இயக்குநர் சங்கரின் பிரம்மாண்ட உருவாக்கத்தில் இம்மாதம் 29ம் ரிலீசுக்கு காத்திருக்கும் 2.0 திரைப்படம் அமெரிக்காவின் பிரபல தியேட்டரிலும் ஃபுல் புக்கிங்கில் உள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0படம் உலகம் முழுவதும் நவம்பர் 20ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு - ஹிந்தியிலும் வெளியாக தயாராக உள்ளது.
2.0 அமெரிக்காவில் ரிலீஸ்
ரஜினி மற்றும் அக்ஷய் குமார் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இப்படம் இந்தியாவில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் ரிலீஸாகிறது. அதே போல் அமெரிக்காவிலும் இப்படம் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகிறது.
நமது ஊரில் பி.வி.ஆர். மற்றும் எஸ்.பி.ஐ போன்ற பிரபலமான நிறுவனம் எப்படி பல இடங்களில் தியேட்டர்கள் வைத்துள்ளதோ அதே போல் அமெரிக்காவில் பிரபல தியேட்டர் நிறுவனமாக உள்ள ஏ.எம்.சி
November 2018
இந்த நிறுவனம் கொண்டுள்ள சுமார் 70க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சுமார் 150 ஸ்கிரீகளில் 2.0 படம் திரையிடப்படுகிறது. இந்த தியேட்டர்களில் டிக்கெட் வாங்குவதற்கு அந்த ஊரில் உள்ள இந்தியர்கள் பலரும் போட்டிப் போட்டு வருகின்றனர். இதை வைத்து பார்க்கும்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாகுகளிலும் இப்படம் வசூலை அள்ளும் என்றே எதிர்பார்க்கலாம்.