2.0 Movie : தலைவா நீங்க வேற லெவல்... கோலிவுட் பிரபலங்கள் புகழாரம்

2.0 Movie Review :  சூப்பர் ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமார் நேருக்கு நேர் மோதும் 2.0 படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் சங்கரின் 4 ஆண்டு கால உழைப்பின் பலனாக 3டி முறையில் ஷூட்டிங் செய்து வெளியான முதல் இந்திய படம் 2.0 இன்று வெளியானது. சுமார் 600 கோடி வரை செலவழித்து உருவாக்கப்பட்ட இந்த படைப்பு, இன்று உலகம் முழுவதும் வாழும் ரஜினி ரசிகர்களை தன் வசம் இழுத்துள்ளது.

2.0 Movie Review : கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

பூசணி சுற்றிப்போட்டு, சூடம் ஏற்றி, பால் அபிஷேகம், பேனர்களுக்கு மாலை அணிவித்து ரஜினி ரசிகர்கள் இந்த நாளை ஒரு திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் ஒரு புறம், இப்படத்தை புகழ்ந்து தள்ள, சினிமா பிரபலங்கள் மறுபுறம் இப்படத்திற்கு வாழ்த்துக்களை கொட்டித் தீர்க்கின்றனர். இதனால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் 2.0 பேச்சு தான்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் :

2.0 விற்கு பிறகு ரஜினியை வைத்து பேட்ட படம் இயக்கி வருகிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இன்று வெளியான 2.0 படத்தை பார்த்து புகழ்ந்துள்ளார். மேலும் இயக்குநர் சங்கர் மற்றும் ரஜினிகாந்த்-க்கு வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார்.

அதில், “தலைவா…. நீங்க வேற லெவல்… நிஜமாக கொளுத்திட்டீங்க!!! சங்கர் சார் மற்றும் அவரது சூப்பர் குழு பெரிய சாதனை படைத்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே இது ஒரு முக்கிய படம் என்ற இடத்தை பிடித்துள்ளது. அனைவரும் கொண்டாட வேண்டிய படம் இது” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித் :

காலா படத்தில் ரஜினியை வைத்து இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்தில், “ நல்ல விமர்சனங்கள் வந்தடைகிறது. 2.0 ரொம்ப மகிழ்ச்சி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், சங்கர் சார், படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் : 

தனது ட்விட்டர் பதிவில், “இந்த நாள் வந்துவிட்டது. இந்திய சினிமாவிற்கு ஒரு பெருமை தருணம். தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மேஜிசியன் சங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், அக்‌ஷய் குமார் மற்றும் லைகா புரிடக்‌ஷன்ஸ் எல்லாருக்கும் சரவெடி 2.0 வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் கார்த்தி:

“இதோ வந்துவிட்டார் ஜாம்பவான். தலைகளுக்கெல்லாம் தலை” என ரஜினியை குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை நீத்து சந்திரா: 

“தமிழ்நாட்டையும், தமிழ் ரசிகர்கள் மீது அதிக அன்பை நான் வைத்திருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். ரஜினி சார் நான் உங்கள் தீவிர ரசிகை. இன்று காலை 5 மணிக்கு மும்பையில் 2.0 கொண்டாட்டம் இது. படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்று புகழ்ந்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close