எஸ்.ஜே சூர்யா, அனிருத், மணிகண்டன்... கலைமாமணி விருது பெறு பிரபலங்கள் பட்டியல்!

தமிழக அரசு 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மணிகண்டன், விக்ரம் பிரபு, நடிகை சாய் பல்லவி மற்றும் இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

தமிழக அரசு 2021, 2022, 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மணிகண்டன், விக்ரம் பிரபு, நடிகை சாய் பல்லவி மற்றும் இயக்குநர் லிங்குசாமி உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர்.

author-image
WebDesk
New Update
download

தமிழக அரசு 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை வெளியிட்டுள்ளது. இயல், இசை மற்றும் நாடகம் போன்ற கலைப்பிரிவுகளில் இந்த விருது வழக்கமாக வழங்கப்படுகிறது. அதற்கேற்ப கடந்த மூன்று ஆண்டுகளுக்கான விருதுகள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, மணிகண்டன், விக்ரம் பிரபு, நடிகை சாய் பல்லவி, இயக்குநர் லிங்குசாமி, சண்டை கலை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன், பாடகி ஸ்வேதா மோகன், பாடலாசிரியர் விவேகா உள்ளிட்டோர்களுக்கு இந்த ஆண்டின் கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது. இந்த விருதுகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் விருது முனைவர் ந. முருகேச பாண்டியனுக்கு வழங்கப்பட உள்ளது. திரைப்பட நடனக் கலைஞர் சந்தோஷ்குமார் (சாண்டி) விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸுக்கு எம். எஸ். சுப்புலட்சுமி விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குணச்சித்திர நடிகர் ஜார்ஜ் மரியான் 2023ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்குவதுடன், பாரதியார், எம்.எஸ். சுப்புலட்சுமி பாலசரசுவதி ஆகியோர் பெயர்களில் அகில இந்திய விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், சிறந்த கலை நிறுவனத்திற்கு கேடயமும், சிறந்த நாடகக்குழுவிற்கு சுழற்கேடயமும் வழங்கப்படுகின்றன.

Advertisment
Advertisements

2021, 2022 மற்றும் 2023

தற்போது 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இந்த விருதுக்காக பெறப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் பரிசீலனை செய்து, இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைப்படம், சின்னத்திரை, இசை நாடகம், கிராமியக் கலைகள் மற்றும் பிற கலைப் பிரிவுகள் என ஒவ்வொரு பிரிவாக பிரித்துப் பார்த்தது. பின்னர், தகுதியான கலைஞர்களை தேர்வுசெய்ய ஒவ்வொரு கலைப் பிரிவிற்கும் தனித் தனியாக வல்லுநர் குழுக்கள் அமைக்கப்பட்டன.

மேற்கண்ட வல்லுநர் குழுக்கள் தேர்ந்தெடுத்த தகுதியான கலைஞர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தில் அனுமதி பெற்றதுடன், அதன் அடிப்படையில் எடுத்த தீர்மானம் மற்றும் பரிந்துரைகளை ஏற்று, 2021, 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதைப் பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையின் மூலம் அறிவித்துள்ளது.

கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் தங்கம் கொண்ட பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படுகின்றன. அதோடு, பாரதியார், எம். எஸ். சுப்புலட்சுமி மற்றும் பாலசரசுவதி ஆகியோரின் பெயர்களில் வழங்கப்படும் அகில இந்திய அளவிலான சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளும் அரசால் கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு விருது கலை வித்தகர்கள் பெயர்

தமிழ்நாடு அரசு 2021, 2022, 2023 ஆண்டுகளுக்கான கலைமாமணி மற்றும் அகில இந்திய விருதுகளையும் சிறந்த கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவுக்கான விருதுகளையும் அறிவித்து வழங்கவுள்ளது. கலைமாமணி விருதுகள் பெற்றவர்களுக்கு 3 சவரன் தங்கப் பதக்கமும் விருது பட்டயமும், அகில இந்திய விருதுகளுக்கு ரூ.1 இலட்சம் பரிசும் 3 சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படும். சிறந்த கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழுவிற்கு கேடயம் மற்றும் சுழற் கேடயம் விருதுகளுடன் ஒவ்வொருக்கும் ரூ.1 இலட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வழங்கப்படும்.

