பாலியல் தொழிலுக்கு இழுக்க முயன்ற நபர்களை பிளான் பண்ணி சிக்க வைத்த சீரியல் நடிகை!

அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் என்னவென்றால் புரோக்கர்கள் இருவருடம் நடிகை ஒருவரும் நேரில் வந்திருந்தார்.

சீரியல் நடிகை ஜெயலட்சுமியை ’ரிலேஷன்ஷிப் டேட்டிங்’ என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுப்படுத்த முயன்ற நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமீப காலமாக சீரியல் நடிகைகள் பாலியல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருவது, சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பிரபல சீரியல் நடிகை ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தன்னை தொழில் அதிபர்கள் மற்றும், அரசியல் பிரமுகர்களுடன் டேட்டிங் செல்ல 30 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் தருவதாக கூறி வாட்ஸ் அப்பில் சிலர் அழைப்பு விடுத்திருப்பதாக கூறினார்.

தன்னை தவறான நோக்கத்துடன் அழைத்த நபர்களை விரைவில் காவல் துறையினர் கைது செய்ய வேண்டும் என்று ஜெயலட்சுமி புகாரில் கோரிக்கை வைத்திருந்தார். நடிகை ஜெயலட்சுமி சீரியல் மட்டுமில்லாமல் பிரிவோம் சந்திப்போம், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

ஜெயலட்சுமியின் இந்த புகார் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரையும் திகைக்க வைத்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து குறித்து தனது முகநூல் பக்கத்திலும் ஜெயலட்சுமி வீடியோ மற்றும் வாட்ஸ் அப் புகைப்படங்களை ஆதரத்துடன் பதிவிட்டிருந்தார்.

அதன் பின்பு இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சென்னை கமிஷனர் தனிப்படைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நடிகை ஜெயலட்சுமி, அவரது வழக்கறிஞர் மற்றும் போலீசார் ஆகியோர் தெளிவாக திட்டமிட்டு மெசேஜ் அனுப்பிய புரோக்கரர்களை கையும் களுவுமாக பிடித்தனர்.
சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள காபி ஷாப்பிற்கு அந்த நபர்களை வர வரவழைத்து, ஜெயலட்சுமி அவரின் வழக்கறிஞர் மூலம் அந்த நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்துவது போல் நடித்து, பணம் கைமாறும் சமயத்தில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து புரோக்கர்களை கைது செய்தனர்.

இதில் மற்றொரு அதிர்ச்சி அளிக்கக்கூடிய தகவல் என்னவென்றால் புரோக்கர்கள் இருவருடம் நடிகை ஒருவரும் நேரில் வந்திருந்தார். அவரை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை ஜெயலட்சுமி, நல்லப்படியாக பேசி அவரையும் சேர்த்து போலீசாரிடம் சிக்க வைத்தார். திரைப்படத்தில் வரும் காட்சிகள் போல் நடந்த இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close