Advertisment

சூப்பர் ஸ்டார் பற்றி லேடி சூப்பர் ஸ்டார் என்ன சொல்றாங்க பாருங்க...

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2.0 movie kollywood reaction

2.0 movie kollywood reaction

2.0 movie kollywood reaction : நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. படத்தை பார்த்த கோவுட் பிரபலங்கள் புகழ்ந்தனர்.

Advertisment

சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படம் இந்திலாந்து, அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் நேற்று வெளியானது. இந்தியாவில் மட்டுமே சுமார் 6 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் இப்படத்தை திரையிட்டது.

2.0 movie kollywood reaction : 2.0 படத்திற்கு கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு

முதல் நாளிலேயே சென்னையில் மட்டுமே 2.76 கோடி வசூலை அள்ளி குவித்த இப்படம், தமிழகம் முழுவதும் 42 கோடி வசூலை திரட்டியது. இப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் அனைவரும் புகழ்ந்து தள்ளினர். ரசிகர்கள் மட்டுமின்றி கோலிவுட் பிரபலங்களும் இப்படத்தை பார்த்து இயக்குநர் சங்கர், நடிகர் ரஜினி மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா:

2.0 படத்தை பார்த்த லேடி சூப்பர் ஸ்டார் நயன், “வாவ்... என்ன படம்... எதுவும் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் சங்கர் சார். மீண்டும் ஒரு அற்புத படைப்பு. தலைவர் ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை கட்டாயம் 3டி-யில் பார்க்க வேண்டும்” என்று புகழ்ந்துள்ளார்.

November 2018

இயக்குநர் மற்றும் எழுத்தாளர் சீனு ராமசாமி :

“2.0 படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்து ரசித்தேன். ஒட்டு மொத்த உலகின் கவனத்தையும் இப்படம் திருப்பியுள்ளது. தொழில்நுட்பம் மற்றும் சமூக கருத்தும் இணைந்து ஒரு நல்ல படமாக அமைந்துள்ளது. சங்கருக்கு நன்றி.” என்று இயக்குநர் மற்றும் எழுத்தாளர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

November 2018

இயக்குநர் வெங்கட் பிரபு:

“சங்கர் சாரின் கனவு மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு ஹாட்ஸ் ஆப்! சூப்பர் ஸ்டாரின் ரசிகரான உங்களால் மட்டும் தான் இது போன்ற கனவுகளை நிஜமாக்க முடியும். நம் இந்தியன் சினிமா உலக அளவிற்கு சென்றடைய எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்” என தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்‌ஷன்ஸ் வாழ்த்தியுள்ளார்.

November 2018

நடிகர் விக்ரம் பிரபு : 

“ 2.0 படத்தை நிச்சயம் தியேட்டரில் சென்று பாருங்கள். இது போன்ற ஒரு சிறப்பான படத்தை கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. சூப்பர் படம்.” என்று விக்ரம் பிரபு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

November 2018

தெலுங்கு நடிகர் நானி :

தெலுங்கு நடிகர் நானி இப்படத்தை பார்த்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், “பாக்ஸ் ஆபிஸ் திணறும். நீண்ட நாட்களுக்கு பிறகு குழந்தை போல் உணர்ந்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

November 2018

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment