Rajinikanth's 2.O Movie Review, First Response: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் 2.o திரைப்படம் இன்று (நவம்பர் 29) வெளியானது. மிகப் பெரும் பொருட்செலவில் உலக அளவில் எதிர்பார்ப்புகளை உருவாக்கிய இந்த தமிழ்ப் படம், விமர்சகர்களையே வியப்பில் ஆழ்த்துகிறது. தொழில்நுட்பம் சார்ந்த அதன் பிரமாண்டத்தில் சினிமா உலகம் அதிசயித்து நிற்கிறது.
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் குறித்து விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக சென்சார் போர்டின் உறுப்பினரும், பிரபல பத்திரிகையாளருமான உமெய்ர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் 2.o திரைப்படத்தின் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
2.O Movie Review In Tamil, First Response: 2.0 படம் பற்றிய முதல்கட்ட விமர்சனம்
அதில், "படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் திரையை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளார். பாலிவுட் நடிகர்கள் உட்பட, வேறு எந்தவொரு நடிகரும், ரஜினி செய்த இந்த சாகசத்தை செய்திருக்க முடியாது.
மிக பிரம்மாண்டமான உருவாக்கம், அற்புதமான திரைக்கதை, மெய்சிலிர்க்க வைக்கும் எஃபெக்ட்ஸ், அருமையான ஆக்ஷன் என்று 2.o படம் அட்டகாசமாக உள்ளது.
ரஜினியும், அக்ஷயும் தான் படத்தின் ஜீவன்கள்.
2.o படக்குழு ஒரு தனி உலகத்தையே உருவாக்கியுள்ளது. அதில் படைக்கப்பட்டுள்ள ஆச்சர்யப்பட வைக்கும் பாத்திரங்கள், உங்கள் நினைவுகளில் மிக நீண்ட நாட்களுக்கு நிலைக்கும்.
இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர் என்பதை ஷங்கர் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்து இருக்கிறார். அவருடைய கனவுகள் மட்டும் பிரம்மாண்டமானதாக இல்லை, அவரது படைப்பும் அதைப் போலவே பிரம்மாண்டமாக உள்ளது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், 2.o திரைப்படம் இந்தியாவின் பெருமை. இந்திய சினிமா வரலாற்றில் மிகச்சிறந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் இதுதான்.
பிளாக்பஸ்டர் திரைப்படம் இந்த 2.o" என்று உமெய்ர் சந்து தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.