2.0 Full Movie Download: ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு இது நிகழாது என பலரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால், பைரசியை தடுக்க 2.0 தயாரிப்பு நிறுவனமான லைகா பல முன்னேற்பாடுகளை செய்திருந்தது. இதற்கெனவே தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் சுமார் 10 பேரை லைகா தயார் செய்தது. படத்தின் ஒவ்வொரு பிரிண்டிலும் ரகசிய குறிப்புகளை இடம்பெறச் செய்தனர். எனவே திருட்டுத்தனமான படத்தை காபி செய்தாலும் எங்கிருந்து படம் திருடப்பட்டது? என்பதை கண்டறிய முடியும் என கருதப்பட்டது. படத்தை பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுத்தும், லைகா, ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய்குமார் ஆகியோரால் கூட அது சாத்தியமாகாதது திரையுலகினரை சோர்வடைய வைத்திருக்கிறது. எப்படித்தான் தடுக்கப் போகிறார்கள் தமிழ் ராக்கர்ஸை?
தமிழ் ராக்கர்ஸ் பைரசி வெப்சைட், சினிமா உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல திரைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களில் டிஜிட்டல் தரத்துடன் தமிழ் ராக்கர்ஸால் வெளியிடப்படுவது வாடிக்கையாக இருக்கிறது.
ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கு இது நிகழாது என பலரும் எதிர்பார்த்தனர். ஏனென்றால், பைரசியை தடுக்க 2.0 தயாரிப்பு நிறுவனமான லைகா பல முன்னேற்பாடுகளை செய்திருந்தது. இதற்கெனவே தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் சுமார் 10 பேரை லைகா தயார் செய்தது.
மத்திய தகவல் தொடர்பு துறை உயர் அதிகாரிகளையும் லைகா தரப்பில் தொடர்புகொண்டு சில நடவடிக்கைகளை எடுத்தனர். 2.0 தொடர்பான ஆன்லைன் டவுன்லோடுகளுக்கு எந்த லிங்கும் ஓப்பன் ஆகாத அளவுக்கு சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.
2.O Full Movie Download In TamilRockers: 2.0 படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
2.O Full Movie Download, TamilRockers Leaked: ரஜினிகாந்தின் 2.0 vs தமிழ் ராக்கர்ஸ்
தவிர, டிஜிட்டல் மிரட்டலான 2.0 படத்தின் ஒவ்வொரு பிரிண்டிலும் ரகசிய குறிப்புகளை இடம்பெறச் செய்தனர். எனவே திருட்டுத்தனமான படத்தை காபி செய்தாலும் எங்கிருந்து படம் திருடப்பட்டது? என்பதை கண்டறிய முடியும் என கருதப்பட்டது.
இத்தனை கண்காணிப்பையும் மீறி, 2.0 ரிலீஸ் தினமான இன்றே (நவம்பர் 29) ஆன் லைனில் 2.0 படத்தை ரிலீஸ் செய்து தமிழ் ராக்கர்ஸ் அதிர வைத்திருக்கிறது. இதனால் தமிழ்த் திரையுலகம் அதிர்ந்து போயிருக்கிறது.
சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படத்தை பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுத்தும், லைகா, ரஜினிகாந்த், ஷங்கர், அக்ஷய்குமார் ஆகியோரால் கூட அது சாத்தியமாகாதது திரையுலகினரை சோர்வடைய வைத்திருக்கிறது.
எப்படித்தான் தடுக்கப் போகிறார்கள் தமிழ் ராக்கர்ஸை? நடிகர் சங்கப் பொதுச்செயலாளர், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரட்டைப் பதவியில் இருக்கும் விஷால் தனது படங்கள் வெளியாகும் தருணங்களில் மட்டும் தமிழ் ராக்கர்ஸ் பற்றி பேசக்கூடாது. மற்ற தருணங்களிலும் இதற்காக மெனக்கெட வேண்டும்.