2.0 Teaser : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே ஆகியோர்…
By: WebDesk
Updated: September 13, 2018, 05:00:05 PM
2.0 Teaser
2.0 Teaser : இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் 2.0. எந்திரன் படத்தின் 2ம் பாகமாக இப்படம் உருவாகியுள்ளது. லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், கலாபவன் சஜான், ரியாஸ் கான், சுதன்சூ பாண்டே ஆகியோர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் டீசர் இன்று காலை 9 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த டீசரில், செல்போன்கள் திடீர் மாயமாவதும், ஒட்டு மொத்தமாக ஒரே இடத்தில் குவிக்கப்படுவதுமாகவும் உள்ளது.
02.00 pm: 3.2 மில்லியன்ஸ் Views கடந்துள்ள 2.0 தமிழ் டீசர்!.
01.30 pm: 2.0 படத்தின் டீசர் ஹிந்தியிலும் வெளியாகியுள்ளது. வட இந்தியாவைச் சேர்ந்த பலரும் இதுகுறித்து ட்வீட் செய்து வருகின்றனர். அதில் ஒருவர், “68 வயதான முதியவரால் எப்படி இன்னமும் ரசிகர்களை மயக்கத்தில் வைத்திருக்க முடிகிறது? இவரைப் போன்ற ஒரு மாஸ் நடிகனை ஹாலிவுட் தொடங்கி பாலிவுட் வரை நான் பார்த்ததில்லை. முதியவர் என்றாலும் அவர் ரஜினியாக இருப்பதால் இந்த வரவேற்போ!? என்று பதிவிட்டுள்ளார்.
12.10 pm: பிரபல திரைப்பட வர்த்தக நிபுணர் சுமித் காடெல் கூறுகையில், “இது போன்ற பிரம்மாண்டமான படங்களை நாம் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். இல்லையெனில், நமது வர்த்தகத்தை ஹாலிவுட் கைப்பற்றிவிடும். ஏற்கனவே, அவர்கள் நமது சந்தையை அதிவேகமாக கைப்பற்றி வருகின்றனர். ஒரு பிராந்திய மொழியைச் சேர்ந்த திரைத்துறை இவ்வளவு பிரம்மாண்டமாக படமெடுத்து, மிகப்பெரிய ரிஸ்க் எடுத்திருக்கின்றனர். இதற்காகவே அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாம் பெருமைப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
10.10 am : பலரும் இந்த படத்தை தமிழ் சினிமாவில் இருக்கும் ஹாலிவுட் என்று கூறுகின்றனர்.
9.30 am : ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜேக்சன் ஆகியோர் இணைந்து கலக்கியுள்ள 2.0 டீசர் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது.
9.15 am : தற்போது வெளியாகியுள்ள இந்த டீசர் யூ-டூப் தளத்தை இயக்குநர் சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
9.00 am : இந்த 3டி டீசர் தமிழகம் முழுவதும் உள்ள பல திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. 3டி டீசரை காண ஏராளமான மக்கள் தியேட்டர்களுக்குள் ஆர்வமாக காத்திருந்தனர்.