2.0 ticket booking : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் மற்றும் ஏமி ஜேக்சன் இணைந்து நடித்துள்ள 2.0 படம் இம்மாதம் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்காக முன்பதிவு சேவைகளில் புதிய ஆஃபர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் முதல்முறையாக இணைந்து நடிக்கும் 2.0 படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாகிறது. ரிலீஸுக்கு பிறகு பல கோடிகளை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படம், ரிலீசுக்கு முன்பே வசூலில் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
2.0 ticket booking: 2.0 படம் சாதனை
இந்திய சினிமா வரலாற்றிலேயே 2.0 படம் தான் அதிக அளவிலான பட்ஜெட் கொண்டு தயாரிக்கப்பட்ட படம். சுமார் 550 கோடி செலவில் இயக்கப்பட்டிருக்கும் இப்படம் தான் 3டி முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் முதல் இந்திய படம். இத்தகைய பெருமைகளை தமிழ் திரையுலகிற்கு சேர்த்துள்ள சங்கர் இயக்கியிருக்கும் 2.0.
இந்த படத்திற்கான முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கியுள்ளது. இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்து, அமெரிக்கா என எல்லா நாடுகளிலும் முன்பதிவு தொடங்கியுள்ளது. படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே அமெரிக்காவில் மட்டும் 120 கோடி வசூலை குவித்துள்ளது இப்படம். தமிழ் திரையுலகிலேயே வெளியீட்டிற்கு முன்பு 100கோட்க்கு மேல் குவித்த முதல் படம் இது தான் என்ற பெருமையும் இப்படத்திற்கே சேரும்.
உலகம் முழுவதும் உள்ள சுமார் 10,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. குறிப்பாக இந்தியாவில் மட்டுமே 6,600 முதல் 6,800 தியேட்டர்களில் வெளியாகிறது. வட இந்தியாவில் சுமார் 4000 தியேட்டர்களில், தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேசம் மாநிலங்களில் சுமார் 1250 தியேட்டர்களிலும், தமிழகத்தில் 625 தியேட்டர்களிலும் மற்றும் கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.0 ticket booking : 2.0 திரைப்படம் டிக்கெட் ஆஃபர்
- பிவிஆர் ஆஃபர் : பிவிஆர் தியேட்டரில் வெப்சைட்டில் நீங்கள் புக் செய்தாலும் ஆஃபர்கள் பெறலாம். பேடிஎம் உபயோகித்தால் ரூபாய். 200 கேஷ் பேக் கிடைக்கும். இதே போல ஏர்டெட் பேமெண்ட் பேங்க் பயன்படுத்தினால் ரூபாய் 150 ரூபாயும், ஃபோன் பே செயலி மூலம் புக் செய்தால் 200 ரூபாய் ஆஃபரும் கிடைக்கும்.
- அமேசான் ஆஃபர்: புக் மை ஷோ மற்றும் அமேசான் பே கொண்டு டிக்கெட் புக் செய்தால் அமேசான் உங்களுக்கு ரூபாய் 150 முதல் 255 ரூபாய் வரையில் கேஷ் பேக் சலுகைகளை அளிக்கிறது.
- ஐசிஐசிஐ வங்கி பேடிஎம் ஆஃபர்: ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் ஞாயிறுகிழமையிலும் “ICICINB” என்ற கோட் பயன்படுத்தி ஐசிஐசிஐ வங்கியின் பேடிஎம் மூவீஸ் மூலம் டிக்கெட் புக் செய்தால், 100 ரூபாய் வரையில் கேஷ்பேக் ஆஃபர் அளிக்கப்படும்.