பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் 2.0 படத்தின் பட்ஜெட் என்ன? 600 கோடி என கூறப்படும் தகவல் உண்மையா? என எழும்பிய கேள்விகளுக்கு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் பதிலளித்துள்ளார்.
2.0 Movie ...600 கோடி பட்ஜெட் உண்மையா?
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தை குறித்த பேச்சுத்தான் எந்த பக்கம் திரும்பினாலும். வரும் 29 ஆம் தேதி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நாள் முதல் ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பு பெருமளவில் மேலோங்கியுள்ளது.
படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடியாததே தாமதத்துக்கு காரணம் என்று படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் கடந்த 1 வருடமாக முழு வீச்சில் நடைப்பெற்று இறுதியாக படம் வெளியாவதற்கு தயாராகி விட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களை பிரமிக்க வைத்திருந்தது. சென்னையில் நடைப்பெற்ற படத்தின் டிரைலர் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துக் கொண்டனர்.
Filmmaker Shankar reveals budget of Rajinikanth's 2.0:
இந்த விழாவில் ரஜினி பகிர்ந்துக் கொண்ட அனைத்து தகவல்களும் உற்று நோக்கப்பட்டன. குறிப்பாக படத்தின் செலவு மற்றும் கிராபிக்ஸ் பணிகள் குறித்து ரஜினி பேசியிருந்தார். அப்போது ‘2.0’ படத்திற்கு ரூ.600 கோடி வரை செலவானதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
2.0 படத்தின் படம்பிடிப்பு தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் படத்தின் பட்ஜெட் 300 கோடி என சொல்லப்பட்டது. அதன் பின்பு 600 கோடி என தகவல் வெளியானதும் ரசிகர்கள் அனைவரும் வாயை பிளந்தனர். படத்தின் பிரம்மாண்டம் கண்டிப்பாக பிரமிக்க வைக்கும் என்ற பேச்சுகள் அலை மோதின.
இந்நிலையில், படத்தின் இயக்குனர் சங்கர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில் 2.0 படத்தின் பட்ஜெட் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். அவர் பேசியதாவது, “ 2. 0 படத்தின் பட்ஜெட் என்ன என்பது தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்குத்தான் தெரியும்.
2.0 படத்தைத் தயாரிக்க எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை அவர்கள் முன்பே கணக்கிட்ட பிறகே படத்தை முழுமையாக தயாரிக்க ஒப்புக்கொண்டார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக கிராபிக்ஸ் வேலைகளுக்கு அதிக செலவுகள் ஆனது.
எனக்கு தெரிந்து, படத்திற்கு ரூ.400 முதல் ரூ.450 கோடி செலவாகி இருக்கும். இதனுடன், விளம்பரத்திற்கும் மற்ற பல்வேறு விஷயங்களுக்கு தயாரிப்பாளர்கள் பெரியத் தொகையை செலவிட்டுள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.