‘லேட்டா வந்தாலும் கரெக்டா அடிக்கணும்’ – 2.0 டிரெய்லர் லான்ச் விழாவில் ரஜினி பேச்சு

பலரும் ‘படம் ரிலீசாகுமா?’ , ‘ரொம்ப லேட்டாகுதே’ , ‘எப்போ இந்தப் படம் தியேட்டருக்கு வரும்?’ என்றெல்லாம் கேட்டார்கள்

Thalaivar 167 photos leaked online
Thalaivar 167 photos leaked online

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் 2.0 படத்தின் டிரெய்லர் லான்ச் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில், ரஜினி, ஷங்கர் முதல் படத்தின் டெக்னீஷியன்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தமிழில் பேச்சைத் தொடங்கிய அக்ஷய் குமார், செலிப்ரிட்டிகளின் கேள்விகளுக்கு பதில் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மான் என்று இந்த இவ்விழாவில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறின.

இறுதியில் ரஜினி மைக்கை பிடித்ததும் அரங்கமே அதிர்ந்தது. முதலில் ஆங்கிலத்தில் பேசிய ரஜினி, பிறகு தமிழில் பேச்சை நிறைவு செய்தார்.

அவர் பேசுகையில், “2.0 படத்திற்கு பெரிதாக புரமோஷன் செய்யவில்லையே என்று பலரும் கேட்டனர். போதும்… தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஏற்கனவே நிறைய செலவு செய்துவிட்டார். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இப்படத்திற்கு புரமோஷன் செய்யவே தேவையில்லை. படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் அவர்களாகவே  புரமோஷன் செய்வார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷங்கர் என்னிடம் வந்து இந்தப் படத்தின் கதையை சொன்னார். பின் எல்லாம் ஓகே ஆகி 3,4 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது. எனக்கு அதிக கனமான உடை கொடுக்கப்பட்டது. அதை அணிந்து நடித்த பின், எனது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. 10 நாள் ஆகியும் உடல்நிலை சரியாகவில்லை.

சரி.. இது வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்து, ஷங்கரை அழைத்து, ‘என்னை இதோடு விட்டுவிடுங்கள். நான் வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்’ என்றேன். அதன்பின், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் என்னிடம் வந்து, ‘ சார்… 4 மாதம் இல்ல… 4 வருஷம் வேணும்னாலும் நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க. ஆனா, நீங்க இல்லாம இந்தப் படம் இல்லை-னு சொன்னார்’. அதன் பின்னரே, நான் மீண்டும் இப்படத்தின் நடிக்கத் தொடங்கினேன். சுபாஷ்கரன் போன்று ஒரு நண்பன் கிடைத்ததற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். நல்ல நட்பு அமைவது மிகவும் கடினம்.

பின் ஷூட்டிங் முடிந்த பிறகு, பலரும் ‘படம் ரிலீசாகுமா?’ , ‘ரொம்ப லேட்டாகுதே’ , ‘எப்போ இந்தப் படம் தியேட்டருக்கு வரும்?’ என்றெல்லாம் கேட்டார்கள்.

லேட்டா வர்ரது முக்கியம் இல்ல…

லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும்

வந்தா அடிக்கணும்!.

ஜனங்க நம்பியாச்சு

வந்தா ஹிட்-னு தெரிஞ்சிடுச்சு

வருவது மட்டும் தான் பாக்கி

என்று ரஜினி சொல்ல, ஒட்டுமொத்த அரங்கமும் விசில் சத்தத்தில் அதிர்ந்தது.

‘நான் படத்தை சொன்னேன்பா’ என்று மீண்டும் ரஜினி சொல்ல, 2.0 படத்தைப் போலவே பிரம்மாண்டமாக முடிந்தது 2.0 டிரெய்லர் லான்ச் விழா.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajinikanth speech in 2 0 trailer launch function

Next Story
‘3Point0’ விதையை தூவிய ஷங்கர் – 2.0 டிரெய்லர் லான்ச் விழா ஹைலைட்ஸ்2.0 trailer launch function special moments
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com