2.0 படம் நாளை உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரமிக்க வைக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
எந்த படம் எடுத்தாலும் அதில் ஒரு பிரம்மாண்ட பாடல் அல்லது காட்சியை வைக்கும் இயக்குநர் சங்கர், ரஜினியின் 2.0 படத்தையே பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். சுமார் 500 கோடிக்கும் மேற்பட்ட செலவில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் 4 வருட உழைப்பாகும்.
லைகா புரொடக்ஷன்ஸ் அறிவிப்பு
உலகம் முழுவதும் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக இருக்கும் இப்படம், பல்லாயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு பல லட்சம் லாபத்தை குவித்துள்ளது. இதுவரை ரிலீஸுக்கு முன்பே இப்படம் சுமார் 200 கோடி வரையிலான லாபத்தை பார்த்துள்ளது.
2.0 படத்திற்கு வட இந்தியாவில் கிளம்பி இருக்கும் புதிய சிக்கல்... ஷாருக் கான் vs ரஜினி
இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ச் நிறுவனம், ரஜினி ரசிகர்களுக்கு பிரம்மிக்க வைக்கும் ஒரு தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
November 2018
அதாவது, இப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், இதுவரை உலகம் முழுவதும் ஒரு மில்லியன் டிக்கெட்டுகளை விற்றுத் தீர்த்துள்ளது. இந்த தகவலை ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.