இந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்கள்:
சூரரைப் போற்று
இந்திய விமானப் படையில் இருந்து ஓய்வு பெற்றவர் கேப்டன் ஜி. ஆர். கோபிநாத். அவரின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து தயாரிக்கப்பட திரைப்படம் சூரரைப் போற்று. இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கி இருந்தார் .
எளிய மக்களும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என தன் வாழ்க்கையின் லட்சியமாக எண்ணி போராடுகிறார், பெரு முதலாளிகளையும் எதிர்க்கிறார் படத்தின் நாயகன் சூர்யா. இறுதியில் வெற்றியும் காண்கிறார். விமானப் படையில் பணிபுரிந்தவராக வரும் அவர் , எல்லா காட்சிகளிலும் நம்மை மிரட்டுகிறார். அனைத்து கதை மாந்தர்களும் நன்றாகவே நடித்திருந்தனர்.
க பெ / ரணசிங்கம்
விஜய் சேதுபதி படம் என நினைத்து படம் பார்க்க சென்றவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். வெளிநாட்டில் உயிரிழந்த தன் கணவனின் உடலை மீட்க போராடுகிறார். அதற்காக அரசு ஊடகங்கள் அனைத்தையுமே எதிர்க்கிறார். இறுதியில் பிரதமரிடம் முறையிட்டு கணவனின் உடலை பெறுகிறார்.
சைக்கோ
இந்த திரைப்படத்தை இயக்குனர் மிஸ்கின் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் என அழைக்கப்படும் இயக்குனர் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக எடுத்தாக கூறியிருந்தார். மிகவும் பயமுறுத்தும் வகையில் அமையாமல் இருந்த போதிலும், தொடர் கொலைகள் மூலம் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்து இருந்தார். தொடர் கொலைகளை செய்யும் கொலைகாரனுக்கு ஏதுவாக அவன் செய்ததை இறுதியில் நியாயப்படுத்தியும் இருந்தார்.
செத்தும் ஆயிரம் பொன்
கிராமங்களில் பாடப்படும் ஒப்பாரி பாடல்களை பற்றியும் அதன் பின்னணி பற்றியும் மிக தெளிவாகவே கூறியுள்ளனர். இறப்புக்கு பின் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை கிராம மக்கள் மூலமாகவே காட்சி படுத்தி உள்ளனர்.
காவல்துறை உங்கள் நண்பன்
அதிகாரத்தை எவ்வாறெல்லாம் காவல் துறை தவறுதலாக பயன்படுத்துகிறது என பல காட்சிகளை இந்த திரைப்படம் கோடிட்டு காட்டுகிறது. விசாரணை படத்திற்கு பின் இந்த திரைப்படத்தை பரிந்துரை செயும் அளவிற்கு காட்சிகளை அமைத்து இருந்தனர்.
பாவக்ககதைகள்
நெட் ஃப்லிக்ஸ் தயாரித்து வெளியிட்டு இருக்கும் இந்த நான்கு குறும்படங்களும் நான்கு இயக்குனர்கள் இயக்கியவை. சமூகத்தில் அந்தஸ்த்து தான் முக்கியம், குடும்பம் முக்கியமில்லை என நினைப்பவர்கக்கு எதிராக சாட்டையை சுழற்றியுள்ளது. சாதி ஆணவக் கொலைகளுக்கான அடிப்படையையும், அதனை தொடர்ந்து குடும்பத்தில் நிகழும் காட்சிகளை மிக தெளிவாகவே இயக்குனர்கள் காட்சிப்படுத்தி இருந்தனர்.
மூக்குத்தி அம்மன்
நிகழ்கால நிகழ்வுகளுடன் மூக்குத்தி அம்மன் என்ற தெய்வத்தையும் இணைத்து திரைக்கதை அமைத்து இருந்தனர். போலி சாமியார்களையும், நிகழ்காலத்தில் அவர்களின் ஆதிக்கத்தையும் தெளிவாகவே காட்சிப்படுத்தி இருந்தனர். படத்தில் வரும் பல நகைச்சுவைகள் ட்ரெண்டிங் ஆனது. இந்தப் படம் குடும்பத்தினருடன் இனணந்து கலகலவென சிரித்து மகிழும் வகையில் இருந்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.