் பாடிய பிரபல நடிகை; நம்ப முடிகிறதா?

எம்.ஜி.ஆர் படத்தில், இன்று பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை தனது 13 வயதில், ‘போய் வா நதியலையே’ என்று எம்.ஜி.ஆருக்கு டூயட் பாடிய நிகழ்வையும் அந்த நடிகை யார், எந்த படம் என்பதையும் இங்கே பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
mgr tk kala

எம்.ஜி.ஆர் படத்தில், இன்று பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை தனது 13 வயதில், ‘போய் வா நதியலையே’ என்று எம்.ஜி.ஆருக்கு டூயட் பாடிய நிகழ்வையும் அந்த நடிகை யார், எந்த படம் என்பதையும் இங்கே பார்ப்போம்.

சினிமாவிலும் அரசியலிலும் வெற்றிக் கொடி நாட்டியவர், லட்சக் கணக்கான மக்களின் மனங்களை வென்றவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களில் மிகவும் அக்கறையும் கவனமும் எடுத்துக்கொள்வார். 

Advertisment

எம்.ஜி.ஆர் படத்தில்,  இன்று பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை தனது 13 வயதில், ‘போய் வா நதியலையே’ என்று  எம்.ஜி.ஆருக்கு டூயட் பாடிய நிகழ்வையும் அந்த நடிகை யார், எந்த படம் என்பதையும் இங்கே பார்ப்போம்.

எம்.ஜி.ஆர் மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்கு காரணம் அவர் ஒரு நடிகராக இருந்தது மட்டுமல்ல, மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணமும்தான். எம்.ஜி.ஆரின் இதயக்கனி படத்தில் நடிகை சண்முகசுந்தரியும் நடித்துள்ளார். 5 வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி பிறகு, நகைச்சுவை நடிகையாக, குணச்சித்திர நடிகை, வில்லி கதாபாத்திரம் என எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன் உள்ளிட்ட நடிகர்களுடன் 750 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் நடிகை  சண்முகசுந்தரி. 

இதயக்கனி படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, நடிகை சண்முக சுந்தரி எம்.ஜி.ஆரிடம், நீங்கள் ஒரு கல்யாணத்துக்கு செல்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அந்த கல்யாணத்தில்தான் எனது மூத்த மகளும் பாடுகிறாள். நீங்கள் கேட்டுவிட்டு அவள் எப்படி பாடுகிறாள் என்று கூறினாள் நன்றாக இருக்கும் என்று கூறுகிறார். இதற்கு எம்.ஜி.ஆர் நிச்சயமாகக் கேட்கிறேன் என்று கூறுகிறார். அதே போல, கல்யாணத்திற்கு சென்ற எம்.ஜி.ஆர். அங்கே சண்முகசுந்தரியின் மகள் 13 வயது சிறுமி பாடுவதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். 2 பாடல்களைக் கேட்டுவிட்டு உடனடியாகக் கிளம்பிவிடலாம் என்று இருந்தவர், அந்த சிறுமி பாடுவதைக் கேட்டு 2 மணி நேரம் அமர்ந்து கேட்டிருக்கிறார். 

இதையடுத்து, எம்.ஜி.ஆர், நடிகை சண்முகசுந்தரியிடம் உங்கள் மகள் ரொம்ப நல்லா பாடுகிறார், பல்லாண்டு வாழ்க என்று ஒரு படம் போய்க்கொண்டிருக்கிறது. அந்த படத்தில் உங்கள் மகள் பாடுவதற்கு நான் சொன்னேன் என்று தயாரிப்பாளர்களைப் போய் பாருங்கள் என்று கூறுகிறார். எம்.ஜி.ஆர் பாராட்டியதில் மகிழ்ச்சி அடைந்த சண்முகசுந்தரி, தனது மகளை அழைத்துக்கொண்டு பல்லாண்டு வாழ்க படத்தின் தயாரிப்பாளர்களான ஆனந்தவிகடன் எஸ். மணியன், வித்வான் லட்சுமணனைப் போய் சந்திக்கிறார். 

அவர்களுக்கு ஒரு சந்தேகம், என்னவென்றால், 13 வயது சிறுமி எப்படி சினிமாவில் பாடுவாள் என்பதுதான். ஆனால், எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார். என்ன செய்வது சரி பாடுமா பார்க்கலாம் என்று கேட்டனர். சிறுமி பாடியதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டனர். 

இதையடுத்து,  எம்.ஜி.ஆர் - லதா நடித்த பல்லாண்டு வாழ்க படத்தில், கே.வி. மகாதேவன் இசையில், அந்த 13 வயது சிறுமி ‘போய் வா நதியலையே’ என்ற டூயட் பாடலைப் பாடினார். அதற்கு பிறகு, அவர் ஏராளமான பாடலைப் பாடினார். பின்நாளில் நடிகையாகவும் பரிணமித்தார். அந்த 13 வயது சிறுமி வேறு யாருமில்லை அவர்தான் டி.கே. கலா.  இவர் வடிவேலு உடன் காலம் மாறிப் போச்சு, பொங்கலோ பொங்கல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். முதல் பாடலிலேயே டி.கே. கலா மிகவும் பிரபலமானார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment