2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவுத் தேர்வாக ’2018’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, படத்தின் இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றார். இதுதொடர்பாக ஜூட் அந்தனி ஜோசப் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
மலையாளப் படமான ‘2018 – எல்லோரும் ஹீரோ’ இந்த ஆண்டு மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைத் தாண்டி மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. இதில் டொவினோ தாமஸ், தன்வி ராம், குஞ்சாகோ போபன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். மலையாள மல்டிஸ்டாரர் படமான ’2018’ கேரள வெள்ளத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தப் படம் செப்டம்பரில் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவில் பிரதிநிதித்துவப்படுத்த ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தநிலையில் படத்தின் இயக்குனர் ஜூட் அந்தனி ஜோசப், நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி வாங்கினார். இதுதொடர்பாக ஜூட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
முதல் பதிவில், ஜூட் மற்றும் ரஜினிகாந்த் ஒருவரையொருவர் கட்டிபிடித்துக் கொண்டு சிரித்துவாறு நின்றனர். ரஜினிகாந்த் குட்டை கருப்பு குர்தா மற்றும் வேஷ்டி அணிந்த நிலையில், ஜூட் மற்றும் அச்சிடப்பட்ட வெள்ளை சட்டை மற்றும் டெனிம்ஸில் காணப்பட்டார். அந்தப் பதிவில், "என்ன ஒரு அற்புதமான நாள் தொடங்க உள்ளது. உற்சாகத்தை பதிவிடுவதை நிறுத்த முடியாது. மேலும் புகைப்படங்கள் விரைவில் (சிவப்பு இதயம் மற்றும் இதயக் கண்கள் எமோஜிகள்)" என்று பதிவிட்டுள்ளார்.
ஜூட் தனது இரண்டாவது பதிவில், அவரும் இன்னும் சிலரும் ரஜினிகாந்துடன் ஒரு அறையில் பேசிக் கொண்டிருப்பதைப் போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார். ரஜினிகாந்த் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, ஜூட் மற்றும் மற்றவர்கள் ஒரு சோபாவில் அமர்ந்திருந்தனர். அடுத்தப் புகைப்படத்தில் அனைவரும் ஒன்றாக கேமராவுக்கு போஸ் கொடுத்தனர்.
அந்த பதிவில் ஜூட், "தலைவர், 'என்ன படம் ஜூட், எப்படி எடுத்தீர்கள்? அற்புதமான படைப்பு' என்று கூறினார். பின்னர் ஆஸ்கர் பயணத்திற்காக அவரது ஆசீர்வாதங்களை நாடினோம். தலைவர், 'போய் ஆஸ்கர் கொண்டு வா, என் ஆசீர்வாதங்களும் பிரார்த்தனைகளும்' என்று கூறினார். நன்றி கடவுளே, இந்த மறக்க முடியாத வாய்ப்புக்காக. மேலும் இதைச் செய்ததற்காக என் அன்புத் தோழி சௌந்தர்யாவுக்கு நன்றி (சிவப்பு இதயம், இதயக் கண்கள் மற்றும் நன்றி கூறும் எமோஜிகள்)." என்று பதிவிட்டுள்ளார்.
ஜூட் தனது கடைசி பதிவில், ரஜினிகாந்தின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்குவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார். காலில் விழுந்து வணங்கியதும் ரஜினிகாந்த் கைகளை கூப்பி ஆசி வழங்கினார். இதில் "ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.