Advertisment

ரூ1000 கோடியை தாண்டியதா 2.0 வசூல்... லைகா மவுனம் ஏன்?

2.O Movie Total Collection: ஜப்பானிலும் ரஜினி சூப்பர் ஹீரோவாக இருப்பதால் அங்கும் மொழிமாற்றம் செய்து வெளியிடும் பணி நடந்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2.O Movie Box Office Collection-2.O படம் மொத்த வசூல்

2.O Movie Box Office Collection-2.O படம் மொத்த வசூல்

Rajinikanth Starrer 2.O Movie Total Collection: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தின் வசூல் விவரத்தை முதல் வாரமே வெளிப்படையாக அறிவித்து புரட்சி செய்த லைகா நிறுவனம் இப்போது அமைதி காப்பது ஏன்? படத்தின் வசூல் ரூ 1000 கோடியை தாண்டிவிட்டதாக கூறப்படும் நிலையில், அதை அறிவிப்பதில் என்ன பிரச்னை? என கேள்விகள் முளைக்கின்றன.

Advertisment

ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 2.0 வெளியானது. படம் 4-வது வாரமாக உலகம் முழுவதும் கணிசமான தியேட்டர்களில் ஓடுகிறது. 2.0 வெளியாகி முதல் ஐந்து நாட்களிலேயே 500 கோடி வசூல் என்று தயாரிப்பு நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமா உலகமே இதை ஆச்சர்யமாக பார்த்தது.

இந்தியாவில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமும் 2.0-தான். பாகுபலி, தங்கல் போன்ற படங்கள் இயக்குனர் வேல்யூ மற்றும் படத்தின் கதை உள்ளிட்ட விஷயங்களுக்காக ஓடினாலும், அதன் தயாரிப்பு செலவு ரூ150 கோடிகளுக்குள்தான். மேலும் ஹீரோ வொர்ஷிப் படங்களாக அப்படங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

2.O Movie Box Office Collection-2.0 மொத்த வசூல் 2.O Movie Box Office Collection - சீனாவில் 60,000 ஸ்கிரீன்களில் திரையிட இருக்கிறார்கள்.

2.O Movie Box Office Collection - லைகா நிறுவனம் இப்போது அமைதி காப்பது ஏன்?

2.0 படம் வெற்றிக்கு ஷங்கரின் பிரமாண்டம், அக்‌ஷய்குமார் என கூடுதலாக சில காரணங்களை சொன்னாலும், ரஜினிகாந்த் படம் அது என்பதை மறுக்க முடியாது. ஒருவேளை படம் தோல்வியடைந்திருந்தால் அது இந்திய சினிமாவின் மிகப்பெரிய தோல்வியாக இருந்திருக்கும். அந்த தோல்வியின் கடும் விமர்சனம் ரஜினி வயது மீதே விழுந்திருக்கும்.

2.0 படத்தின் தயாரிப்பு செலவே வெளிப்படையாக 550 கோடி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் வசூல் விபரங்கள் சராசரி மக்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் படி உலகம் முழுவதும் 7400 திரையரங்குகளில் வெளியான படம் முதல் வார முடிவில் 600 கோடியை வசூல் செய்திருக்கிறது.

இரண்டாவது வார தொடக்கத்தில் 3990 தியேட்டர்களாக குறைக்கப்பட்டது. தமிழகம் தவிர்த்த இதர மாநிலங்களில் 2011 தியேட்டர்களில் ஓடியது. தமிழகத்தில் 680 திரையரங்கங்களில் 80% ஹவுஸ்புல் காட்சிகளாகவே காட்சிகள் நகர்ந்தன.

ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் மொத்தம் 750 தியேட்டர்கள், வட மாநிலங்களில் 600 தியேட்டர்கள் என ஓடி இந்தியாவில் மட்டும் இரண்டாவது வார முடிவில் 180 கோடிகளை வசூல் செய்திருக்கிறது. ஓவர்சீஸ் மார்க்கெட்டில் 260 கோடியைத் தாண்டியது.

மூன்றாவது வாரம், வெகுவாக தியேட்டர்கள் குறைக்கப்பட்டன. தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் மற்றும் புதிய படங்களின் வெளியீட்டிற்காக இடம் கொடுக்க வேண்டிய சூழலால் 2.0 வசூல் குறைவானது. ஆனாலும் மூன்றாவது வாரம் 270 தியேட்டர்களில் 70% ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வாரம் முழுவதும் தமிழகத்தில் மட்டும் 39 கோடிகளை சேர்த்திருக்கிறது.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் 26 கோடிகளையும், இதர மாநிலங்களில் இந்தி வெர்ஷன் உட்பட 31 கோடிகளையும் வசூலித்தது. ஓவர்சீஸ் எனப்படும் வெளிநாடுகளில் 17 கோடி வசூலித்தது. 3-வது வாரத்தில் மொத்தம் 100 கோடியை தாண்டியது.

நான்காவது வாரம் புதிய படங்கள் வருகையினாலும், இந்தியில் பெரிய நடிகரான ஷாருக்கானின் ஸீரோ வெளியானதால் வசூல் குறையும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில், ஸீரோ வெற்றி பெறவில்லை. அதேபோல கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு வெளியான படங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியான வரவேற்பை பெறவில்லை. எனவே 2.0 வசூல் தொடர்ந்தது.

பொதுவாக டிசம்பர் மாதம் வெளியான படத்தின் காட்சிகளை குறைத்து, முந்தைய படங்களின் காட்சிகளை அதிகரித்ததாக சினிமாத் துறையில் வரலாறு கிடையாது. முதல் முறையாக 2.0 காட்சிகள் அப்படி அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. 4-வது வாரம் ஹவுஸ்புல் காட்சிகளாகவும் 2.0 ஓடியிருக்கிறது.

ஐந்தாவது வார ஆரம்பத்திற்கு முன்பே படத்தின் வசூல் ரூ1000 கோடியை தொட்டுவிட்டதாக தியேட்டர்கள் சார்ந்த வட்டாரங்களில் கூறுகின்றனர். ஆனால் முதல் வார வசூலை அறிவித்த தயாரிப்பு நிறுவனம், மொத்த வசூலை இதுவரை அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை. இது ஏன்? என்கிற கேள்வி ரஜினி ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

தமிழகத்தில் பொங்கல், மற்ற மாநிலங்களில் சங்கராந்தி பண்டிகை வரை 2.0 ஓடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் 60,000 ஸ்கிரீன்களில் வரும் புத்தாண்டில் திரையிட இருக்கிறார்கள். ஜப்பானிலும் ரஜினி சூப்பர் ஹீரோவாக இருப்பதால் அங்கும் மொழிமாற்றம் செய்து வெளியிடும் பணி நடந்து வருகிறது.

ஒட்டு மொத்த கணக்கையும் பார்த்தால், படத்தின் வசூல் ரூ2000 கோடியை தாண்டி இந்திய சினிமாவின் லைப் டைம் சாதனை படமாக 2.0 இருக்கும் என்கிறார்கள். தலை சுத்துது!

திராவிட ஜீவா

 

Rajinikanth Lyca Productions Shankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment