ரஜினிகாந்தின் 2.0 டிரெய்லர் ரிலீஸ், ‘லைவ்’வாக பார்த்தவர்கள் 32 லட்சம் பேர்

2.0 Movie Trailer, Robot 2.0 Movie Trailer: 2.0 திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நடிகர் கமல் ஹாசன் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்தார்

2.0 trailer launch function
2.0 trailer launch function

2.0 Movie Trailer Launch: 2.0 டிரெய்லர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாட்டமாக வந்து சேர்ந்திருக்கிறது.  2.0 டிரெய்லர் வெளியீட்டு விழாவை யு டியூப், ஃபேஸ்புக், டிவிட்டரில் லைவ்வாக பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா? 32 லட்சம் பேர்! தமிழ் சினிமா உலகில் இது புதிய சாதனை!

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது. ரஜினி, ஏமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உட்பட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

Read More: ‘லேட்டா வந்தாலும் கரெக்டா அடிக்கணும்’ – 2.0 டிரெய்லர் லான்ச் விழாவில் ரஜினி பேச்சு

2.0 படத்தின் டிரெய்லர் இன்று மதியம் 12 மணிக்கு வெளியானது. இந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் பிரம்மாண்ட ஏற்பாடு செய்துள்ளனர். இதன் லைவ் அப்டேட் தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் வழங்குகிறது.

2.0 Movie Trailer Launch: 2.0 டிரெய்லர் ரிலீஸ் லைவ்:

4:30 PM: 2.0 ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வாவ்… தலைவா… ரஜினிகாந்த், ஷங்கர் குழுவினர் ஏற்கனவே இந்த டிரெய்லர் மூலமாக நெருப்பை பற்ற வைத்துவிட்டார்கள். என்ன ஒரு அட்டகாசமான டிரெய்லர், நவம்பர் 29 வரை காத்திருக்க முடியாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

4:10 PM : 2.0 டிரெய்லர் வெளியீட்டு விழாவை யு டியூப், ஃபேஸ்புக், டிவிட்டரில் லைவ்வாக பார்த்து ரசித்தவர்கள் எண்ணிக்கை என்ன தெரியுமா? 32 லட்சம் பேர்! தமிழ் சினிமா உலகில் இது புதிய சாதனை!

3:35 PM : இந்தியிலும் 2.0 டிரெய்லர் வெளியாகி சக்கை போடு போடுகிறது. அக்‌ஷய்குமாரின் ட்விட்டர் பக்கத்தில் 3 மணி நேரத்தில் மூன்றாயிரத்திற்கும் அதிகமானோர் இதை ரீ ட்வீட் செய்திருக்கிறார்கள்.


3:20 PM : ட்விட்டரில் #2Point0Trailer தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இந்த ஹேஷ்டேக்கை மட்டும் பயன்படுத்தி இன்று சில மணி நேரங்களில் ஒரு லட்சம் ட்வீட்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் 2.0 டிரெய்லரே ட்விட்டரை அலற வைத்திருக்கிறது.

3:15 PM: 2,o தெலுகு டிரெய்லரும் வெளியிடப்பட்டது. அதற்கும் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.


2:45 PM : ரஜினிகாந்த் பேச்சில், ‘வந்தா ஷுயரா அடிக்கணும்’ என குறிப்பிட்டதை அவரது ரசிகர்கள் அரசியலுடன் பொருத்தி வைரல் ஆக்கி வருகிறார்கள். ட்விட்டரில் அந்த வீடியோ காட்சியை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

2:15 PM : நிகழ்ச்சியில் அக்‌ஷய்குமார் வருகை தந்து மேடையில் மிகுந்த பணிவுடன் அமர்ந்திருந்தார். பல நேரங்களில் கூப்பிய கையுடன் அவர் அமர்ந்திருந்ததை பார்வையாளர்கள் உணர்வுபூர்வமாக பார்த்தனர். அவர் பேசுகையில், ‘என் உடல் என் ஆலயம், ஒவ்வொரு நாளும் நான் அதை அனுபவித்து வருகிறேன். நான் என் வாழ்வில் சன்ரைஸை பார்க்க தவறியது இல்லை. தினமும் நான் நான்கு மணிக்கு எழுந்து எனது பணியை தொடங்குவேன்’ என்றார்.

2:00 PM: அரசியலில் எதிரெதிரே களம் இறங்கவிருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் பரஸ்பரம் இந்த நிகழ்வையொட்டி வாழ்த்து பரிமாறியிருக்கிறார்கள். 2.0 டிரெய்லர் ரிலீஸுக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசனுக்கு பதில் வாழ்த்து கூறும் வகையில் இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘எனது நண்பர் கமல் ஹாசனுடன் ஷங்கர் செய்யும் ‘இந்தியன் -2’ மாபெரும் வெற்றி பெரும். லேட்டா வந்தாலும், இந்த படம் ஜெயிக்கும், சூப்பர் ஹிட் ஆகும்.’ என்றார்.

