2.0 lyric video : ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜேக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தில் பாடல் வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.
Advertisment
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் அக்ஷய் குமார் இருவரும் இணைந்து முதல் முறையாக 2.0 படத்தில் நடித்துள்ளனர். அக்ஷய் குமார் நடிக்கும் முதல் தமிழ் படம் இது.
2.0 lyric video : 2.0 படம் பாடல் வீடியோ :
லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. பிரம்மாண்டமான கிராஃபிக்ஸ் கொண்டு வெளியாகியாக தயாராக இருக்கும் 2.0 படத்தின் பாடல் வரிகள் வீடியோ இன்று காலை 11 மணிக்கு வெளியானது.
Advertisment
Advertisements
எந்திரன் லோகத்து சுந்தரியே :
இந்த பாடலின் வரிகளை வைரமுத்து மகன் கவிஞர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். பாடலை சாஷா திருப்பதி மற்றும் சிட் ஸ்ரீராம் பாடியுள்ளனர்.
இப்பாடல் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். மேலும் 7, 900க்கு மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
ராஜாலி :
இந்த பாடலையும் மதன் கார்க்கியே எழுதியுள்ளார். இப்பாடலை ராப் பாடகர் பிளேஸ், சிட் ஸ்ரீராம் மற்றும் அர்ஜுன் சண்டி பாடியுள்ளனர்.
இப்பாடலும் காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டு ஒரு மணி நேரத்தில் 142,311க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர், 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.