2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்

  • இயல்: திரு. க. திருநாவுக்கரசு, எழுத்தாளர்
  • கவிஞர்: நெல்லை ஜெயந்தா, இயற்றமிழ்க் கவிஞர்
  • எஸ். சந்திரசேகர் (எ) தங்கம்பட்டர், சமயச் சொற்பொழிவாளர்
  • இசை: பாபநாசம் திரு. அசோக் ரமணி, குரலிசை
  • பா. சற்குருநாதன், ஓதுவார், திருமுறைதேவார இசை
  • டி. ஏ. எஸ். தக்கேசி, தமிழிசைப் பாடகர்
  • திருச்சூர்: திரு. சி. நரேந்திரன், மிருதங்கம்
  • என். நரசிம்மன், கோட்டு வாத்தியம்
  • கோ. பில்லப்பன், நாதசுர ஆசிரியர்
  • திருக்காட்டுப்பள்ளி: திரு. டி. ஜே. சுப்பிரமணியன், நாதசுரம்
  • கல்யாணபுரம்: திரு. ஜி. சீனிவாசன், நாதசுரம்
  • திருவல்லிக்கேணி: திரு. கே. சேகர், தவில்
  • நாட்டியம்: வழுவூர் திரு. எஸ். பழனியப்பன், பரதநாட்டிய ஆசிரியர்
  • பிரியா கார்த்திகேயன், பரதநாட்டியம்
  • நாடகம்: திரு. பூச்சி எஸ். முருகன், நாடக நடிகர்
  • காரைக்குடி: திரு. நாராயணன், நாடக இயக்குநர்
  • என். ஏ. அலெக்ஸ், ஆர்மோனியம்
  • திரைப்படம்: திரு. எஸ். ஜே. சூர்யா, திரைப்பட நடிகர்
  • செல்வி சாய் பல்லவி, திரைப்பட நடிகை
  • லிங்குசாமி, திரைப்பட இயக்குநர்
  • ஜே. கே. (எ) எம். ஜெயகுமார், திரைப்பட அரங்க அமைப்பாளர்
  • சூப்பர் சுப்பராயன், திரைப்பட சண்டைப் பயிற்சியாளர்
  • சின்னத்திரை: திரு. பி. கே. கமலேஷ், சின்னத்திரை நடிகர்
  • இசை நாடகம்: திரு. எம். பி. விசுவநாதன், இசை நாடக நடிகர்
  • கிராமியக் கலைகள்: திரு. வீர சங்கர், கிராமியப் பாடகர்
  • நா. காமாட்சி, பொய்க்கால் குதிரை ஆட்டம்
  • எம். முனுசாமி, பெரியமேளம்
  • பி. மருங்கன், நையாண்டிமேள நாதஸ்வரம்
  • கே. கே. சி. பாலு, வள்ளி ஒயில்கும்மி
  • இதர கலைப் பிரிவுகள்: திரு. வே. ஜீவானந்தன், ஓவியர்

