2.0 வெற்றிக்கு விஜய் ரீயாக்‌ஷன் என்ன தெரியுமா?

2.O Box Office Collection, Actor Vijay Reaction: விஜய்யின் அடுத்தப் படம் சர்ச்சைகளை நம்பாமல், மாஸ் ஆக்‌ஷனை நம்பி வரும் என எதிர்பார்ப்போம்.

2.O Tamil Movie Box Office Collection: வெளியே வருகிற செய்திகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் துப்பாக்கி படத்திற்கு பிறகு நடிகர் விஜய்-க்கு பெரிய பாக்ஸ் ஆபீஸ் வசூல் கிடைக்கவில்லை என்பது சினிமாத் துறையை உன்னிப்பாக கவனிப்பவர்களுக்கு தெரியும்.

தலைவா, ஜில்லா. புலி போன்ற படங்கள் விஜய்யின் மார்க்கெட்டை வெகுவாக பதம் பார்த்தவை! கத்தி, தெறி ஆகியன ஓரளவு தாக்குப் பிடித்தவை! மெர்சல், சில பல சர்ச்சைகளுக்கு மத்தியில் தோல்வியை தவிர்த்தது.

இந்தச் சூழலில்தான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சியால் விஜய் சுதாரிக்க வேண்டிய கட்டாயம் உருவானது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தீபாவளி தினத்தன்று வெளியானது.

முருகதாஸ் + சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய் கூட்டணியால் முதல் நாள் பிரம்மாண்ட வசூலோடு, இரண்டாம் நாள் முதல் ஆவ்ரெஜ்ஜாக ட்ராவல் செய்தது. ஆனால் அந்தப் படத்தையொட்டி வெடித்த சர்ச்சைகளை, விஜய்யை எண்டர்டெயினராக பார்த்து பழகிய மக்கள் விரும்பவில்லை. இது வசூலில் தெரிந்தது. விஜய்யும், முருகதாஸும் படம் வெற்றி என மிக்சி வடிவில் கேக் வெட்டினார்களே தவிர, தயாரிப்பு தரப்பு மூச்சு விடவில்லை.

விஜய் என்னும் நடிகரை மக்கள் ரஜினியின் ஒரு தொடர்ச்சியாகவே பார்த்து பழகிவிட்டனர். ஆனால் சமீப நிகழ்வுகள் அவர் அதிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டதாகவே காட்டுகின்றது. இதை அவரின் நலம் விரும்பிகள் அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தச் சுழலில்தான் ரஜினி-ஷங்கர்-லைகா கூட்டணியில் 2.0 வெளியாகி ஓப்பனிங் ரெக்கார்டுகள் அத்தனையையும் முறியடித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது பெயரிடப்படாமல் நடிக்கப்போகும் படத்தில் வழக்கமான ரஜினி ஸ்டைல் விஜய் பார்முலாவை தேர்ந்தெடுக்க இயக்குனர் அட்லீயிடம் கூறியிருக்கிறாராம் விஜய். எனவே விஜய்யின் அடுத்தப் படம் சர்ச்சைகளை நம்பாமல், மாஸ் ஆக்‌ஷனை நம்பி வரும் என எதிர்பார்ப்போம்.

திராவிட ஜீவா

 

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close