2.0 trailer release date : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 டிரெய்லர் குறித்து படக்குழுவினர் முக்கிய அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளனர்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன். இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் 2.0 எனும் பெயரில் தற்போது உருவாகியுள்ளது.
2.0 trailer release date : 2.0 டிரெய்லர் ரிலீஸ் தேதி
இந்த படத்தை சங்கர் இயக்கியுள்ளார். ரஜினி, ஏமி ஜாக்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் உட்பட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
October 2018
2.0 திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 29ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை இயக்குநர் சங்கர் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் உட்பட அனைத்து படக்குழுவினரும் ‘5வது சக்தி வருகிறது’ என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளனர்.
October 2018
முன்னதாக 2.0 படத்தின் டீசர் வெளியாகியிருந்ததை தொடர்ந்து வரும் 3ம் தேதி டிரெய்லர் வெளியீடு குறித்த செய்தி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.