2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்

  • இயல்: திருமதி சாந்தகுமாரி சிவகடாட்சம், எழுத்தாளர்
  • முனைவர் தி. மு. அப்துல்காதர், இலக்கியப் பேச்சாளர்
  • சு. முத்துகணேசன், சமயச் சொற்பொழிவாளர்
  • இசை: ஜெயஸ்ரீ வைத்தியநாதன், குரலிசை
  • சாரதா ராகவ், குரலிசை
  • பகலா ராமதாஸ், வயலின்
  • நெய்வேலி: திரு. ஆர். நாராயணன், மிருதங்கம்
  • செம்பனார்கோயில்: திரு. எஸ். ஜி. ஆர். எஸ். மோகன்தாஸ், நாதசுரம்
  • சித்துக்காடு: திரு. டி. ஜி. முருகவேல், நாதசுரம்
  • திருக்கடையூர்: திரு. டி. ஜி. பாபு, தவில்
  • திருமதி சுசித்ரா பாலசுப்பிரமணியன், கதா காலட்சேபம்
  • நாட்டியம்: திருமதி அமுதா தண்டபாணி, பரதநாட்டிய ஆசிரியர்
  • திரு. வி. சுப்பிரமணிய பாகவதர், பாகவத மேளா
  • சுவாமிமலை: திரு. கே. சுரேஷ், பரதநாட்டியக் குரலிசை
  • நாடகம்: திரு. பொன் சுந்தரேசன், நாடக நடிகர்
  • கவிஞர்: இரா. நன்மாறன், நாடக இயக்குநர்
  • சோலை ராஜேந்திரன், நாடகத் தயாரிப்பாளர்
  • திரைப்படம்: திரு. விக்ரம் பிரபு, திரைப்பட நடிகர்
  • ஜெயா, வி. சி. குகநாதன், திரைப்பட நடிகை
  • விவேகா, திரைப்பட பாடலாசிரியர்
  • டைமண்ட் பாபு, திரைப்பட செய்தித் தொடர்பாளர்
  • டி. லட்சுமிகாந்தன், திரைப்பட புகைப்படக் கலைஞர்
  • சின்னத்திரை: திருமதி மெட்டிஒலி காயத்ரி, சின்னத்திரை நடிகை
  • இசை நாடகம்: திரு. என். சத்தியராஜ், இசை நாடக நடிகர்
  • கிராமியக் கலைகள்: திரு ந. ரஞ்சிதவேல், பொம்மு தேவராட்டம்
  • மு. கலைவாணன், பொம்மலாட்டம்
  • எம். எஸ். சி. ராதாரவி, தப்பாட்டம்
  • கே. பாலு, நையாண்டிமேள நாதஸ்வரம்
  • இதர கலைப் பிரிவுகள்: திரு ஆர். சாமிநாதன், பண்பாட்டுக் கலை பரப்புனர்
  • கே. லோகநாதன்

2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல்

  • இயல் கவிஞர்: கே. ஜீவபாரதி, இயற்றமிழ்க் கவிஞர்
  • இசை: திரு. ஆர். காசியப் மகேஷ், குரலிசை
  • ஹேமலதாமணி, வீணை
  • வே. பிரபு, கிளாரினெட்
  • பி. பி. ரவிச்சந்திரன், நாதசுரம்
  • ஞான நடராஜன், நாதசுரம்
  • எம். எஸ். ஆர். பரமேஸ்வரன், நாதசுரம்
  • ராமஜெயம் பாரதி, தவில்
  • பா. ராதாகிருஷ்ணன், தவில்
  • நாட்டியம்: க. தனசுந்தரி, பரதநாட்டிய ஆசிரியர்
  • வி. ஜெயப்பிரியா, குச்சுப்பிடி நாட்டியம்
  • கே. ஹரிபிரசாத், பரதநாட்டியக் குரலிசை
  • நாடகம்: திரு. என். ஜோதிகண்ணன், பழம்பெரும் நாடக நடிகர்
  • வானதிகதிர் (எ) பெ. கதிர்வேல், நாடக நடிகர்
  • வி. கே. தேவநாதன், விழிப்புணர்வு நாடக நடிகர்
  • திரைப்படம்: திரு. கே. மணிகண்டன், திரைப்பட நடிகர்
  • எம். ஜார்ஜ் மரியான், திரைப்பட குணச்சித்திர நடிகர்
  • அனிருத், திரைப்பட இசையமைப்பாளர்
  • ஸ்வேதா மோகன், திரைப்பட பின்னணிப் பாடகி
  • சாண்டி (எ) அ. சந்தோஷ்குமார், திரைப்பட நடன இயக்குநர்
  • நிகில் முருகன், திரைப்பட செய்தித் தொடர்பாளர்
  • சின்னத்திரை: திரு. என். பி. உமாசங்கர்பாபு, சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்
  • அழகன் தமிழ்மணி, சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்
  • இசை நாடகம்: திரு. ஏ. ஆர். ஏ. கண்ணன், இசை நாடக நடிகர்
  • ஆர். எம். தமிழ்ச்செல்வி, இசை நாடக நடிகை
  • கிராமியக் கலைகள்: திரு கே. எம். ராமநாதன், தெருக்கூத்து
  • டி. ஜெகநாதன், வில்லுப்பாட்டு
  • கலைகள்: திரு சி. மகாமணி, நையாண்டிமேள, தவில்
  • திருமதி ஆ. சந்திரபுஷ்பம், கிராமியப் பாடல் ஆய்வாளர்
  • இதர கலைப் பிரிவுகள்: திரு. சு. தீனதயாளன், சிற்பி

தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகளை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் அரங்கில் வழங்கி சிறப்பிப்பார். விருதாளர்களுக்கு 3 சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படும்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: