எந்திரன் 2.0-ல் அக்ஷய்குமார் ஏலியனா? கொடூரக் காக்காவா?

கூரிய பற்கள், நகங்கள், புருவங்கள் என அவரது மொத்த உருவமும் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒப்பனை செய்யப்பட்டுள்ளது.

எந்திரன் இரண்டாம் பாகமான 2.0-ல் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஏலியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனவும், தீய எண்ணம் கொண்ட காக்கையாக நடித்துள்ளார் எனவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இயக்குநர் ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியின் எந்திரன் ‘2.0’ படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றுவருகிறது. அதிக பொருட்செலவில் உருவாகிவரும் இந்தப் படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு இணையான காதாபாதிரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடிக்கிறார். இரண்டு முன்னணி நாயகர்களுடனும் முதன்முறையாக நடிகை எமி ஜாக்சன் திரையை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் ரோபோவாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தனை கட்டுப்பாடுகள் இருந்தாலும், படம் குறித்த புகைப்படங்களும், சில தகவல்களும் கசிந்து கொண்டு தான் இருக்கின்றன. இதில் நடிகர் அக்‌ஷய்குமார் வில்லன் பாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரது கதாப்பாத்திரம், வேடம் குறித்து தான் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கூரிய பற்கள், நகங்கள், புருவங்கள் என அவரது மொத்த உருவமும் அடையாளம் தெரியாத அளவிற்கு, மனித உருவம் அல்லாதது போன்று ஒப்பனை செய்யப்படுள்ளதால் அதுகுறித்த ஆர்வம் வெகுவாக எழுந்துள்ளது.

படத்தில் விஞ்ஞானி பாத்திரத்தில் நடிக்கும் அக்‌ஷய்குமார், தவறாகப் போகும் ஒரு பரிசோதனையின் காரணமாக உருவ சிதைவுக்கு ஆளாகிறார். இந்தப் பாத்திரத்துக்காக அவரது மொத்த உருவமும் ஒப்பனையில் மாற்றப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் கசிந்தது. அதேபோல், இப்படத்தில் ஏலியனாக அக்ஷய்குமார் நடித்துள்ளார் என தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் இப்படம் ரிலீசாகி விடும் என கூறப்பட்ட நிலையில், சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். இதன் ஆடியோ ரிலீஸ் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி துபாயில் மிகப் பிரமாண்டமாக நடத்தப்படும் என லக்கா புரொடக்ஷன்ஸின் ராஜு மகாலிங்கம் உறுதிபடுத்தியுள்ளார். எனினும், படம் குறித்த சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்வதிலும் அவர்கள் தனிக் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அக்ஷய்குமார் ஏலியனாக நடித்துள்ளார் என சிலர் கூறி வரும் நிலையில், தீய எண்ணம் கொண்ட காக்கையாக, மிஸ்டர்.க்ரோ (Mr.Crow) எனும் பெயரில் அவர் நடித்துள்ளார் எனவும் சிலர் கூறி வருகின்றனர். மேலும், அக்ஷய்குமார் ஏலியனாக நடித்திருக்கலாம். அதற்கு ஏற்றாற்போல், டேக்லைனில் “இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக பாலிவுட்லைஃப்.காமிற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிகின்றன.

இத்தகைய பரபரப்பான வதந்திகளிடையே, டாய்லட் ஏக் பிரேம் கதா, பேட்மேன், கோல்ட் என்பன உள்ளிட்ட பல்வேறு படங்களில் அக்ஷய்குமார் படு பிசியாக வேலை பார்த்து வருகிறார்

×Close
×Close