/tamil-ie/media/media_files/uploads/2018/11/2.0-movie-poster.jpg)
2.0 movie poster, 2.0 படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா புரொடக்ஷன்ஸ் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மற்றும் ஏமி ஜேக்சன் ஆகியோர் நடித்துள்ள 2.0 திரைப்படம் இம்மாதம் 29ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் லைகா புரொடக்ஷன்ஸ் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
2.0 படம் போஸ்டர் ரிலீஸ்
லைகா நிறுவனம் வெளியிட்ட இந்த புதிய போஸ்டரில் எந்திரன் படத்தில் இடம்பெற்ற நல்ல சிட்டி மற்றும் வில்லன் சிட்டி இருவரும் இடம்பெற்றுள்ளனர்.
November 2018Are you ready to witness the army of robots?#2Point0#2Point0FromNov29@rajinikanth@shankarshanmugh@akshaykumar@iamAmyJackson@arrahmanpic.twitter.com/OxteXXmR4j
— Lyca Productions (@LycaProductions)
Are you ready to witness the army of robots?#2Point0#2Point0FromNov29@rajinikanth@shankarshanmugh@akshaykumar@iamAmyJackson@arrahmanpic.twitter.com/OxteXXmR4j
— Lyca Productions (@LycaProductions) November 12, 2018
இந்த போஸ்டரை பார்த்த பிறகு சில ரசிகர்கள், இது என்னடா இரண்டு சிட்டியும் நிற்கிறார்கள். ஒருவேளை இரண்டு சிட்டியும் இருக்கிறார்களா அல்லது நல்ல சிட்டி கெட்ட சிட்டியாக மாறி, வில்லனை அழிக்கிறாரா. இது தான் இப்படத்தின் ட்விஸ்டா என்று பல கேள்விகளை எழுப்புகிறார்கள். டுவிஸ்டு எதுவாக இருந்தாலும் நவம்பர் 29ம் தேதி வரை காத்திருந்தே பார்க்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.