ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான 2.0 படத்தை பார்த்து வெற்றிப்பெற செய்த அனைவருக்கும் நன்றி என இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.
சுமார் 4 வருடங்கள் உழைப்பின் பலனாக இயக்குநர் சங்கரின் 2.0 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டாக்டர் வசீகரன் மற்றும் சிட்டி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ரோபோ சிட்டிக்கு ஜோடியாக இப்படத்தில் ஏமி ஜேக்சன் நடித்துள்ளார்.
இயக்குநர் சங்கர் நன்றி
இப்படத்தில் முதன் முறையாக பாலிவுட் அக்ஷய் குமார் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து நடித்துள்ளனர். அக்ஷய்க்கு இது ரஜினியுடன் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலேயே முதல் படம். இப்படத்தில் ரோபோ சிட்டி எந்த அளவிற்கு பாராட்டுகளை பெற்றதோ அதே போல, பக்ஷிராஜன் கதாப்பாத்திரத்தில் மிரள வைக்கும் அக்ஷய் நடிப்பிற்கும் பாராட்டுகள் குவிந்தது.
வெளியான முதல் நாளிலேயே இப்படம் தமிழகத்தில் மட்டும் 42 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ளது. இத்தகைய வெற்றியை பெற்றுத் தந்த ரசிகர்களுக்கு இப்படத்தின் இயக்குநர் சங்கர் தனது நன்றியை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
November 2018
அதில், “2.0 படத்தை பார்த்து பாராட்டியவர்களுக்கும், இப்படத்தை வெற்றிப்பெற செய்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. மற்றும் இப்படத்தை ஆதரித்து, மதித்த ஊடகங்களுக்கும் படக்குழுவினருக்கும் என் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.