1:15 PM: சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு அட்வான்ஸ் தீபாவளியாக 2.0 டிரெய்லர் வந்து சேர்ந்திருக்கிறது. டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசுகையில், ‘இந்தப் படம் தாமதமானது பற்றி பலரும் கேட்டனர். லேட்டா வர்றது தப்பில்லை. சரியா வரணும். கரெக்டா அடிச்சுத் தூக்கணும்’ என கூற, ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ‘நான் சொன்னது இந்தப் படம் பற்றி!’ என ரஜினி ‘பஞ்ச்’ வைக்க, ரசிகர்களின் ஆரவாரம் இன்னும் அதிகமானது.

Read More: ‘3Point0’ விதையை தூவிய ஷங்கர் – 2.0 டிரெய்லர் லான்ச் விழா ஹைலைட்ஸ்

1.01 PM: இயக்குநர் சங்கரை புகழ்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசினார். ‘ஏற்கனவே சங்கருடன் இணைந்து படம் நடித்திருப்பதால், அவருடன் இந்த படம் நடிக்க வேண்டுமா என்ற சந்தேகமே எனக்கு வரவில்லை. எனக்கு முழு நம்பிக்கை இருந்தது.’ என ரஜினிகாந்த் பேச்சு.

12.51 PM: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படம் டிரெய்லர் ரிலீஸ் ஆனது. இணையத்தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் இப்படத்தின் டிரெய்லர் வெளியானது.

12.31 PM: பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 2.0 டிரெய்லர் இன்னும் யூடியூப் – ல் வெளியாகதாதால் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் சோகமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

12.14 PM: 2.0 திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு நடிகர் கமல் ஹாசன் காணொளி மூலம் வாழ்த்து தெரிவித்தார்

12.09 PM: ரஜினிகாந்த் தீவிர ரசிகரான பிஜிலி ரமேஷ் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

12.00 PM: நிகழ்ச்சியின் இறுதியில், படக்குழுவினர் அனைவரும் மேடையில் இணைந்தனர். குறிப்பாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மேடையில் தமிழில் பேசி அசத்தினார்.

11.41 AM : 2.0 படம் டீசர் சரியாக காலை 11.40 மணிக்கு சத்யம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. பொதுமக்களுக்காக இப்படம் யூடியூப்-ல் பகல் 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.

11.40 AM : இந்த படத்தில் வேலை செய்தது எனக்கு 8 படத்திற்கு வேலை செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது என்றும் ஏ. ஆர். ரகுமான் கூறினார்.

11.37 AM : 2.0 பிரம்மாண்ட படைப்பின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் தனது அனுபவம் குறித்து பேசினார். அப்போது, ‘பொதுவாக ஒரு சில பாடல்கள் கேட்டு முடிவெடுக்கும் சங்கர், இந்த படத்திற்கு நிறைய நேரம் எடுத்துக்கொண்டார். சுமார் 14 டியூன்கள் கேட்டார். அதன் பிறகு தான் ஒவ்வொரு பாடலும் முடிவு செய்தார்’ என்று கூறினார்.

ar rahman

11.07 AM : ‘2.0 படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு 4டி இசை முறையை அறிமுகப்படுத்தியது பெருமையாக உள்ளது. இந்த முயற்சியை சாத்தியமாக்க உதவியாக இருந்த எனது குழுவிற்கு நன்றி. இது ஒரு வரலாறு நிகழ்வு. இந்த படத்தில் எனக்கும் பங்களிப்பு அளித்த அனைவருக்கும் நன்றி’ என படத்தின் மியூசிக் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி பேசினார்.

11.05 AM : ‘படத்தின் கதையை உருவாக்கியவுடன்,  படம் எப்படி 3டி முறையில் வர வேண்டும் என்று நினைத்தேனோ அதே போல 4டியிலும் வரவேண்டும் என்று நினைத்தேன். அதை நிஜமாக்கிய ரசூல் பூக்குட்டிக்கு நன்றி’ என்று பேசினார் இயக்குநர் சங்கர்.

director shankar

11.03 AM : டிரெய்லர் லான்ச் நிகழ்ச்சியில் இயக்குநர் சங்கர் மேடையில் பேச்சு. படத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து பேசுகிறார்.

10.51 AM : தமிழ் தாய் வாழ்த்து பாடலை தொடர்ந்து, ‘எந்திரன் லோகத்து சுந்தரியே’ பாடல் ஒலிபரப்பானது.

10.46 AM : இப்படத்தில் நடித்துள்ள ஏமி ஜாக்சன் சத்யம் திரையரங்கிற்கு வருகை.

10.41 AM : 2.0 டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடக்கம்.

2.0 official trailer

10:39 AM : டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை சத்யம் தியேட்டருக்கு இயக்குநர் சங்கர், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் வருகை

10:30 AM : இன்று வெளியாகும் 2.0 படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க, ரஜினிகாந்த், ஏ. ஆர். ரகுமான், இயக்குநர் சங்கர் மற்றும் படக்குழுவினர் பலரும் பங்கேற்கின்றனர்.

10:00 AM : சென்னை சத்யம் தியேட்டரில் இன்று வெளியாகும் 2.0 படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 2 0 official trailer release live updates

Next Story
தர்ம பிரபு : ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!Yogi Babu marriage fan video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com